பொற்பாவை முதல் - பொன்மலை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பொற்பாவை காண்க : பொற்சிலை ; அழகிய பெண் .
பொற்பாளம் பெரிய பொற்கட்டி .
பொற்பித்தல் அலங்கரித்தல் .
பொற்பிதிர் பசலை .
பொற்பு அழகு ; பொலிவு ; மிகுதி ; தன்மை ; ஒப்பனை .
பொற்புவி பொன்னுலகம் .
பொற்புறுத்துதல் அழகுபடுத்தல் .
பொற்பூ பொன்மலர் ; அரசர் பாணர்க்கு அளிக்கும் தாமரை வடிவான பொன்னணிகல வகை .
பொற்பூச்சு பொன்முலாம் பூசுகை ; பொன்னின் ரேக்கு .
பொற்பொது காண்க : பொற்சபை .
பொற்ற பொன்னாலாகிய ; சிறந்த .
பொற்றகடு பொன்னின் தகடு ; காண்க : பொற்சின்னம் .
பொற்றாப்பு மயிலாப்பூர் சிவன்கோயில் திருவிழாக்களுள் ஒன்று ; பொன்வடத்தால் அமைந்த ஊசல் திருவிழா .
பொற்றாமரை பொன்மயமான தாமரை ; மதுரைக் கோயிலில் உள்ள நீர்நிலை ; காண்க : பொற்பூ .
பொற்றாலம் பொன்னுலகம் ; பொன்னாலான தட்டு .
பொற்றாலி பொன்னால் செய்யப்பெற்ற தாலி ; மனைவி .
பொற்றேரை காண்க : பொற்றோரை .
பொற்றை சிறுமலை ; கற்பாறை ; சிறுதூறு ; காடு .
பொற்றொடி பொன்னாலாகிய தோள்வளை ; பொன் தோள்வளை அணிந்த பெண் .
பொற்றோரை இடையில் அணியும் பொன்வடம் .
பொறாமை பிறர் செல்வ முதலியவற்றைக் கண்டு மனங்கொளாமை ; பொறுமையின்மை .
பொறி வரி , கோடு , புள்ளி ; தழும்பு ; அடையாளம் ; எழுத்து ; இலாஞ்சனை ; விருது ; உயர்ந்த உடல் இலக்கணம் ; வண்டு ; பீலி ; தேமல் ; பதுமை ; விதி ; கன்னப்பொருத்து ; மூட்டுவாய் ; மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறி ; ஆண்குறி ; மனம் ; அறிவு ; அனற்றுகள் ; ஒளி ; எந்திரம் ; மதிலுறுப்பு ; மரக்கலம் ; விரகு ; நெற்றிப்பட்டம் ; திருமகள் ; செல்வம் ; பொலிவு ; முன்வினைப் பயன் ; திரட்சி ; ஊழ் .
பொறிகலங்குதல் அறிவு மயங்குதல் .
பொறிசிதறுதல் தீப்பொறி பறத்தல் ; காண்க : பொறிகலங்குதல் .
பொறிசிந்துதல் தீப்பொறி கக்குதல் ; மினுமினுத்தல் .
பொறித்தல் இலாஞ்சனையிடுதல் ; எழுதுதல் ; ஓவியம் வரைதல் ; தெறித்தல் ; பறிதல் ; கலைத்தல் ; தீச்சுடர் சிதறுதல் ; அழுந்துதல் .
பொறிதல் பறிதல் ; தீச்சுடர் சிதறுதல் ; சறுக்குதல் ; சரிதல் ; விழப்புகுதல் ; கலைதல் .
பொறிதொலைத்தல் ஒரு செயலை மனமின்றித் தீராக் கடமையாக முடித்தல் .
பொறிப்பு பறிகை ; எழுதுகை .
பொறிபறத்தல் தீப்பொறி சிதறுகை ; தீப் பறக்கப் பார்க்கை .
பொறிமுதல் இந்திரியங்களின் தலைவனாகிய ஆன்மா .
பொறியற்றார் கீழோர் .
பொறியறை அறிவற்றவர் ; திருவிலி .
பொறியிலார் கீழ்மக்கள் .
பொறியிலி அறிவிலி ; உறுப்புக்குறையுடையவர் ; நற்பேறற்றவர் .
பொறியொற்றோலை முத்திரையிட்ட ஓலைக்கடிதம் .
பொறிவாயில் புலன் .
பொறிவாயிற்காட்சி புலன்களால் அறியும் அறிவு .
பொறிவு பறிகை ; சறுக்கல் .
