சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பெண்பிறப்பு | பெண்ணாகப் பிறக்கை . |
பெண்புத்தி | பெண்டிர்க்குரிய புத்தி . |
பெண்பெருமாள் | பெண்ணரசி . |
பெண்பேசல் | பெண்ணை மணம்பேசுதல் . |
பெண்போகம் | எண்வகைப் போகத்துள் சிற்றின்பம் துய்க்கை ; முப்பத்திரண்டு அறங்களுள் பெண்ணின்பந் துய்க்கப் பிறனுக்கு உதவும் அறம் . |
பெண்மகள் | பெண் ; பெண்மகவு . |
பெண்மதி | காண்க : பெண்புத்தி . |
பெண்மரம் | புறவயிரம் உள்ள மரம் ; காய்க்கும் மரம் அல்லது செடி . |
பெண்மாயம் | காண்க : பெண்வலை . |
பெண்மூச்சு | பிடிவாதம் . |
பெண்மை | பெண்தன்மை ; காண்க : பெண்பிறப்பு ; பெண்ணுக்குரிய குணம் ; பெண் இன்பம் ; அமைதித்தன்மை ; நிறை . |
பெண்வலை | பெண்டிர் செய்யும் வசீகரம் . |
பெண்வழி | பெண்ணைப்பற்றி வரும் உறவு . |
பெண்வழிச்சுற்றம் | பெண்ணைப்பற்றி வரும் உறவு . |
பெண்வழிச்சேறல் | மனைவி விருப்பத்தின்படி ஒழுகல் . |
பெண்விளக்கு | பெண்களிற் சிறந்தவள் ; பாவை விளக்கு . |
பெண்வீட்டார் | மணமகளைச் சேர்ந்த சம்பந்திகள் . |
பெத்தகாலம் | ஆன்மா பாசபந்தத்திற்கு உட்பட்ட காலம் . |
பெத்ததசை | ஆன்மா பாசத்திற்குட்பட்டிருக்கும் நிலை . |
பெத்தம் | ஆன்மாவின் பாசபந்தம் ; கட்டு ; சேர்மானம் . |
பெத்தமுத்தி | பந்தமும் வீடும் ; இலயமுத்தி . |
பெத்தர் | பாசத்தோடு கூடிய உயிர்கள் . |
பெத்தரிக்கம் | அகந்தை ; பெருமை ; குழப்பம் . |
பெத்தல் | பெருங்குரும்பைச்செடி . |
பெத்தான்மா | பாசபந்தமுள்ள உயிர் . |
பெதரிகாலம் | எட்டிமரம் . |
பெதும்பை | எட்டு முதல் பதினொரு வயது வரையுள்ள பெண் ; பெண் . |
பெந்தம் | தொடர்பு ; கட்டு . |
பெந்தித்தல் | காண்க : பந்தித்தல் ; சித்திரகவிகளில் எழுத்துகளை அடைக்கை . |
பெந்து | சுற்றம் . |
பெந்தை | அழகின்றிப் பருத்தது ; கலப்பையின் ஒர் உறுப்பு . |
பெந்தைக்கயிறு | கொழுவுள்ள கட்டையை மேழியோடிணைக்குங் கயிறு ; நன்கு திரிக்காத கயிறு . |
பெந்தைவிழி | உருண்டைவிழி ; அச்சத்தால் கண் மருண்டு பார்க்கை . |
பெம்மான் | பெருமான் ; கடவுள் . |
பெய்கலம் | கொள்கலம் ; பாண்டம் . |
பெய்தல் | மேல்நின்று பொழிதல் ; வார்த்தல் ; இடுதல் ; எறிந்துபோடுதல் ; இடைச்செருகுதல் ; கொடுத்தல் ; அமைத்தல் ; பரப்புதல் ; புகலிடுதல் ; எழுதுதல் ; அணிதல் ; பயன்படுத்தல் ; கட்டுதல் ; சிறுநீர் முதலியன ஒழுகவிடுதல் ; தூவுதல் ; பங்கிடுதல் ; செறித்தல் . |
பெய்தளத்தல் | படியால் அளக்கும் அளவைவகை . |
பெய்துரை | பாயிரம் ; இடைப்பெய்துரைப்பது . |
பெயர் | பேர் , நாமம் ; புகழ் ; பெருமை ; ஆள் ; வடிவு ; பொருள் ; காண்க : பெயர்ச்சொல் ; வஞ்சினம் ; முதல் வேற்றுமை . |
