பெருமுதலி முதல் - பென்னை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பெருமுதலி தலைவன் .
பெருமுளை இசைப்பாட்டுவகை .
பெருமூச்சு பெரிதாக விடும் மூச்சு .
பெருமை மாட்சிமை ; மிகுதி ; பருமை ; புகழ் ; வல்லமை ; அகந்தை ; அருமை .
பெருவங்கியம் யானைத் துதிக்கைபோலும் வடிவுள்ள இசைக்குழல் .
பெருவஞ்சி பகைவர் நாட்டை எரிகொளுத்துவதைக் கூறும் புறத்துறை .
பெருவயிறு பருத்த வயிறு , மகோதரம் .
பெருவர் பெருமையுடையவர் .
பெருவரை மகாமேரு .
பெருவலி மிகு வலிமையுடையது ; பெருநோவு .
பெருவழக்கு பலரும் கையாளும் முறை ; எங்கும் பரவியிருத்தல் .
பெருவழி நெடுஞ்சாலை ; வீட்டுநெறி .
பெருவளைப்பு பெரிய காவல் .
பெருவனம் கடல் .
பெருவாகை ஒரு மரவகை ; வேலிப்பருத்தி .
பெருவாடை பெருவளி , சண்டமாருதம் .
பெருவாய்மலர் காண்க : இருவாட்சி .
பெருவாயன் கழுதை ; அலப்புபவன் .
பெருவாயில் கோபுரம் ; தோரணவாயில் .
பெருவார்த்தை பெருமையுடைய உரை .
பெருவாரல்வலை மீன்பிடிக்கும் பெரிய வலைவகை .
பெருவாரி பெருவெள்ளம் ; மிகுதி ; கொள்ளை நோய் ; பரவல்நோய் .
பெருவாழ்வு நிரம்பிய பேறு ; பேரின்பம் .
பெருவியாதி குட்டநோய் .
பெருவிரல் கட்டைவிரல் ; நெல் எட்டுக் கொண்ட நீட்டலளவைவகை .
பெருவிருந்து ஊர்விருந்து .
பெருவிலை மிக்க விலை .
பெருவிலையன் மிக்க விலைபெறுவது .
பெருவிறல் மிகுவலி ; காண்க : பெருவிறலாளி ; முருகக்கடவுள் .
பெருவிறலாளி மிக்க வலிமையுடையவன் .
பெருவுடையார் எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டுள்ள இறைவன் ; தஞ்சைக் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் .
பெருவெழுத்து நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் சிவனைக் குறிக்கும் 'சி' என்னும் எழுத்து .
பெருவெள்ளை ஒரு நெல்வகை .
பெருவெளி விரிந்த வெளியிடம் ; வானவெளி ; வெட்டவெளி .
பெலத்தல் காண்க : பலத்தல் .
பெலம் காண்க : பலம் .
பெலவந்தம் காண்க : பலவந்தம் .
பெற்றத்துவசன் ஏற்றுக்கொடியுடைய சிவன் .
பெற்றபிள்ளை சொந்த மகன்(ள்) .
பெற்றம் பெருமை ; காற்று ; எருது ; மாடு ; இடபராசி .
பெற்றவர் காண்க : பெற்றோர் .
பெற்றவன் தகப்பன் .
பெற்றார் காண்க : பெற்றோர் .
பெற்றான் தந்தை ; கணவன் .
பெற்றி இயல்பு ; தன்மை ; குணம் ; விதம் ; செயல்முறை ; பெருமை ; நிகழ்ச்சி ; பேறு ; நோன்பு .
பெற்றிமை பெருமை ; செய்யவேண்டும் முறை ; சாதி .
பெற்று செல்வாக்கு ; அடுக்கு ; பெருக்கம் ; எருது .
பெற்றோர் தாய்தந்தையர் .
பெறுக்கல் அரிசி .
பெறுக்குதல் பொறுக்குதல் .
பெறுத்துதல் அடைவித்தல் ; உண்ணுதல் .
பெறுதல் அடைதல் ; பிள்ளைபெறுதல் ; பிறப்பித்தல் ; அறிதல் ; விலைத் தகுதியுடையதாதல் .
பெறுதி இலாபம் ; அடையத்தகும் பொருள் ; காண்க : பெறுமதி .
பெறுமதி தகுதி ; தெம்பு ; ஆற்றல் ; உறுதி ; வெகுமதி .
பெறுமானம் மதிப்பு ; கடன்தீர்க்குந் தகுதி .
பெறுவதுகொள்வார் காண்க : பொதுமகள் .
பெறுவதுகொள்வோர் காண்க : பொதுமகள் .
பென்னம்பெரிய மிகப் பெரிய .
பென்னை யானை .