மஞ்சிமம் முதல் - மடக்கிடுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மஞ்சிமம் அழகு .
மஞ்சிரம் காலாழி .
மஞ்சில் முதுவரப்பு வழி ; பாதையில் தங்கிச் செல்லும் இடம் .
மஞ்சிலிக்கான் திருநீற்றுப்பச்சை .
மஞ்சிலை செங்கல் .
மஞ்சிவிரட்டு காண்க : சல்லிக்கட்டு .
மஞ்சிறு காண்க : கையாந்தகரை .
மஞ்சீரம் காற்சிலம்பு .
மஞ்சு அழகு ; அணிகலன் ; மேகம் ; வெண்மேகம் ; பனி ; மூடுபனி ; யானையின் முதுகு ; களஞ்சியம் ; கட்டில் ; குறுமாடியின் அடைப்பு ; வீட்டு முகடு ; இளமை ; வலிமை .
மஞ்சுகம் கொக்குவகை .
மஞ்சுளம் அழகு ; மிருது .
மஞ்சூடை பெரிய கூடை ; பெட்டி .
மஞ்சூர்நகல் சரிபார்த்து ஒப்புக்கொண்ட படி .
மஞ்சூரம் கடலை .
மஞ்ஞை மயில் .
மஞ்ஞையீர்க்கு மயிலிறகு .
மஞ்ஞையூர்தி மயில் ஊர்தியனாகிய முருகக்கடவுள் .
மட்கலம் மட்பாண்டம் .
மட்குகை மண்குகை ; மழுங்குதல் .
மட்குதல் ஒளிமங்குதல் ; வலிகுன்றுதல் ; மயங்குதல் ; அழுக்கடைதல் ; அழிதல் .
மட்சாந்து சுவர்கட்ட உதவும் குழைத்த மண்சேறு .
மட்சுவர் மண்ணாலாகிய சுவர் .
மட்டக்கோல் சமனறியும் தச்சுக்கருவி ; கொத்து வேலைக் கருவிகளுள் ஒன்று .
மட்டங்கட்டுதல் தளம் முதலியவற்றின் ஏற்றத் தாழ்வைச் சமனாக்குதல் ; தராசின் தட்டுகளைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல் .
மட்டச்சுவர் சிறுசுவர் .
மட்டஞ்செய்தல் சமனாக்குதல் ; செவ்விதாகச் செய்தல் .
மட்டத்துருத்தி நீர் முதலியன வீசுங்கருவிவகை ; கம்மக்கருவிவகை ; நறுமணம் புகைக்கும் கலம் .
மட்டந்தட்டுதல் சமனாக்குதல் ; செருக்கடக்குதல் .
மட்டப்பலகை சமனறியுந் தச்சுக்கருவி ; மணியாசிப்பலகை ; வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை ; சமனிலை காட்டுங் கொத்துக் கருவி ; உயர்வு தாழ்வுகளைக் காட்ட உதவும் அளவுகோடிட்ட பலகை .
மட்டப்பொன் மாற்றுக் குறைவான பொன் .
மட்டம் அளவு ; சமனிலை ; அளவுகோல் ; எல்லை ; எதிர்பார்ப்பு ; ஒப்பு ; சிறுமை ; தாழ்வு ; மிதம் ; செட்டு ; மையநிலை ; சிறுகுதிரை ; ஆண்யானைக்குட்டி : வாழை , கரும்பு முதலியவற்றின் கன்று ; பொன்மணியின் உறுப்பு ; ஒரே உயரமுள்ள நிலை ; சமவெண் ; மூன்று ஒத்துடைய தாளம் ; குறைவு ; கேடகம் ; கள் .
மட்டம்பார்த்தல் பாதை , சுவர் முதலியவற்றின் ஒழுங்கைக் கவனித்தல் .
மட்டம்பிடித்தல் சமனாக்குதல் ; மதிப்பிடுதல் .
மட்டம்போடுதல் வேண்டுமென்று வேலை முதலியவற்றிற்கு வாராதிருத்தல் .
மட்டம்வெடித்தல் கிளைகப்புகள் உண்டாதல் .
மட்டவேலை பரும்படியான வேலை .
மட்டறிதல் அளவறிதல் ; மதிப்பிடுதல் ; பழகியறிதல் ; ஒப்பிடுதல் ; குறிப்பறிதல் .
மட்டன் மூடன் .
