சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பிடிகை | வண்டிவகை . |
பிடிகொடுத்தல் | தான் பிடிபடும்படி நிற்றல் ; பேச்சு முதலியவற்றில் அகப்படுதல் ; இடித்தல் . |
பிடிச்சராவி | கம்மாளர் கருவியுள் ஒன்று . |
பிடித்தபிடி | விடாப்பிடி ; பிடிவாதமான கொள்கை ; பிடிவாதகுணம் . |
பிடித்தம் | கழிவு ; சிக்கனம் ; மனப்பொருத்தம் ; விருப்பம் . |
பிடித்தல் | கைப்பற்றுதல் ; வயப்படுத்துதல் ; அகப்படுத்துதல் ; கட்டுதல் ; புகலடைதல் ; அடைதல் ; உட்கொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் ; தாங்குதல் ; நிறுத்திக்கொள்ளுதல் ; நிழற்படமெடுத்தல் ; அபிநயம் முதலியன செய்து காட்டுதல் ; பற்றிக்கொள்ளுதல் ; தெரிதல் ; விலைக்கு மொத்தமாகக் கொள்ளுதல் ; பொருத்துதல் ; உறுதியாகக் கொள்ளுதல் ; குறிக்கொள்ளுதல் ; சுளுக்குதல் ; விதையடித்தல் ; அழுத்தித்தடவுதல் ; மூடிய கையளவு கொள்ளுதல் ; ஒட்டிக்கொள்ளுதல் ; பிரியமாதல் ; ஏற்றதாதல் ; செலவாதல் ; நிகழ்தல் ; அடங்குதல் . |
பிடித்தாடி | பலகறை . |
பிடித்து | கைப்பிடிப்பொருள் ; தொடங்கி . |
பிடித்துக்கொள்ளுதல் | சுளுக்குதல் . |
பிடிதம் | பிச்சை . |
பிடிநாள் | நல்ல நாள் . |
பிடிப்பிச்சை | பிடியளவிடும் பிச்சை . |
பிடிப்பிட்டு | சிற்றுண்டிவகை . |
பிடிப்பித்தல் | விதையடித்தல் , காயடித்தல் . |
பிடிப்பு | பற்றுகை ; ஒட்டுகை ; வாயுப்பற்று ; காண்க : பிடித்தம் ; கருத்து ; சேர்க்கப்பட்ட பொருள் ; தளை ; உறுதி ; கைப்பிடி ; கைகூடல் ; ஆதாரம் . |
பிடிபடுதல் | அகப்படுதல் ; பிடிக்கப்படுதல் ; புலப்படுதல் ; அடைதல் ; இணங்குதல் . |
பிடிபாடு | பிடிக்கப்பட்டது ; சேர்க்கப்பட்டது ; ஆதாரம் ; பற்று . |
பிடிபிடியெனல் | விரைவுக்குறிப்பு . |
பிடிமானம் | காண்க : பிடித்தம் ; சேர்மானம் ; உறுதி ; கைப்பிடி . |
பிடியரிசி | அறஞ்செய்யக் கைப்பிடியளவாக அள்ளிவைக்கும் அரிசி . |
பிடியல் | சிறுதுகில் ; நல்லாடை . |
பிடியாள் | பிடித்தடைக்கப்பட்டவன் ; அமஞ்சி வேலைக்காரன் ; கூலிக்காக அமர்த்தப்பட்டவன் . |
பிடிவாதக்காரன் | தான் கொண்டதை விடாது சாதிப்பவன் . |
பிடிவாதம் | கொண்டதுவிடாமை ; உறுதியுள்ள நிலை . |
பிடிவாதி | காண்க : பிடிவாதக்காரன் . |
பிடிவிடுதல் | கைப்பிடிவிடுதல் ; அன்பு நீங்குதல் . |
பிடுக்கு | பீசம் , விதை . |
பிடுகு | இடி . |
பிடுங்கல் | வலிந்து எடுக்கை ; பொருள் பறித்தல் ; தொந்தரவு ; தொந்தரவு செய்பவர் . |
பிடுங்கித்தின்னுதல் | கொத்தித்தின்னுதல் ; கவர்ந்துண்ணுதல் ; வருத்துதல் . |
பிடுங்கிவிடுதல் | வருத்துதல் ; ஓடிப்போதல் . |