பொறிவைத்தல் வலைவீசுதல் .
பொறுக்குதல் ஆய்ந்தெடுத்தல் ; அங்குமிங்கும் சிதறிய பொருளைத் தெரிந்தெடுத்தல் .
பொறுத்தல் தாங்குதல் ; சகித்தல் ; சுமத்தல் ; அணிதல் ; இளக்காரம் கொடுத்தல் ; மன்னித்தல் ; உத்தரவாதமாதல் ; தாமதித்தல் ; உவமையாகப் பெறுதல் ; சாந்தமாயிருத்தல் .
பொறுதி பொறுமை ; மன்னிப்பு ; ஓய்வு ; தாமதம் ; இளக்காரம் .
பொறுப்பற்றவன் அவசரக்காரன் ; உதவியற்றவன் ; பொறுப்பில்லாதவன் .
பொறுப்பாளி காண்க : பொறுப்புக்காரன் .
பொறுப்பித்தல் பொறுப்புக்கட்டுதல் ; முட்டுக் கொடுத்தல் ; பொறுக்குமாறு செய்தல் ; ஓம்புதல் ; நடத்தல் .
பொறுப்பு பதவி ; கடமை ; பாரம் ; முட்டு : உத்திரவாதம் ; முக்கியம் ; தகுதி ; பொறுமை ; வரி .
பொறுப்புக்கட்டுதல் ஒப்படைத்தல் ; உத்தரவாதமேற்றுதல் ; ஈடுகாட்டுதல் ; முற்றுவித்தல் .
பொறுப்புக்காரன் உத்தரவாதி .
பொறுமை அடக்கம் ; பொறுத்தல் , சகித்தல் .
பொறுமைக்காரன் சாந்தமுள்ளவன் , அமைதியானவன் .
பொறுமைசாலி சாந்தமுள்ளவன் , அமைதியானவன் .
பொறை பாரம் , சுமை ; கனம் ; மலை ; சிறுகுன்று ; கல் ; பூமி ; பொறுமை ; அடக்கம் ; கருப்பம் ; வலிமை .
பொறைநிலை மனத்தை ஒருவழி நிறுத்துவதான எண்வகை யோகத்துள் ஒன்று .
பொறைமை காண்க : பொறுமை .
பொறையன் சுமப்பவன் ; சேரன் ; தருமராசன் .
பொறையாட்டி பொறுமையுடையவள் ; பலிகொடுக்கும் பூசாரிப்பெண் .
பொறையாளன் அடக்கமுடையான் ; தருமபுத்திரன் .
பொறையிலான் பொறுமையில்லாதவன் ; வேடன் .
பொறையுயிர்த்தல் இளைப்பாறும்படி சுமையிறக்குதல் ; மகப்பெறுதல் , ஈனுதல் .
பொன் சாதரூபம் , கிளிச்சிறை , ஆடகம் , சாம்பூநதம் என்னும் நான்கு வகைப்பட்ட தங்கம் ; உலோகம் ; இரும்பு ; செல்வம் ; அணிகலன் ; திருமங்கலியம் ; பொன்நாணயம் ; மேருமலை ; பொலிவு ; பசலை ; ஒளி ; அழகு ; ஏற்றம் ; திருமகள் ; வியாழன் ; சூரியன் ; பெண்குறி .
பொன்காத்தபூதம் புதையல் காத்த பூதம் ; பயன்படுத்தாது பொருளைப் பூட்டிவைத்துக் காப்பவன் .
பொன்செய்கொல்லன் காண்க : பொற்கொல்லன் .
பொன்செய்தல் நற்செயல் செய்தல் .
பொன்செய்புலவன் தட்டான் ; பொன்னரிப்போன் .
பொன்ஞெகிழி பரல்பெய்த பொற்சிலம்பு .
பொன்படுதல் தோற்றப் பொலிவுறுதல் .
பொன்பாவை திருமகள் .
பொன்புனைதல் திருமங்கலியம் பூட்டி மணத்தல் .
பொன்பூணுதல் நகையணிதல் .
பொன்மணல் பொற்றுகள்கொண்ட மணல் .
பொன்மணி பொன்னாலாகிய உருண்டைமணி ; பொன்மணியாலான அணிகலவகை .
பொன்மயம் பொன்னிறமான பளபளப்பு .
பொன்மரம் துறக்கத்துள்ள பொன்மயமான மரம் .
பொன்மலை காண்க : பொன்வரை ; முப்புரங்களுள் ஒன்று : ஓர் ஊர் .