சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மகாசாமந்தன் | பெரிய படைத்தலைவன் . |
| மகாசூதம் | போர்ப்பறை . |
| மகாசூரன் | பெருவீரன் ; தறுகணாளன் . |
| மகாசேனன் | படைத்தலைவன் ; கந்தன் ; அருகன் ; புத்தன் . |
| மகாசோபம் | நூறுகோடி கோடாகோடி . |
| மகாண்டு | அறுபது ஆண்டுகொண்ட வியாழவட்டம் . |
| மகாத்தியாகம் | பெருந்துறவு . |
| மகாத்துமா | பேரறிஞர் ; பரமஞானி . |
| மகாதசை | சாதகனுக்கு ஒரு கோளின் நடப்புக் காலம் . |
| மகாதலம் | பூமி ; அரிதாரம் ; புண்ணியத்தலம் ; முதன்மைத் தலம் ; கீழேழுலகினுள் ஒன்று . |
| மகாதனம் | பொன் ; வேளாண்மை ; புகை . |
| மகாதுந்துமி | போர்ப்பறை . |
| மகாதுருமம் | அரசமரம் . |
| மகாதேவன் | கடவுள் ; சிவபிரான் ; வருணன் . |
| மகாதேவி | பார்வதி ; பட்டத்தரசி . |
| மகாதோரை | ஒரு பேரெண் . |
| மகாநடன் | சிவபிரான் . |
| மகாநதி | பேராறு ; கங்கை ; ஓர் ஆறு . |
| மகாநவமி | கலைமகள் பூசை நிகழும் ஒன்பான் இரவின் இறுதிநாள் . |
| மகாநாகம் | சுரபுன்னைமரம் ; பெரும்பாம்பு . |
| மகாநாதம் | சங்கு ; சிங்கம் ; பேரொலி ; முகில் ; யானை ; வாத்தியக் கருவி . |
| மகாநித்திரை | இறப்பு ; பெருந்துயில் . |
| மகாநிம்பம் | காண்க : பூவரசு ; மரவகை ; பெருங்கள்ளி ; பீநாறி ; மலைவேம்பு . |
| மகாநேமி | காகம் . |
| மகாப்பிரசாதம் | கோயில்களில் கடவுளுக்குப் படைத்து அடியார்களுக்கு வழங்கும் பொங்கல் முதலியன . |
| மகாப்பிரபு | பெருஞ்செல்வன் ; பெருங்கொடையாளி . |
| மகாபத்திரம் | பனைமரம் . |
| மகாபதுமம் | குபேரனுக்குரிய ஒன்பதுவகை நிதியுள் ஒன்று ; ஒரு பேரெண் ; வெண்டாமரை ; 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுகளையும் உடைய கோயில் ; சித்திரகவி வகை . |
| மகாபலம் | தெங்கு ; வில்வம் ; கொழிஞ்சி ; தூதுவளை . |
| மகாபலை | வில்வம் . |
| மகாபாதகம் | பொய் , கொலை , களவு , கள் , காமம் , என்னும் ஐம்பெரும் பாதகம் . |
| மகாபிரதானி | முதல்மந்திரி . |
| மகாபுருடன் | சான்றோன் . |
| மகாபூரி | ஒரு பேரெண் . |
| மகாபோதி | கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரசமரம் . |
| மகாமகம் | பன்னீராண்டிற் கொருமுறை மாசிமகத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா . |
| மகாமண்டபம் | கோயிலில் அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள பெரிய மண்டபம் . |
| மகாமந்திரமூர்த்திகள் | ஏழரைக் கோடியினரான உயர்தர ஆன்மாக்கள் . |
| மகாமாயி | துர்க்கை . |
| மகாமாயை | பார்வதி ; காண்க : சுத்தமாயை . |
| மகாமார்க்கம் | சிறந்த சமயநெறி . |
| மகாமாரி | துர்க்கை ; கொள்ளைநோய் . |
| மகாமிருகம் | யானை . |
| மகாமுகம் | முதலை . |
| மகாமுனி | பெருந்தபோதனன் ; அகத்தியன் ; புத்தன் . |
| மகாமேதை | பேரறிவு ; பேரறிவாளன் ; மருள் ஊமத்தை . |
| மகமேரு | பொன்மலை , மேருமலை . |
| மகாமேரு | பொன்மலை , மேருமலை . |
| மகாயுகம் | நான்கு யுகம் கூடியதும் 43,20,000 ஆண்டுகள் கொண்டதுமான் காலம் . |
| மகார் | புதல்வர் ; பாலர் ; மக்கள் ; இடக்கு . |
| மகாரதன் | பதினோராயிரம் தேர்வீரரோடு போர்செய்வோன் . |
| மகாராணி | பேரரசி . |
| மகாரோகம் | குட்டம் முதலிய பெருநோய் . |
| மகாலட்சுமி | திருமகள் . |
| மகாலயம் | கோயில் ; பிதிரர்க்குப் புரட்டாசி மாதத்துத் தேய்பிறையில் செய்யும் சிராத்தம் ; பிரமலோகம் ; புரட்டாசி மாதத்துத் தேய்பிறை . |
| மகாலயன் | கடவுள் ; நான்முகன் . |
| மகாவற்புதம் | ஒரு பேரெண் . |
| மகாவாக்கியம் | ' தத்துவமசி ' என்னும் தொடர் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| மகாவிந்தம் | ஒரு பேரெண் ; நளனது தலை நகரம் ; வைகுந்தம் . |
| மகாவிந்து | அப்பிரகம் . |
| மகாவிரதம் | சைவத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்று ; சமண நோன்புவகை . |
| மகாவிலயம் | வானம் ; இதயம் ; குகை ; நீர்ச்சாடி . |
| மகாவீரன் | அக்கினி ; அருகதேவன் ; கருடன் ; திருமால் ; பெருவீரன் . |
| மகான் | அறிவுத்தத்துவம் ; பெரியோன் . |
| மகானுபாவன் | பேரறிஞன் ; சிறந்தவன் ; ஞானி ; கொடைப்பண்பினன் . |
| மகி | பூமி ; பசு . |
| மகிடம் | எருமைக்கடா . |
| மகிடமர்த்தனி | துர்க்கை . |
| மகிடவாகனன் | எருமையை ஊர்தியாகவுடைய யமன் . |
| மகிடவாகனி | எருமையை ஊர்தியாகவுடைய துர்க்கை . |
| மகிடற்செற்றாள் | மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை . |
| மகிடாசுரமர்த்தினி | மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை . |
| மகிடி | காண்க : மகுடி ; வெளிக்காணாமல் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டுவகை ; மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரி கருக்குள் நிகழும் போட்டி . |
| மகிடித்தல் | மக்களித்தல் ; தலைகீழாக விழுதல் . |
| மகிணன் | காண்க : மகிழ்நன் ; சுவாமி . |
|
|
|