பீதை முதல் - பீனிசவடைப்பு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பீதை பொன்னிறப் பூவுள்ள மருதோன்றிமரம் ; மஞ்சள் .
பீந்துதல் கொடுத்தல் .
பீந்தோல் காண்க : பீத்தோல் .
பீநாறி ஒரு மரவகை ; பெருமரம் .
பீப்பா எண்ணெய் முதலியன அடைக்கும் மரப்பெட்டிவகை .
பீப்பாய் எண்ணெய் முதலியன அடைக்கும் மரப்பெட்டிவகை .
பீபற்சு சீர்குலைவு ; தொந்தரவு ; அருச்சுனன் .
பீமநாதம் சிங்கம் ; பேரொலி .
பீமபாகம் சிறந்த சமையல் .
பீமம் அச்சம் ; பருமை .
பீமன் சிவபிரான் ; வீமசேனன் ; விதர்ப்பநாட்டு மன்னன் .
பீமாபத்திரம் உறுதியீட்டுச் சாசனம் .
பீயாக்குதல் நாசஞ்செய்தல் .
பீயு ஆந்தை ; காகம் ; காலம் ; சூரியன் .
பீர் பசலைநிறம் ; வெளுப்பு ; பீர்க்கு ; முலைப்பால் ; முகம்மதியப் பெரியார் ; முகம்மதியச் சப்பரம் ; மரவகை ; பெருக்கு
பீர்க்கங்கூடு பீர்க்கின் உள்ளீடற்ற மேல்தோடு .
பீர்க்கு ஒரு கொடிவகை .
பீர்ச்சாங்குழல் காண்க : பீச்சாங்குழல் .
பீர்ச்சுதல் காண்க : பீச்சுதல் .
பீர்தங்குதல் காண்க : பீர்பூத்தல் .
பீர்பீராய் தாரைதாரையாய் .
பீர்பூத்தல் காமநோயால் பீர்க்கம்பூப்போல உடல் பசத்தல் .
பீர்விடுதல் பெருக்கெடுத்தல் .
பீரங்கி பெருங்குழாயான வெடிகருவி .
பீரம் காண்க : பீர்க்கு ; பசலைநிறம் ; பூவரசமரம் ; காண்க : வாகை ; தாய்ப்பால் ; வீரம் ; வலிமை .
பீராய்தல் பொறுக்கல் ; ஆராய்தல் ; சிறிது சிறிதாகச் சேர்த்தல் ; கொழித்தல் .
பீரிடுதல் விரைந்து பாய்தல் ; நீர் முதலியன தாரையாகப் பாய்தல் ; அலறுசத்தமிடுதல் .
பீரு புருவம் ; அச்சமுள்ளோன் .
பீருகம் ஆந்தை ; கரடி ; காடு .
பீருகன் அச்சமுடையோன் .
பீருதந்தி தண்ணீர்விட்டான்கிழங்கு .
பீரெனல் விரைந்து பாய்தற்குறிப்பு .
பீரை பீர்க்கங்கொடி .
பீரோ நிலைப்பேழை , அலமாரி .
பீரோடுதல் முலைப்பால் வெளிப்படுதல் .
பீலகம் காண்க : பீலிகை .
பீலி மயில்தோகை ; மயில் ; சிற்றாலவட்டம் ; வெண்குடை ; பொன் ; மகளிரிடும் கால்விரலணி ; சிறுசின்னம் ; வாத்தியப்பொது ; பெருஞ்சவளம் ; மலை ; மதில் ; நத்தை ஓடு ; பனங்குருத்து ; நீர்பாய் தொட்டி ; பந்தயமுறி .
பீலிக்கண் மயில்தோகைக்கண் ; மயிலிறகு .
பீலிக்குஞ்சம் அலங்காரத் தொங்கல் .
பீலிக்குடை மயில்தோகையாலான குடை ; மயிற்குஞ்சம் .
பீலிக்கொட்டு நீர்பாய் தொட்டி .
பீலிகை எறும்பு .
பீலித்தண்டு எறியாயுதம் , பிண்டிபாலம் .
பீலிப்பட்டை பெரிய இறைகூடை .
பீலிபோடுதல் பந்தயமுறியிடுதல் .
பீலியார் சமணர் .
பீலிவாகை நீண்ட மரவகை .
பீலு அணு ; அச்சம் ; உகாமரம் ; யானை ; எறும்பு .
பீலுகம் கரடி .
பீலுகன் காண்க : பீருகன் .
பீவரம் ஆமை ; கொழுப்பு .
பீவரி அமுக்கிரா ; பசு ; பருவப்பெண் ; பெண்கிளி .
பீழ்தல் பிடுங்குதல் .
பீழித்தல் வருத்துதல் .
பீழை துன்பம் .
பீள் கரு ; தானிய இளங்கதிர் ; இளமை .
பீளல் பெண்குறி .
பீளை கண்மலம் .
பீளைசாடுதல் கண்ணழுக்குப் புறப்படல் .
பீற்றல் கந்தை , கிழியல் ; கடனாளி .
பீறல் கிழித்தல் ; கந்தை , கிழியல் .
பீறு கிழிவு ; மலவாய் .
பீறுதல் கிழித்தல் ; கிழிதல் ; பிளத்தல் ; கீறுதல் .
பீனசம் சளிநோய்வகை ; மூக்கடைப்புநோய் .
பீனம் பருமை ; பெருமை ; காண்க : நீர்ப்பாசி ; கொடிப்பாசி ; பேடி ; ஊர் .
பீனிசம் காண்க : பீனசம் .
பீனிசவடைப்பு சளியால் மூக்கு அடைத்துக் கொள்கை .