பிலாளகம் முதல் - பிளவுபோடுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பிலாளகம் புழுகுசட்டம் .
பிலிஞ்சி புளிச்சைக்காய்மரம் .
பிலிம்பி புளிச்சைக்காய்மரம் .
பிலிற்றுதல் தூவுதல் ; வெளிவிடுதல் ; கொப்புளித்தல் .
பிலுக்கன் பகட்டன் .
பிலுக்கி பகட்டுக்காரி .
பிலுக்கு பகட்டு .
பிலுக்குதல் பகட்டுதல் .
பிலுபிலுவெனல் இலை முதலியன உதிர்தற் குறிப்பு ; மக்கட்கூட்டத்தின் ஒலிக்குறிப்பு ; ஒலியோடு கூட்டம் கூடுதற்குறிப்பு ; வாயால் அடுக்குதற்குறிப்பு .
பிவாயம் சோறு சமைத்த பானைகளுக்கு இடும் திருநீற்றுக் குறி .
பிழக்கடை வீட்டின் பின்வாயிற்புறம் ; கடை மடை ; நுழைவாயில் .
பிழக்கடைநடை வீட்டின் பின்புறத்துள்ள நடைவழி .
பிழக்கு பிழை .
பிழம்பு திரட்சி ; வடிவு ; உடல் ; கொடுமை .
பிழம்புநனியுலர்த்தல் நியமத்தின் உறுப்பாகிய காயக்கிலேசம் .
பிழம்புநனிவெறுத்தல் நியமத்தின் உறுப்பாகிய காயக்கிலேசம் .
பிழற்பெய்மண்டை நீரூற்றும் ஈமச்சட்டி .
பிழா கொள்கலம் ; இறைகூடை ; தட்டுப்பிழா .
பிழார் இறைகூடை .
பிழி கள் .
பிழி (வி) வெளிப்படுத்து ; சாறு முதலியன பிழி .
பிழிஞன் கள் விற்போன் .
பிழிதல் வடிதல் ; சொரிதல் ; கையால் இறுக்கிச் சாற்றை வெளியேறச் செய்தல் .
பிழிந்தபூ தேங்காய்ப்பூச் சக்கை .
பிழியல் பிழிகள் .
பிழிவு பிழிந்து எடுக்கப்பட்ட பொருளாகிய சாறு ; பொருட்சுருக்கம் .
பிழுக்கை ஆடு முதலியவற்றின் மலம் ; ஒன்றுக்கும் உதவாதவர் ; வேலைக்காரர் .
பிழுக்கைமாணி சிறிய பிரமசாரி ; சிறுபிள்ளை .
பிழை தவறு ; குற்றம் : குறைவு .
பிழை (வி) உய் ; குற்றஞ்செய் .
பிழைத்தல் குற்றஞ்செய்தல் ; பலியாதுபோதல் ; சாதல் ; தவறிப்போதல் ; உய்தல் ; கேட்டினின்று தப்புதல் ; உயிர்வாழ்தல் ; வாழ்க்கை நடத்துதல் ; நீங்குதல் ; இலக்குத் தவறுதல் .
பிழைதிருத்தம் பிழையும் அதன் திருத்தமும் அடங்கிய அட்டவணை .
பிழைப்பித்தல் பிழைக்கச் செய்தல் .
பிழைப்பு குற்றம் ; தப்பி உய்கை ; உயிர்வாழ்கை ; வாழ்க்கை ; கருச்சிதைவு .
பிழைப்புக்காட்டுதல் வாழ வழிகாண்பித்தல் .
பிழைப்பூட்டுதல் உயிர்ப்பித்தல் ; காப்பற்றுதல் .
பிழைபாடு தவறுபடுகை .
பிழைபார்த்தல் தவறுகளைத் திருத்துதல் ; தவறு கண்டுபிடித்தல் .
பிழைமணம் ஒழுங்கற்ற திருமணம் அல்லது சேர்க்கை .
பிழைமொழி குற்றமுள்ள சொல் .
பிள் பிள்ளைமையழகு .
பிள்ளுதல் பிளவுண்டாதல் ; துண்டுபடுதல் ; மனம் வேறுபடுதல் ; விள்ளுதல் ; நொறுக்குதல் .
பிள்ளுவம் யானை .
