சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பான்மயக்கம் | ஒரு பாற்குரிய சொல் வேறொரு பாற்குரிய சொல்லுடன் வழங்கல் . |
| பான்மாறுதல் | பால்குடி மறத்தல் ; வருந்துதல் ; சோம்பலாயிருத்தல் . |
| பான்முல்லை | தலைவியைக் கூடிய தலைவன் தங்களிருவரையும் கூட்டிவைத்த நல்வினையைப் புகழ்ந்து கூறும் துறை . |
| பான்மை | குணம் ; தகுதி ; பகுதி ; முறைமை ; சிறப்பு ; நல்வினைப் பயன் . |
| பானக்கம் | சருக்கரை ; ஏலம் முதலியன கலந்த குடிநீர்வகை ; நீர்மோர் ; குடிக்கை . |
| பானகம் | சருக்கரை ; ஏலம் முதலியன கலந்த குடிநீர்வகை ; நீர்மோர் ; குடிக்கை . |
| பானசம் | பலாச்சுளையிலிருந்து வடித்த கள் . |
| பானசியர் | சமையற்காரர் . |
| பானண்டு | காண்க : பால்நண்டு . |
| பானபரம் | குடிக்கை . |
| பானபாத்திரம் | கிண்ணம் . |
| பானம் | குடிக்கை ; குடித்தற்கு நீர் அளிக்கை ; கள் ; பருகும் உணவு . |
| பானல் | மருதநிலம் ; வயல் ; காண்க : கருங்குவளை , கடல் ; கள் ; குதிரை ; வெற்றிலை . |
| பானாள் | நள்ளிரவு . |
| பானி | பருகுவோன் ; படை . |
| பானித்தல் | குடித்தல் . |
| பானியம் | நீர் ; பருகும் உணவு . |
| பானீயம் | நீர் ; பருகும் உணவு . |
| பானு | சூரியன் ; ஒளி ; அழகு ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; தலைவன் ; அரசன் . |
| பானுபலை | வாழை . |
| பானுமைந்தன் | கன்னன் ; சனி ; சுக்கிரீவன் ; யமன் . |
| பானுவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
| பானை | மண்மிடா ; ஓர் அளவு . |
| பானைக்குடுவை | சிறுபானை . |
| பானைமூடி | பானையை மூட உதவும் கலன் . |
|
|