மட்டனம் பூசுகை .
மட்டாய் மிதமாய் ; வேண்டியவளவாக ; ஏற்கத்தக்கதாக ; செட்டாக .
மட்டாயுதம் வாள் .
மட்டி மூடன் ; ஒழுங்கின்மை ; பரும்படியாக அரைத்த சுண்ணச்சாந்து ; பரும்படி ; மக்கு ; சிப்பிமீன் ; ஆயுதம் ; மண்டலிக்கை ; வாழைவகை .
மட்டிடுதல் காண்க : மட்டறிதல் .
மட்டித்தல் அழித்தல் ; முறித்தல் ; பேசுதல் ; மெழுகுதல் ; பிசைதல் ; உறுதிசெய்தல் ; மண்டலித்தல் ; வட்டமாக்குதல் .
மட்டித்தனம் மூடத்தனம் .
மட்டித்தையல் பரும்படியான தையல் .
மட்டிப்பால் மரவகை ; ஒரு மணப்பொருள் வகை .
மட்டியம் எழுவகைத் தாளத்துள் ஒன்று .
மட்டிலை காண்க : பச்சிலை .
மட்டு அளவு ; எல்லை ; எதிர்பார்ப்பு மதிப்பு ; மிதம் ; சாமானியம் ; நிலவளவுவகை ; ஒப்பு ; சிறுமை ; தாழ்வு ; குறைவு ; தேன் ; கள் ; சாறு ; காமபானம் ; மதுவைக்குஞ் சாடி ; மணம் .
மட்டுக்கட்டுதல் நிதானித்தல் ; இனம் அறிந்து கொள்ளுதல் ; உணர்தல் ; மதிப்பிடுதல் ; அனுமானித்தல் ; அளவுக்குட்படுத்தல் ; தடுத்தல் ; சரிநிலைக்கு வருதல் .
மட்டுக்குமிஞ்சுதல் அளவுகடத்தல் .
மட்டுக்குழி அளவாக வெட்டிய குழி .
மட்டுக்கோணம் நேர்கோணம் .
மட்டுக்கோல் அளவுகழி .
மட்டுத்தப்பு நிதானமின்மை .
மட்டுத்தப்புதல் இலக்குத் தவறுதல் ; மரியாதை தவறுதல் ; அளவுகடந்து செலவிடுதல் ; மிதமிஞ்சுதல் .
மட்டுத்திட்டம் மதிப்பு ; அளவு ; நன்னடத்தை .
மட்டுப்படுதல் அளக்கப்படுதல் ; வரையறைப்படுதல் ; உணரப்படுதல் ; குறைதல் .
மட்டும் வரை ; மாத்திரம் .
மட்டுமதிப்பு தகுதிக்கேற்ற மரியாதை ; நன்னடை .
மட்டுமதியம் சரியளவு ; அளவு ; மதிப்பு ; நன்னடத்தை .
மட்டுமரியாதை காண்க : மட்டுமதிப்பு .
மட்டுமிஞ்சுதல் அளவுமீறுதல் .
மட்டை தென்னை , பனை முதலியவற்றின் மடல் ; தேங்காயின் மேல்தோடு ; நாற்பத்தைந்து கவளிகொண்ட வெற்றிலைக் கட்டு ; பந்தடிக்கும் மட்டை ; பாம்பு ; மொட்டை ; அட்டை ; உடற்குறை ; மூடன் ; பயனற்றவர் ; பயனற்றது ; ஒரு மட்டமான நெல்வகை ; மாசுள்ள நெல்மணி ; பிணம் .
மட்டைத்தும்பு பனைநார் .
மட்டையர் சமணர் .
மட்பகை மட்கலமறுக்குங் கருவி ; குயவன் . .
மட்பகைஞன் குயவன் .
மட்பலகை சுடாத செங்கல் .
மட்பாண்டம் குயக்கலம் .
மட்பாம்பு காண்க : ஆதிசேடன் .
மடக்கடி கோணல் , சமனின்மை ; அபாயம் ; தந்திரம் ; வலைக்குட்படுத்துகை ; சூதுமொழி .
மடக்கம் வளைவு ; பணிவு ; மனவடக்கம் ; வணக்கம் ; நோய் திரும்புகை .
மடக்கிடுதல் மேற்செல்லாது தடுத்துவைத்தல் ; வாய்மடுத்தல் .