சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| புனற்கடல் | காண்க : நன்னீர்க்கடல் . |
| புனற்கரசன் | வருணன் . |
| புனற்செல்வன் | வருணன் . |
| புனற்படுநெருப்பு | வடவைத்தீ . |
| புனறருபுணர்ச்சி | வெள்ளநீரிடையே வீழ்ந்த தலைவியைத் தலைவன் காத்ததனால் அவ்விருவருக்கும் உண்டான கூட்டம் . |
| புனனாடன் | நீர்நிறைந்த நாட்டையுடைய சோழஅரசன் . |
| புனனாடு | சோணாடு . |
| புனிதம் | தூய்மை ; ஏழாவது நட்சத்திரமாகிய புனர்பூசம் . |
| புனிதன் | தூய்மையானவன் ; சிவன் ; இந்திரன் ; அருகன் ; புத்தன் . |
| புனிற்றா | ஈன்றணிமையுள்ள பசு அல்லது எருமை . |
| புனிற்றுமதி | இளமதி . |
| புனிறு | ஈன்றணிமை ; அண்மையில் ஈனப்பட்டது ; பிஞ்சுத்தன்மை ; மகப்பேற்றலான தீட்டு ; புதுமை ; தோல் . |
| புனுகு | புழுகு . |
| புனை | அழகு ; பொலிவு ; அலங்காரம் ; அணிகலன் ; கால்விலங்கு ; சீலை ; புதுமை ; நீர் . |
| புனைசுருட்டு | மோசம் . |
| புனைதல் | அணிதல் ; தரித்தல் ; அலங்கரித்தல் ; சித்தம்செய்தல் ; ஓவியம் வரைதல் ; கட்டுதல் ; முடைதல் ; சூடுதல் ; ஒழுங்காக அமைத்தல் ; சிறப்பித்தல் ; கற்பித்தல் ; செய்யுளமைத்தல் ; செய்தல் . |
| புனைந்துரை | கற்பனை ; அலங்கரித்துரைக்கும் வாசகம் ; பாயிரம் . |
| புனைந்தோர் | கம்மாளர் . |
| புனைபெயர் | கற்பித்துக்கொண்ட பெயர் . |
| புனைமொழி | அலங்காரச் சொல் . |
| புனையல் | மாலை . |
| புனையிறும்பு | செய்காடு . |
| புனைவன் | கம்மியன் . |
| புனைவலி | உவமானப் பொருள் . |
| புனைவு | அலங்காரம் ; அழகு ; செழிப்பு ; செய்கை . |
| புனைவுளி | உவமேயப் பொருள் . |
|
|