சொல்
|
அருஞ்சொற்பொருள் |
புகையிலைகுடித்தல் | புகையிலைப் புகையை உட்கொள்ளுதல் . |
புகையிலைத்தூள் | மூக்குப்பொடி . |
புகையிலைபோடுதல் | வெற்றிலையோடு புகையிலையை மெல்லுதல் . |
புகையுண்ணுதல் | சுருட்டுப்பிடித்தல் ; புகைபட்டுப் படத்தின் உருக்கெடுதல் . |
புகையுயிர்த்தல் | கொதிப்படைதல் . |
புகையுறுப்பு | நேர்கட்டி , செந்தேன் , நிரியாசம் , பச்சிலை , சந்தனம் , அகில் என்னும் ஆறு வகைப் புகைச்சரக்கு . |
புகையுறை | காண்க : புகையாற்றி . |
புகையூட்டுதல் | கூந்தல் முதலியவற்றுக்கு நறும் புகையூட்டுதல் ; புகை பிடிப்பித்தல் ; நோவுற்ற உடற்பகுதியில் மருந்துப்புகை யேற்றிச் சிகிச்சைசெய்தல் . |
புகையூரல் | படிந்த புகைத்திரள் . |
புகையூறல் | படிந்த புகைத்திரள் . |
புகைவட்டம் | எழுநரகத்துள் ஒன்று . |
புகைவு | புகைச்சல் ; மனவெரிச்சல் ; வறட்டிருமல் . |
புங்கம் | அம்பின் அடிப்பாகம் ; அம்பு ; குவியல் ; சிறந்தது ; உயர்ச்சி ; மெல்லாடை ; சிறுதுகில் ; காண்க : புன்கு ; தூய்மை . |
புங்கமரம் | ஒரு மரவகை . |
புங்கர்க்காழகம் | மெல்லிய ஆடைவகை . |
புங்கவம் | அம்பு ; எருது , நந்தி ; சிறந்தது . |
புங்கவன் | சிறந்தோன் ; குரு ;தேவன் ; புத்தன் ; அருகன் ; பாடாணவகை . |
புங்கவி | பார்வதி ; தெய்வப்பெண் . |
புங்கவிருகம் | கத்தூரிமான் . |
புங்கன் | மூடன் . |
புங்கானுபுங்கம் | மேன்மேல் தொடுக்கும் அம்புத்தொகுதி ; பேசும்போது சொற்கள் அடுத்து வரும் விரைவு . |
புங்கு | புங்கமரம் . |
புச்சத்தலம் | மலவாய் . |
புச்சம் | வால் ; பிருட்டம் ; வால்நட்சத்திரம் ; பின்புறம் தொங்கும் ஆடைக்கொடுக்கு ; மயிற்றோகை ; தேள்கொடுக்கு ; தேள் . |
புச்சி | காண்க : எருக்கு . |
புசகம் | பாம்பு . |
புசங்கம் | பாம்பு . |
புசம் | புயம் ; கோணத்தின் புறக்கோடு ; தயிராடை ; எருவறட்டி ; பதர் ; பேறு . |
புசல் | பெருங்காற்று ; குச்சுமட்டை ; ஓர் அளவு . |
புசித்தல் | உட்கொள்ளுதல் ; வினைப்பயன் முதலியன நுகர்தல் . |
புசிப்பன | உண்டற்குரியன . |
புசிப்பாளி | நற்பேறு பெற்றவன் . |
புசிப்பு | உண்ணுகை ; உண்பன , தின்பன , நக்குவன , பருகுவன ஆகிய நால்வகை உணவு ; வினைப்பயன் நுகர்ச்சி ; நல்லூழ் . |
புசை | வட்டத்தின் முதற்கால் அல்லது மூன்றாங் காற்பகுதி ; முதலாம் இரண்டாம் மூன்றாம் ஏழாம் எட்டாம் ஒன்பதாம் இராசி . |
புஞ்சம் | திரட்சி ; நூற்குஞ்சம் ; கூட்டம் ; நெய்த ஆடையின் அளவுவகை . |
புஞ்சின்னம் | ஆண்குறி . |
புஞ்சுதல் | ஒன்றுசேர்தல் . |
புஞ்சை | காண்க : புன்செய் . |
