சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மனமாசு | மனக்குற்றம் . |
| மனமிடுக்கு | காண்க : மனத்திடம்(ன்) . |
| மனமிளகுதல் | மனமிரங்குதல் . |
| மனமிறுகுதல் | கடினமனமாதல் ; உலோபகுணங் கொள்ளுதல் . |
| மனமுடைதல் | காண்க : மனமுறிதல் . |
| மனமுளைதல் | மனம் வருந்துதல் . |
| மனமுறிதல் | துன்பத்தால் ஊக்கங்குன்றுதல் . |
| மனமுறிவு | ஊக்கமிழக்கை . |
| மனவிகற்பம் | மனவேறுபாடு . |
| மனவிகாரம் | மனத்திரிவு ; பைத்தியம் . |
| மனவிருப்பம் | ஆசை ; மனத்திற்கு உகந்தது . |
| மனவிழி | இசைப்பாட்டுவகை . |
| மனவு | மணி ; அக்குமணி ; சங்கு ; அரையிற் கட்டும் பட்டிகை ; புடைவை . |
| மனவுருக்கம் | மனமிளகுதல் . |
| மனவுறுதி | காண்க : மனத்திடம்(ன்) . |
| மனவூக்கம் | காண்க : மனத்திடம்(ன்) . |
| மனவெரிச்சல் | பொறாமை . |
| மனவெழுச்சி | உள்ளக்கிளர்ச்சி . |
| மனவேகம் | மனத்தின் வேகம்போன்ற விரைவு ; சினம் . |
| மனவொடுக்கம் | மனத்தை ஒருமுகப்படுத்துகை ; அமைதி ; அடக்கம் . |
| மனவொன்றிப்பு | மனவொற்றுமை ; மனத்தை ஒருமுகப்படுத்துகை . |
| மனனம் | சிந்திக்கை ; நினைவில் வைக்கை ; எல்லாமறிகை ; எண்ணம் . |
| மனா | அக்குமணி ; அரையிற் கட்டும் பட்டிகை . |
| மனாகுலம் | காண்க : மனத்துயர் . |
| மனாலம் | குங்குமமரம் ; காண்க : சாதிலிங்கம் . |
| மனாவு | அரையிற் கட்டும் பட்டிகை . |
| மனிச்சடித்தல் | பெருமையாகப் பேசுதல் . |
| மனிச்சர் | மனிதர் . |
| மனிச்சு | ஆண்தகைமை . |
| மனிசன் | மனிதன் . |
| மனிதகணம் | காண்க : மனுகுலம் ; உரோகிணி , பரணி , திருவாதிரை , பூரத்திரயம் , உத்தரத்திரயம் ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் . |
| மனிதசஞ்சாரம் | மனிதர் நடமாடுகை . |
| மனித்தன் | ஆண்மகன் . |
| மனிதன் | ஆண்மகன் . |
| மனிலாக்கொட்டை | காண்க : மணிலாக்கொட்டை . |
| மனிலாப்பயிறு | காண்க : மணிலாக்கொட்டை . |
| மனு | சூரியகுலத்து முதலரசனான ஏழாம் மனு ; அறநூல் பதினெட்டனுள் ஒன்றான மனுதருமசாத்திரம் ; அறநூல் ; மந்திரம் ; மனிதன் ; சோழமன்னர்களின் முன்னோன் ; விண்ணப்பம் ; சொல் ; அளவுவகை ; பதினான்கு ஆதி அரசர் . |
| மனுகுலம் | மனிதசாதி ; சூரியமரபு . |
| மனுசரிதன் | மனுநீதிப்படி அரசியல் புரிவோன் . |
| மனுசன் | ஆண்மகன் . |
| மனுடன் | ஆண்மகன் . |
| மனுதார் | விண்ணப்பஞ் செய்வோன் . |
| மனுதாரி | விண்ணப்பஞ் செய்பவள் . |
| மனுநெறி | அளவுவகை ; நீதி . |
| மனுப்படுதல் | பூப்படைதல் ; பசு முதலியன சினையாதல் ; பயன்படுதல் . |
| மனுமக்கள் | மனிதர்கள் . |
| மனுமகன் | உயர்குடியிற் பிறந்தவன் ; நாணயமானவன் . |
| மனுவர் | கொல்லர் ; மனிதர் . |
| மனை | வீடு ; வீடுகட்டுதற்குரிய நிலம் ; நில அளவுவகை ; குடும்பம் ; மனைவி ; இல்வாழ்க்கை ; சூதாடுபலகையின் அறை ; நற்றாய் . |
| மனைக்கட்டு | வீடுகட்டுதற்குரிய இடம் . |
| மனைக்கிழத்தி | வீட்டுக்குரியவளான மனைவி . |
| மனைக்கிழவன் | வீட்டுக்குரியவனான கணவன் . |
| மனைக்கோள் | பல்லி . |
| மனைகட்டுதல் | சொக்கட்டானில் ஓர் ஆட்டம் வெல்லுதல் . |
| மனைகோலுதல் | வீடு கட்டுதல் . |
| மனைச்சீட்டு | மனையின் விலையாவணம் . |
| மனைத்தாயம் | இல்லறவொழுக்கம் . |
| மனைப்படப்பு | வீட்டுக்கொல்லை . |
| மனைப்படப்பை | வீட்டுக்கொல்லை . |
| மனைப்பலி | மனையுறை தெய்வங்கட்கு இடும் பலி . |
| மனைமரம் | தேற்றாமரம் . |
| மனைமுதல் | மனைவி . |
| மனையறம் | இல்லறம் . |
| மனையாட்டி | மனைவி . |
| மனையாள் | மனைவி . |
| மனையிறை | வீட்டுவரி . |
| மனையுறைமகள் | திருமணமான பெண் . |
| மனையோள் | மனைவி . |
| மனைவழி | வீட்டுக்குரிய இடம் . |
| மனைவாழ்க்கை | இல்வாழ்க்கை . |
| மனைவி | இல்லாள் ; மருதநிலத்தின் தலைவி ; மனையையுடையாள் . |
| மனைவீடு | மனையும் வீடும் ; ஊர்நத்தம் . |
| மனைவேலி | வீட்டின் எல்லைச்சுவர் . |
| மனைவேள்வி | இல்லறம் . |
| மனோக்கியம் | இன்பமானது ; விரும்பப்படுந்தன்மை ; அழகுடைத்தன்மை . |
|
|
|