சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆச்சியம் | நெய் ; எள்ளத்தக்கது ; கட்டணம் ; தேவதாருவின் பிசின் . |
| ஆச்சியாடு | மற்ற ஆட்டு மந்தையிலிருந்து இரந்து பெறப்பட்ட ஆடு . |
| ஆச்சிரமம் | காண்க : ஆசிரமம் . |
| ஆச்சிராமம் | காண்க : ஆசிரமம் . |
| ஆச்சிரமி | நால்வகை ஆசிரமங்களுள் ஒன்றில் இருப்பவன் . |
| ஆச்சிரயம் | பகை வெல்லுதற்குப் பலமுள்ளான் ஒருவனை அடைகை ; பாதுகாப்பு ; கொளு கொம்பு ; புகலிடம் . |
| ஆச்சிரயாசித்தம் | பட்சத்தில் இல்லாத ஏதுவைக் கூறும் ஏதுப்போலி . |
| ஆச்சிரவம் | சூள் ; கீழ்ப்படிகை ; வருத்தம் ; கன்மத்தொடர்ச்சி ; ஆன்மா பொறிவழிச் சேறல் . |
| ஆச்சிலை | கோமேதகம் . |
| ஆச்சு | ஆயிற்று , முடிந்தது ; ஒருவகை உரையசை . |
| ஆச்சுக்காசி | மஞ்சட்கோங்கு . |
| ஆச்சுரிதகம் | சிரிப்பு ; நகக்குறிவகை . |
| ஆச்சுவாசம் | சாக்காடு ; அத்தியாயம் . |
| ஆசங்கித்தல் | ஐயுறுதல் ; மறுத்தல் . |
| ஆசங்கை | ஐயம் ; மறுப்பு . |
| ஆசட்சு | கண் ; பண்டிதன் . |
| ஆசடை | நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம் . |
| ஆசத்தி | விருப்பம் , பற்று . |
| ஆசந்தி | சவம் கொண்டுபோகும் பாடை ; பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் திருவுருவத்தை ஊர்வலம் செய்விக்கை ; சிறுகட்டில் ; பிரம்பாலான இருக்கை . |
| ஆசந்திரதாரம் | சந்திரனும் நட்சத்திரங்களும் உள்ளவரை . |
| ஆசந்திரார்க்கம் | சந்திர சூரியர்கள் உள்ளவரை . |
| ஆசம் | சிரிப்பு . |
| ஆசமனம் | காண்க : ஆசமித்தல் . |
| ஆசமனீயம் | ஆசமனநீர் . |
| ஆசமித்தல் | வலக்குடங்கையால் மந்திர பூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல் . |
| ஆசயம் | உறைவிடம் ; உடலின் உட்பை ; மனம் ; கருத்து ; உழை ; பலா . |
| ஆசர் | ஆயத்தம் ; நேர்வந்திருத்தலைக் குறிக்கும் சொல் . |
| ஆசர்ப்பட்டி | வருகைப் பதிவேடு . |
| ஆசரணம் | பழக்கம் ; வழக்கம் ; அனுட்டானம் . |
| ஆசரணை | காண்க : ஆசரணம் ; தூய்மை . |
| ஆசரித்தல் | அனுட்டித்தல் ; கைக்கொள்ளுதல் ; வழிபடுதல் . |
| ஆசல் | மதிப்பு . |
| ஆசலம் | மக்க சஞ்சலம் ; குற்றமும் துன்பமும் . |
| ஆசலை | ஆடாதோடை . |
| ஆசவம் | கள் . |
| ஆசவுசம் | தீட்டு . |
| ஆசற | குறையற . |
| ஆசறுதல் | குற்றமின்மை ; முடிதல் . |
| ஆசறுதி | கடைசி . |
| ஆசறுதிப்பல் | கடைவாய்ப் பல் . |
| ஆசன்னம் | அண்மையானது . |
| ஆசனக்கிருமி | மலப்புழுவகை . |
| ஆசனக்குளிகை | மலவாய்வழியாய்ச் செலுத்தும் மாத்திரை . |
| ஆசனந்திருத்துதல் | பெரியோர்க்கு இருக்கை அமைத்தல் . |
| ஆசனபவுத்திரம் | பகந்தரம் , மலவாயில் புரைவைத்த புண் . |
| ஆசனம் | பீடம் முதலிய தவிசு ; இருக்கைநிலை ; மலவாய் ; உரிய காலம் வரும்வரை பகைமேற் செல்லாதிருக்கை . |
| ஆசனவாய் | மலவாய் . |
| ஆசனவெடிப்பு | நோய்வகை . |
| ஆசனி | பலாவகை ; பெருங்காயம் . |
| ஆசாசி | சீந்தில் . |
| ஆசாசித்தல் | வாழ்த்துதல் . |
| ஆசாட்டம் | தெளிவற்ற தோற்றம் . |
| ஆசாடபூதி | தோற்றத்திற்கு ஏற்ற பண்பற்றவன் ; துரோகி ; வஞ்சகன் . |
| ஆசாடம் | முருக்கு ; ஆடிமாதம் ; மரக்கொம்பு ; தவசியின் கைக்கோல் . |
| ஆசாபங்கம் | விரும்பியது பெறாமை . |
| ஆசாபந்தம் | நம்பிக்கை ; சிலந்திவலை . |
| ஆசாபாசம் | ஆசையாகிய பற்று . |
| ஆசாபைசாசம் | ஆசையாகிய பேய் . |
| ஆசாம்பரன் | திசைகளையே ஆடையாகக் கொண்டவன் , சிவன் . |
| ஆசாமி | ஆள் . |
| ஆசாமிக்களவு | ஆளைத் திருடுகை . |
| ஆச்சனை | முழுதும் செலவழிக்கை . |
| ஆச்சா | சாலமரம் ; கள்ளி . |
| ஆச்சாசினி | சாலமரம் ; கள்ளி . |
| ஆச்சாசோபிகம் | பெருங்கிலுகிலுப்பை . |
| ஆச்சாட்டு | சிற்றீரம் . |
| ஆச்சாட்டுப்பயிர் | சிற்றீரமுள்ள நிலத்துப்பயிர் . |
| ஆச்சாதம் | உறை ; சீலை ; மூடி ; மேலாடை . |
| ஆச்சாதனபலம் | பருத்திக்கொட்டை . |
| ஆச்சாதனபலை | பருத்திக்கொட்டை . |
| ஆச்சாதனம் | ஆணவமலம் ; அஞ்ஞானம் ; மறைப்பு ; ஆடை . |
| ஆச்சாள் | தாய் . |
| ஆச்சான் | ஆசாரியன் . |
| ஆச்சி | தாய் ; பாட்டி ; மூத்த தமக்கை ; சிறப்பு வாய்ந்த பெண்டிரைக் குறிக்குஞ் சொல் ; குரு பத்தினி . |
| ஆச்சிபூச்சி | விளையாட்டுவகை . |
|
|
|