சொல்
|
அருஞ்சொற்பொருள் |
போலிவேலை | கள்ளத்தனமான வேலை . |
போலுதல் | ஒத்தல் ; இணையொத்தல் . |
போலும் | ஓர் அசைச்சொல் ; ஐயப்பாட்டைக் குறிக்குஞ் சொல் . |
போவித்தல் | போக்குதல் . |
போவு | போகை . |
போவுலித்தல் | போக்குதல் . |
போழ் | பிளவு ; தகடு ; தோலால் அமைந்த வார் ; துண்டம் ; பனங்குருத்து . |
போழ்க்கமை | ஒழுக்கக்கேடு . |
போழ்க்கன் | ஒழுக்கக்கேடன் . |
போழ்தல் | பிளவுபடுதல் ; பிரிவுபடுதல் ; பிளத்தல் ; ஊடுருவுதல் ; அழித்தல் . |
போழ்து | காண்க : பொழுது ; நல்வேளை . |
போழ்முகம் | பன்றி . |
போழ்முகி | பன்றி . |
போழ்வாய் | பொக்கைவாய் ; பிளந்த வாய் . |
போழ்வு | பிளவு . |
போழம் | மாறுபடும் சொல் . |
போளம் | மணப்பண்டவகை ; நிலக்கடம்புப் பூண்டு . |
போளி | ஓர் இனிப்புப் பலகாரவகை ; மூடன் . |
போற்றரவு | பேணுகை . |
போற்றலர் | காண்க : போற்றார் . |
போற்றன் | பாட்டன் . |
போற்றார் | பகைவர் . |
போற்றி | துதிச்சொல்வகை ; துதித்தல் , புகழ்மொழி ; கோயிற்பூசை செய்யும் மலையாள நாட்டுப் பார்ப்பனன் ; பாட்டன் . |
போற்றிசெய்தல் | புகழ்தல் , துதித்தல் . |
போற்றிசைத்தல் | புகழ்தல் , துதித்தல் . |
போற்றிமை | வணக்கம் . |
போற்றியாதல் | இடுக்குகை . |
போற்றீடு | பாதுகாவல்வகை . |
போற்று | துதி ; காப்பு . |
போற்றுதல் | வணங்குதல் ; துதித்தல் ; பாதுகாத்தல் ; வளர்த்தல் ; பரிகரித்தல் ; கடைப்பிடித்தல் ; உபசரித்தல் ; விரும்புதல் ; கருதுதல் ; மனத்துக்கொள்ளுதல் ; கூட்டுதல் . |
போற்றுநர் | சுற்றத்தார் ; நன்குணர்வார் . |
போறல் | போலுதல் , ஒத்திருத்தல் . |
போறை | பொந்து ; கிணறு முதலியவற்றின்பக்கம் . |
போன் | எலி பிடிக்கும் பொறி ; பொறி ; மலைக்குகை ; உலைக்குந் துருத்திக்கும் இடையில் சாய்வாகச் செல்லும் அடுப்புப் பாகம் . |
போனக்குருத்து | நுனியுள்ள வாழையிலை . |
போனகச்சட்டி | அன்னம் பரிமாறும் சட்டி . |
போனகத்தி | ஊட்டுந்தாய் ; சமைக்கிறவள் ; வெள்ளாட்டி . |
போனகப்பெட்டி | உணவுப்பண்டங்களை வைக்கும் ஓலைக்கூடைவகை . |
போனகம் | உணவு ; அன்னம் ; அப்பவருக்கம் உண்கை . |
போனகாலம் | சென்ற காலம் . |
போனபோக்கு | மனஞ்சென்ற வழி ; அழிவுநிலை . |
போனம் | உணவு ; அன்னம் ; நிலக்கடம்புப் பூண்டு . |
போனு | பொறி . |
![]() |
![]() |