பெயர் | வேறுபடுத்து ; பேர் ; பெயர்த்து . |
பெயர்ச்சி | இடமாறுகை ; இடமாற்றுகை . |
பெயர்ச்செவ்வெண் | பெயர்களில் எண்ணிடைச் சொல் தொக்கு விட்டிசைத்துவரும் தொடர் . |
பெயர்ச்சொல் | நால்வகைச் சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்கும் சொல் . |
பெயர்த்தல் | போக்குதல் ; நிலைமாறச்செய்தல் ; அப்புறப்படுத்துதல் ; திருப்பிப்போடுதல் ; பிடுங்கல் ; கெடுத்தல் ; ஒடுங்கிக்கொள்ளுதல் ; பிரித்தல் ; மீட்குதல் ; வசூலித்தல் ; செலுத்துதல் ; விடுத்தல் . |
பெயர்த்தி | மக்கள்வயிற்றுப் பெண் ; பாட்டி ; கோள் முதலியவற்றின் பெயர்ச்சி . |
பெயர்த்திரிசொல் | திரிந்து வழங்கும் பெயர்ச்சொல் ; தம் பொருளை அரிதில் விளக்கும் பெயர்ச்சொல் . |
பெயர்த்து | பின்னும் . |
பெயர்த்தும் | பின்னும் . |
பெயர்த்தெழுதுதல் | படியெடுத்தல் ; மொழி பெயர்த்தல் . |
பெயர்தல் | போதல் ; பிறழ்தல் ; மீளுதல் ; மாறுதல் ; சிதைவுறுதல் ; இணைப்பு நெகிழ்தல் ; கூத்தாடுதல் ; சலித்தல் ; அசையிடுதல் ; இடம்விட்டு மாறுதல் ; பிரிதல் ; கிளர்தல் ; தேய்தல் ; நாணயம் வழங்குதல் ; வசூலாதல் . |
பெயர்திறம் | முல்லை யாழ்த்திறவகை . |
பெயர்ந்து | மறுபடியும் ; பிற்பாடு . |
பெயர்நேரிசை | ஓர் இலக்கியவகை . |
பெயர்ப்படுத்தல் | பேரிடுதல் . |
பெயர்ப்பு | பெயரச்செய்கை ; மொழிபெயர்ப்பு . |
பெயர்புறம் | புறங்கொடுக்கை . |
பெயர்பொறித்தல் | புகழை நிலைநிறுத்துதல் . |
பெயர்போதல் | புகழடைதல் . |
பெயர்வழி | ஆள் ; தலைமுறை ; பொருள் அட்டவணை . |
பெயர்வேற்றுமை | முதல் வேற்றுமை . |
பெயரகராதி | சதுரகராதியில் பெயர்ச்சொற் பொருளை விளக்கும் பகுதி . |
பெயரடி | பகுபதத்தில் பெயராகிய பகுதி . |
பெயரப்பெயர | மீண்டும்மீண்டும் . |
பெயரன் | பெயரை உடையவன் ; மக்கள் வயிற்று ஆண் ; பாட்டன் . |
பெயரிடுதல் | பெயர்வைத்தல் . |
பெயரிடைநிலை | பெயரின் பகுதி விகுதிகட்கு இடைநிற்கும் எழுத்து . |
பெயரிய | பெயர்பெற்ற ; பெயரால் அழைத்த . |
பெயரியற்சொல் | தன் பொருளை இயல்பில் விளக்கும் பெயர்ச்சொல் . |
பெயரின்மை | இறைவன் எண்குணத்துள் ஒன்றான பெயர் சொல்லமுடியாத தன்மை . |
பெயருரிச்சொல் | பெயர்ச்சொல்லைத் தழுவி வரும் சொல் . |
பெயரெச்சம் | பெயர்கொண்டு முடியும் வினைக்குறை . |
பெயரெஞ்சுகிளவி | பெயர்கொண்டு முடியும் வினைக்குறை . |
பெயரெடுத்தல் | புகழடைதல் ; ஒருவன் பெயரைப் பதிவுப் புத்தகத்தினின்று நீக்குதல் . |
பெயரேடு | காண்க : பேரேடு . |
பெயல் | பொழிகை ; மழை ; மழைத்துளி ; மேகம் . |
![]() |
![]() |
![]() |