பிடுங்குதல் | பறித்தல் ; கவர்தல் ; தடையை அடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல் ; கொத்துதல் ; வருத்துதல் ; மிகுதியாதல் ; தொல்லைகொடுத்தல் . |
பிடை | குகை . |
பிண்டக்காப்பு | சோறு . |
பிண்டகருமம் | பிண்டம் வைத்துப் பிதிரர்க்குச் செய்யும் சடங்கு . |
பிண்டசூத்திரம் | தலைமைப் பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம் . |
பிண்டதன் | தாயாதி ; பந்து ; உதவுபவன் . |
பிண்டதானம் | பிதிரர்களுக்குப் பிண்டமளிக்கை . |
பிண்டப்பிரதானம் | பிதிரர்களுக்குப் பிண்டமளிக்கை . |
பிண்டப்பொருள் | கருத்து . |
பிண்டபுட்பம் | அசோகமரம் ; காண்க : செவ்வந்தி . |
பிண்டம் | உண்டை ; உருவற்ற கரு ; உடல் ; சோற்றுத்திரள் ; பிதிரர் பொருட்டுக் கொடுக்கப்படுஞ் சோற்றுருண்டை ; தொகுதி ; காண்க : பிண்டசூத்திரம் , சூத்திரம் , ஓத்து , படலம் என்னும் மூன்றுறுப்புக் கொண்ட நூல் . |
பிண்டம்பிடித்தல் | உருண்டையாக்குதல் ; படைத்தல் ; உருச்சிதைத்து உருண்டையாக்குதல் ; கரு உண்டாதல் . |
பிண்டம்விழுதல் | கருச்சிதைவு . |
பிண்டவுரை | பொழிப்புரை . |
பிண்டாண்டம் | பிண்டமும் அண்டமும் . |
பிண்டாரன் | இடையன் ; இரவலன் . |
பிண்டாரி | கொள்ளைக்காரன் . |
பிண்டி | நுண்ணிய பொடி ; காண்க : பிண்ணாக்கு ; வடிவம் ; கூட்டம் ; புனர்பூசநாள் ; இணையாவினைக்கைவகை ; அசோகமரம் . |
பிண்டிக்கை | இணையா வினைக்கைவகை . |
பிண்டிகரணம் | தொகுக்கப்பட்டது . |
பிண்டிகை | இருக்கை ; கடிவாளம் . |
பிண்டித்தல் | திரளையாக்குதல் ; தொகுத்தல் ; திரளுதல் . |
பிண்டிப்பகவன் | அருகன் . |
பிண்டிப்பாலம் | எறியாயுதம் . |
பிண்டியார் | சமணர் . |
பிண்டியான் | அருகக்கடவுள் . |
பிண்டிவாமன் | அருகக்கடவுள் . |
பிண்டிவாலம் | எறியாயுதம் . |
பிண்டீகரணம் | உருண்டையாக்கல் ; திரட்டப்பட்டது . |
பிண்டு | உடல் . |
பிண்டோதகம் | பிதிரர்க்கு அளிக்கப்படும் நீர்க்கடன் . |
பிண்ணாக்கு | எள்ளு , கடலை முதலியவற்றின் எண்ணெய் நீக்கிய சக்கை ; காண்க : எள்ளுப்பிண்ணாக்கு . |
பிண்ணாக்குமூடன் | முழுமூடன் . |
பிணக்கட்டில் | பாடை . |
பிணக்கம் | மாறுபாடு ; ஊடல் ; நெருக்கடி ; பின்னுகை . |
பிணக்கன் | மாறுபாடுள்ளவன் . |
பிணக்காடு | சுடுகாடு ; போர்க்களம் . |
பிணக்கு | காண்க : பிணக்கம் ; தூறு . |
பிணக்கோலம் | பிணத்தை அலங்கரிக்கை ; பிணம் போல் தோற்றுகை . |
பிணங்குதல் | மாறுபடுதல் ; ஊடுதல் ; செறிதல் ; பின்னுதல் . |
பிணந்தின்னி | பிணந்தின்போன் ; பிறரைத் துன்புறுத்துவோன் . |
பிணநாற்றம் | பிணத்தின் கொடிய தீநாற்றம் . |
பிணநெஞ்சு | உணர்ச்சியற்ற மனம் . |
பிணப்பறை | சாப்பறை . |
![]() |
![]() |
![]() |