புட்கரம் | வானம் ; நீர் ; தாமரைப்பூ ; நாரை ; யானைத் துதிக்கை நுனி ; வாள் அலகு ; வாள் உறை ; அம்பு ; போர் ; பறையில் அடிக்குமிடம் ; வாத்தியவகை ; பாண்டத்தின் வாய் ; ஒற்றுமை ; நோய்வகை ; கோட்டம் ; வெறி ; பாம்புவகை ; விண்மீன்வகை ; பங்கு ; நிறைவு ; குகை ; பருந்து ; வாள் ; வடநாட்டில் பொகார் என இக்காலத்தார் வழங்கும் ஒரு புண்ணியதலம் ; ஏழு தீவுகளுள் நன்னீர்க்கடலால் சூழப்பட்ட பூபாகம் . |
புட்கரிணி | தாமரைத்தடாகம் ; கோயிற்குளம் ; பெண்யானை ; ஒரு தீவுவகை . |
புட்கலம் | நிறைவு ; முழுமை ; திங்கள் , செவ்வாய் , வியாழன் என்னுங் கிழமைகளில் ஒன்றும் அமாவாசையும் கூடிய காலம் ; காண்க : புட்கலாவருத்தம் ; பிச்சையுணவு ; உடம்பு . |
புட்கலாவருத்தம் | ஏழு முகிலில் ஒன்றானதும் பொன்பொழிவதுமான மேகம் ; மேகநாயகம் நான்கனுள் ஒன்று ; நிறைய மழைபெய்யும் மேகம் . |
புட்கலை | ஐயனார் தேவியருள் ஒருத்தி . |
புட்கலைமணாளன் | புட்கலை கணவனான ஐயனார் . |
புட்குத்திருப்பி | காண்க : வட்டத்திருப்பி . |
புட்குரல் | நிமித்தமாகக் கருதப்படும் பறவையொலி . |
புட்கோ | காண்க : கருடன் . |
புட்டகம் | புடைவை . |
புட்டகமண்டபம் | கூடாரம் . |
புட்டம் | காக்கை ; நிறைவு ; உடலின் மலவாய்ப் பக்கம் ; பெண்குறி ; புடைவை . |
புட்டல் | தலைச்சுமை . |
புட்டா | துணியில் செய்யப்பட்ட பூத்தொழில் ; வீங்கின அண்டம் . |
புட்டி | பருமை ; கொழுப்பு ; இடை ; குப்பி ; ஒரு முகத்தலளவைவகை ; சிறுபடி ; ஒரு நிறுத்தலளவைவகை ; நிலவளவைவகை . |
புட்டில் | அம்பறாத்தூணி ; விரலுறை ; உறை ; கூடை ; இறைகூடை ; முறம் ; குதிரைக்கு உணவுகட்டும் பை ; கெச்சையணி ; தக்கோலக் காய் ; குப்பி . |
புட்டிவெல்லம் | பனங்கட்டி . |
புட்டு | காண்க : பிட்டு . |
புட்டுக்கூடை | சிறுகூடை . |
புட்டை | அண்டவாதம் , பெருத்த அண்டம் ; உடலின் மலவாய்ப் பக்கம் ; பெண்குறி . |
புட்பகத்தேர் | காண்க : புட்பகவிமானம் . |
புட்பகம் | காண்க : புட்பகவிமானம் ; மூக்கிரட்டை ; இரத்தின கங்கணம் . |
புட்பகவிமானம் | குபேரன் ஊர்தி . |
புட்பகவூர்தி | காண்க : புட்பகவிமானம் ; குபேரன் . |
புட்பகாசம் | 273 கோபுரங்களையும் 32 மாடிகளையும் உடைய கோயில் ; விமானக்கோயில் . |
புட்பகீடம் | தேன்வண்டு . |
புட்பகேசி | உமாதேவி . |
புட்பகேது | மன்மதன் . |
புட்பசயனம் | மலர்ப்படுக்கை . |
புட்பசரன் | மலரம்பு கொண்ட மன்மதன் . |
புட்பசாபன் | மலர்வில்லைக்கொண்ட மன்மதன் . |
புட்பசாமரம் | தாழை . |
புட்பசாரம் | பூவின் தேன் . |
புட்பத்திராவகம் | பூவினின்று வடித்தெடுக்கும் செய்நீர் . |
புட்பதந்தம் | வடமேற்றிசை யானை . |
புட்பபலம் | விளாங்கனி |
புட்பபாணம் | மன்மதன் அம்பு ; வரிக்கூத்துவகை . |
![]() |
![]() |
![]() |