பிள்ளை குழந்தை ; மகன் ; மகள் ; இளைஞன் ; இளமை ; சிறுமை ; சாதி ; கோட்டில் வாழ்விலங்கின் இளமை ; நாயொழிந்த விலங்கின் இளமை ; பறப்பன தவழ்வன இவற்றின் இளமை ; கரிக்குருவி ; காகம் ; நெல்லும் புல்லும் ஒழிந்த ஒரறிவுயிரின் இளமைப் பெயர் ; பிள்ளைப்பூச்சி ; வைரவன் ; வேளாளர் பட்டப்பெயர் ; சங்கின் ஏறு ; மரப்பாவை .
பிள்ளைக்கவி காண்க : பிள்ளைத்தமிழ் ; முன்னோர் சொல்நடை பொருள்நடை கொண்டு கவிபாடுவோன் .
பிள்ளைக்கிணறு உட்கிணறு .
பிள்ளைகரைத்தல் கருச்சிதைத்தல் .
பிள்ளைகுட்டிக்காரன் பெருங்குடும்பமுடையவன் .
பிள்ளைகூட்டுதல் தத்து எடுத்தல் .
பிள்ளைத்தமிழ் கடவுளையோ பெரியவரையோ பிள்ளையாகக் கருதிக் காப்பு முதலிய பருவங்களை அமைத்துப் பாடும் சிற்றிலக்கிய நூல் .
பிள்ளைத்தாய்ச்சி கருவுற்றிருப்பவள் ; கைக்குழந்தையையுடைய தாய் .
பிள்ளைத்தேங்காய் தென்னைநெற்று .
பிள்ளைநிலை போரிற் சென்றறியாத மறக்குடிச் சிறுவர் தாமே செய்யுந் தறுகணாண்மையைக் கூறும் புறத்துறை .
பிள்ளைப்பன்மை மக்கள் .
பிள்ளைப்பாட்டு காண்க ; பிள்ளைத்தமிழ் .
பிள்ளைப்பால் குழந்தைகளுக்கு அறமாகத்தரும் பால் ; முலைப்பால் .
பிள்ளைப்பிறை இளம் பிறைச்சந்திரன் .
பிள்ளைப்பூச்சி சேற்றில் வாழும் பூச்சிவகை .
பிள்ளைப்பேறறிந்தவள் மருத்துவச்சி .
பிள்ளைப்பேறு மகப்பேறு , பிரசவம் .
பிள்ளைமை பிள்ளைத்தன்மை ; இளமையிலுள்ள அறியாமை .
பிள்ளையன் வேளாளத் தலைவர் சிலருக்கு வழங்கும் சிறப்புப்பெயர் ; இளைஞன் .
பிள்ளையாண்டான் இளைஞன் .
பிள்ளையார் விநாயகர் ; முருகக்கடவுள் ; மகன் ; பெருவயிறன் ; காண்க : ஆளுடையபிள்ளையார் ; நூறு அல்லது ஆயிரத்தைக் குறிக்கும் குழூஉக்குறி .
பிள்ளையார்சுழி எழுதத் தொடங்குங்கால் மங்கலமாக வரைப்படும் 'உ' என்னும் குறி .
பிள்ளையுண்டாதல் கருத்தரித்தல் .
பிள்ளளையெடுத்தல் காண்க : பிள்ளைகூட்டுதல் .
பிள்ளைவங்கு பாய்மரம் நிற்குங் குழி .
பிள்ளைவலி மகப்பேற்றுவலி .
பிளகு பிரிவு ; கமுகவேர் .
பிளத்தல் பிரிவுபடுதல் ; வெடிபடுதல் ; ஊடுருவப்படுதல் ; மனமுடைதல் ; திறந்திருத்தல் ; வெடிக்கச்செய்தல் ; ஊடுருவுதல் ; போக்குதல் ; பாகுபடுத்துதல் ; வெல்லுதல் .
பிளப்பு பிளவு ; வெடிப்பு .
பிளவு விரிந்துண்டாஞ் சந்து ; துண்டு ; வெட்டுப்பாக்கு ; அரைக் குன்றிமணி எடை ; பிரிந்திசைப்பு ; வெடியுப்பு .
பிளவுப்பிறை காண்க : பிறைக்கொழுந்து .
பிளவுபோடுதல் தாம்பூலந்தரித்தல் .