சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பாதகாப்பு | செருப்பு , அரணம் ; திருவடியாகிய பாதுகாவல் . |
| பாதகி | பெரும்பாவஞ் செய்தவள் . |
| பாதகேசம் | காண்க : பாதாதிகேசம் . |
| பாதங்கம் | பொடி . |
| பாதச்சனி | வாக்குத்தானத்துச் சனி . |
| பாதசரம் | பெண்கள் காலணிவகை . |
| பாதசாரம் | கோள்கள் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் சஞ்சாரம் . |
| பாதசாரி | காலாள் ; காலால் நடப்போன் . |
| பாதசாலகம் | காலணிவகை . |
| பாதசாலம் | காலணிவகை . |
| பாதசுத்தி | கால்கழுவுகை . |
| பாதசேவை | தொண்டுபுரிகை . |
| பாததட்சிணை | காண்க : பாதகாணிக்கை . |
| பாததரிசனம் | பெரியோரை வணங்குதல் . |
| பாததாடனம் | கால்உதை . |
| பாததீர்த்தம் | பெரியோர் திருவடிகளைக் கழுவிய நீர் . |
| பாததூளி | பெரியோரின் அடிப்பொடி . |
| பாதப்படி | அடிவைக்கும் இடம் . |
| பாதபங்கயம் | காண்க : பாதகமலம் . |
| பாதபம் | காண்க : பாதவம் . |
| பாதபரிசம் | திருவடி படுகை ; சீதாங்கபாடாணம் . |
| பாதபற்பு | காண்க : பாதகமலம் . |
| பாதபீடிகை | புத்தரது திருவடி அடையாளம் கொண்ட மேடை . |
| பாதபூசை | பெரியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுதல் . |
| பாதம் | கால் ; பீடம் முதலியவற்றைத் தாங்கும் கால் ; அடிச்சுவடு ; காலடியின் அளவு ; செய்யுளடி ; மலை , மரம் முதலியவற்றின் அடியிடம் ; காற்பங்கு ; வட்டத்தின் காற்பகுதி ; நட்சத்திர பாதம் ; சமூகம் ; நீர் ; கடவுள் அருள் ; இராகு ; கிரகபாதம் ; சைவசமய மார்க்கம் ; குறைப்பேறு ; யோகவகை . |
| பாதமயக்கு | அடிமயக்கு ; வேறு புலவர் பாடிய மூன்றடிகளோடு தாம் ஓரடியைப் பாடி முடிக்கும் மிறைக்கவிவகை . |
| பாதமுத்தி | பரகதி ; திருவடிதீட்சை . |
| பாதமுத்திரை | ஆசாரியனது திருவடிச் சுவடு . |
| பாதமூலம் | குதிகால் ; முத்தித் திருவடி . |
| பாதரசம் | இதள் ; இரசம் . |
| பாதரட்சை | செருப்பு , அரணம் . |
| பாதரதம் | காண்க : பாதரசம் . |
| பாதரோகணம் | அரசமரம் . |
| பாதலத்தம்பி | நிலக்காளான் . |
| பாதலத்தாம்பி | நிலக்காளான் . |
| பாதலம் | பாதாள உலகம் , மூவுலகத்துள் கீழுலகம் ; நரகம் ; சூரியன் நிற்கும் இராசிக்கு நான்காம் இராசி ; மறைவிடம் . |
| பாதவக்காணி | கோயில் வேலைக்காரர்களுக்குரிய படித்தர நிலம் . |
| பாதவந்தனிகம் | தம்மை வணங்கும்போது மணப்பெண்ணுக்குப் பெரியோர்கள் கொடுக்கும் சீர்ப்பொருள் . |
| பாதவம் | மரம் ; தோப்பு ; மலை . |
| பாதன் | சூரியன் ; தீ . |
| பாதனம் | வணக்கம் ; கீழ்முகமாகச் செய்கை . |
| பாதாக்கிரம் | காற்பெருவிரல் நுனி . |
| பாதாங்குட்டம் | காற்பெருவிரல் . |
| பாதாதி | காலாட்படை . |
| பாதாதிகேசம் | அடிமுதல் முடிவரை ; ஒரு சிற்றிலக்கியவகை . |
| பாதாரவிந்தம் | காண்க : பாதகமலம் . |
| பாதாளக்கரண்டி | கிணற்றில் விழுந்த பொருளை எடுக்கும் கருவி . |
| பாதாளக்கொலுசு | காண்க : பாதாளக்கரண்டி . |
| பாதாளகங்கை | பூமியின்கீழ் ஓடும் நீரோட்டம் . |
| பாதாளத்தார் | கீழ் உலகத்தார் . |
| பாதாளம் | கீழ் உலகம் ; நரகம் ; சூரியனுக்கு நான்காமிடம் ; மறைவிடம் ; பிலம் . |
| பாதாளமூலி | நெருஞ்சில் ; ஆடுதின்னாப்பாளை ; ஒரு கறையான்வகை ; சீந்திற்கொடி ; கொடிவகை . |
| பாதாளலோகம் | கீழுலகம் ; கீழேழுலகினுள் ஒன்று . |
| பாதாளவஞ்சனம் | பூமிக்குள் உள்ள பொருளைத் தெளியக் காண உதவுவது . |
| பாதாளவாகினி | காண்க : பாதாளகங்கை . |
| பாதாளி | மிகச் சிக்கலானது ; தொல்லை கொடுப்பவள் . |
| பாதி | இரண்டு சமபாகமாகப் பகுக்கப்பட்ட பொருட்பகுதி ; நடு ; பகுக்கை . |
| பாதிடுதல் | பங்கிடுதல் ; பாதுகாத்தல் ; நெருக்குதல் . |
| பாதித்தல் | வருத்துதல் ; தடைசெய்தல் ; இரண்டு சமபாகங்களாகப் பிரித்தல் . |
| பாதிப்பேச்சு | அரைகுறைப் பேச்சு ; பேச்சுக்கு மத்தியில் . |
| பாதிமதி | பிறைச்சந்திரன் . |
| பாதிமம் | நாலில் ஒன்று . |
| பாதிரம் | சந்தனம் ; மலையாத்திமரம் . |
| பாதிராத்திரி | நள்ளிரவு . |
| பாதிரி | சிவப்புப் பூமரவகை ; வெள்ளைப்பூவுடைய மரவகை ; மூங்கில் ; பாதிரிமரம் ; பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை ; கிறித்தவ குருமார் . |
| பாதிரியம் | செவிடு . |
| பாதிவாரம் | நிலக்கிழாரும் குடியானவனும் விளைச்சலைப் பாதிப்பாதியாகப் பிரித்துக் கொள்ளும் முறை . |
| பாதீடு | பங்கிடுதல் ; அரசன் தான் வென்று கொண்ட ஆநிரையை வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தலாகிய வெட்சித்துறை ; பாதுகாக்கை ; செறிக்கை . |
| பாது | பங்கு ; கதிரவன் ; காவல் . |
| பாதுகம் | காண்க : பாதுகை . |
| பாதுகாத்தல் | காப்பாற்றுதல் ; வாராமல் தடுத்தல் ; ஓம்புதல் . |
| பாதுகாப்பு | ஆதரித்தல் ; காப்பாற்றுதல் . |
| பாதுகாவல் | ஆதரித்தல் ; காப்பாற்றுதல் . |
| பாதுகை | செருப்பு ; சிறுசெருப்படைப்பூடு . |
| பாதுகைக்கொட்டை | மிதியடியின் குமிழ் . |
|
|
|