புலர்தல் முதல் - புலைமகன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
புலர்தல் வாடுதல் ; உலர்தல் ; தளர்தல் ; குறைதல் ; விலகுதல் ; முற்றுதல் ; விடிதல் ; தெளிதல் .
புலர்பு காண்க : புலர்காலை .
புலர்வு காண்க : புலர்காலை .
புலரி காண்க : புலர்காலை ; சூரியன் .
புலரிவைகறை வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்ட காலம் .
புலவர் புலமையோர் ; பாவாணர் ; ஞானிகள் ; தேவர் ; குறுநிலமன்னர் ; கூத்தர் ; கம்மியர் ; ஓவியம் முதலிய கலைவல்லார் ; சாளுக்கியர் ; ஒருவகைச் சாதியார் ; சில இனத்தவரின் பட்டப்பெயர் .
புலவராற்றுவழக்கம் புலநெறி வழக்கம் .
புலவரை நிலவெல்லை ; அறிவின் எல்லை .
புலவல் வெறுப்பு ; புலால் நாற்றம் .
புலவன் அறிஞன் ; பாவாணன் ; தேவன் ; புதன் ; முருகன் ; இந்திரன் ; அருகன் ; புத்தன் .
புலவி ஊடல் ; வெறுப்பு .
புலவிநீட்டம் ஊடல்மிகுதி ; கலவியிற் கூச்சம் .
புலவிநுணுக்கம் சிறு காரணங்களைக் கற்பனையாகக்கொண்டு தலைவி ஊடுகை .
புலவு காண்க : புல ; இரத்தம் ; வெறுப்பு ; அலறு ; நரகம் ; வயல் .
புலவுதல் புலால் நாற்றமடித்தல் ; வெறுத்தல் .
புலவோன் அறிஞன் ; பாவாணன் ; ஆன்மா .
புலன் ஐம்புலன் நுகர்ச்சியாகிய சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் என்பவை ; பொறி ;கருமேந்திரியம் ; அறிவுடைமை ; அறிவுக்கூர்மை ; வெளிப்படக் காண்டல் ; உறுப்பு ; வயல் ; நூல்வனப்புள் ஒன்று .
புலன்வனப்பு இயற்சொல்லால் உரிய பொருள் விளங்கக் கூறுதல் .
புலன்வென்றோர் ஐம்புலன்களை வென்ற முனிவர் .
புலனறிதல் துப்பறிதல் .
புலனி நண்டு .
புலனிடம் வாய் .
புலனுழுதுண்மார் கற்றோர் .
புலனெறிதல் ஐம்புலன்களை வெல்லுதல் .
புலனொடுக்கம் ஐம்புல ஆசையை ஒடுக்குகை .
புலாகம் சோற்றுப்பருக்கை .
புலாதி கவலை ; குழப்பம் .
புலால் ஊன் முதலியன ; புலால்நாற்றம் ; தசை நரம்பு .
புலால்கட்டி முத்துக்குளியலின்போது மீன் முதலியவற்றை வாய்கட்டித் தடுப்போன் .
புலாவுதல் புலால் நாற்றம் அடித்தல் ; வெறுத்தல் ; ஒலித்தல் ; விடிதல் .
புலாழி புலால் நாற்றம் பொருந்திய சக்கரப் படை .
புலாற்றானம் உடம்பு .
புலாற்றுருத்தி உடம்பு .
புலான்மறுத்தல் ஊன் உணவை விலக்குதல் .
புலானீர் இரத்தம்
புலி ஒரு விலங்குவகை ; ஒரு முனிவன் ; வேங்கை மரம் ; சிங்கம் ; சிம்மராசி' நால்வகைச் சாந்தினுள் ஒன்று ; மயிர்ச்சாந்து ; உண்ணாக்கு ; சூது கருவியுள் ஒன்று .
புலிக்கண்கல் கோமேதகம் .
புலிக்குடத்தி கழுதைப்புலி .
புலிக்கொடியோன் சோழன் .
புலிகடிமால் புலியைக் கொன்று முனிவரை மீட்ட இருங்கோவேள் என்னும் சிற்றரசன் .
புலிங்கம் ஊர்க்குருவி ; தீப்பொறி .
புலிசங்கிலி சங்கிலிவகை .
புலித்தண்டை விருதுவகை ; கோயில் மரியாதை வகை .
புலித்தொடர் புலிச்சங்கிலிவகை .
புலித்தோலுடையோன் சிவபிரான் .
புலிதடுக்கி காண்க : புலிதொடக்கி ; தொடரிச்செடி .
புலிதொடக்கி கற்றாழை ; கொடிவகை .
புலிந்தன் காண்க : புளிஞன் .
புலிநகக்கொன்றை புலிநகம் போன்ற பூவையுடைய கொன்றைமரம் .
புலிப்பற்றாலி புலிப்பல்லால் ஆன கழுத்தணி .
புலிப்பொறி மதிற்பொறிவகை .
புலிப்போத்து புலிக்குட்டி .
புலிமுகப்பு புலியுருவத்தை முகப்பிற் செய்துவைத்துள்ள மாளிகை .
புலிமுகமாடம் புலியுருவத்தை முகப்பிற் செய்துவைத்துள்ள மாளிகை .
புலிமுகவாயில் புலிமுக உருவம் அமைந்த வாயில் .
புலியுயர்த்தோன் புலிக்கொடியை உயர எடுத்தவனாகிய சோழன் .
புலியுறுமி புலிபோல் முழங்கும் ஒரு பறைவகை ; கிறிச்சான் ; புள்ளோட்டும் கருவி .
புலியுறை புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை .
புலியூர் புலிக்கால் முனிவர் வழிபட்ட நகரமாகிய சிதம்பரம் .
புலு பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி .
புலுட்டுதல் ரொட்டி முதலியன கருக்குதல் ; சுடுதல் .
புலுட்டை செழிப்பற்றது ; மங்கின நிறம் ; செழிப்பற்ற தன்மை .
புலுண்டல் கருகல் உணவு ; செழிப்பற்ற தன்மை .
புலுண்டுதல் கருகுதல் .
புலுதம் உயிரளபெடை ; மெய்யெழுத்து ; குதிரை முழுவோட்டம் ; இசையின் காலவகை .
புலை இழிவு ; அழுக்கு ; தீட்டு ; தீயநெறி ; பொய் ; ஊன் ; கீழ்மகன் ; தீநாற்றம் .
புலைச்சி புலைப்பெண் ; எவட்சாரம் .
புலைச்சேரி புலையர் வாழும் இடம் .
புலைசு புலால் .
புலைஞர் இழிந்தோர் , சண்டாளர் .
புலைத்தனம் இழிகுணம் ; கொலைக்குணம் .
புலைத்தி இழிகுலப் பெண் ; வண்ணாத்தி .
புலைத்தொழில் இழிசெயல் .
புலைப்பாடி காண்க : புலைச்சேரி .
புலைமகன் கீழ்ச்சாதியான் ; புரோகிதன் ; நாவிதன் .