சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மாசூல் | பயிரின் விளைச்சல் . |
மாசேனன் | அருகன் ; திருமால் ; கடவுள் ; முருகன் . |
மாசை | பொன் ; உழுந்து நிறையளவுள்ள பழைய நாணயம் . |
மாஞ்சம் | காண்க : மாமிசம் . |
மாஞ்சி | மணப்பண்டம் ; காண்க : சடாமாஞ்சில் ; சணல் ; ஒரு பண்வகை . |
மாட்சி | பெருமை ; விளக்கம் ; இயல்பு ; அழகு . |
மாட்சிமை | பெருமை . |
மாட்டடி | மாட்டின் அடிவைப்பு ; கடுமையான அடி . |
மாட்டல் | மகளிர் காதணியிலிருந்து தலைமயிரில் மாட்டும் ஓரணி . |
மாட்டாங்கோல் | மாட்டையோட்டுங்கோல் . |
மாட்டாதார் | வல்லமையில்லாதார் . |
மாட்டார் | வல்லமையில்லாதார் . |
மாட்டிக்கொள்ளுதல் | சிக்கிக்கொள்ளுதல் . |
மாட்டிவிடுதல் | தொழுக்கட்டை முதலியவற்றிற் சேரவிணைத்தல் ; அகப்படுத்துதல் . |
மாட்டிறக்கம் | ஆற்றிலே மாடிறக்குந் துறை . |
மாட்டு | அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற் கொண்டுகூட்டிய சொல் முடிவுகொள்ளும் முறை ; அடி ; சொல் . |
மாட்டுக்காரன் | மாட்டிற்குரியவன் ; மாடுமேய்ப்பவன் . |
மாட்டுக்கிடை | மாட்டுமந்தை ; பசுத்தொழுவம் . |
மாட்டுக்கொட்டகை | மாடு கட்டும் இடம் . |
மாட்டுக்கொட்டில் | மாடு கட்டும் இடம் . |
மாட்டுத்தனம் | விலங்குத்தன்மை . |
மாட்டுத்தும்பு | மாடு கட்டுவதற்கான கவையுள்ள புரிக்கயிறு . |
மாட்டுதல் | இணைத்தல் ; தொடுத்தல் ; செருகுதல் ; செலுத்துதல் ; உட்கொள்ளுதல் ; கற்றுவல்லனாதல் ; அடித்தல் ; விளக்கு முதலியன கொளுத்துதல் ; எரித்தல் ; கூடியதாதல் ; வலிபெறுதல் ; மாளச்செய்தல் ; அழித்தல் ; போக்குதல் . |
மாட்டுப்பறங்கிக்காய் | காண்க : சாம்பற்பூசணி . |
மாட்டுப்புத்தி | மிகுந்த அறிவுக்குறைவு . |
மாட்டுப்பெண் | மகனின் மனைவி . |
மாட்டுப்பொங்கல் | தைமாதம் இரண்டாம் நாள் மாட்டுக்கு நன்றிசெலுத்தப் பொங்கலிடுவதான பண்டிகை . |
மாட்டுவாரம் | குடியானவன் உதவும் உழவு மாட்டுக்குத் தகக்படி மேல்வாரக்காரன் அவனுக்குக் கொடுக்கும் விளைச்சலின் பங்கு . |
மாட்டுவித்தல் | அழியச் செய்தல் ; இணையும்படி செய்தல் . |
மாட்டெறிதல் | ஏறிட்டுக் கூறுதல் ; ஆவணத்தின் மேற்புறத்தே விவரக்குறிப்பு எழுதுகை . |
மாட்டேறு | முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றானதும் ஒரு சூத்திரத்தில் கூறிய விதியை அதனையொத்த சூத்திரங்கட்கும் இணைத்துக் கொள்வதுமான உத்தி . |
மாடக்குழி | சுவரில் உள்ளடங்கிய புரை . |
மாடகம் | யாழின் முறுக்காணி . |
மாடகூடம் | காண்க : மாடிவீடு . |
மாடநிலை | உபரிகை . |
மாடப்புறா | ஒரு புறாவகை . |
மாடம் | உபரிகையுள்ள வீடு ; வீடு ; குடிசை ; காண்க : மாடக்குழி ; உழுந்து ; ஒரு நிறை ; மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக் கோச்செங்கணான் கட்டிய சிவாலயம் . |
மாடமாளிகை | காண்க : மாடகூடம் . |
மாடவீதி | கோயிலைச் சுற்றியுள்ள தெரு . |
மாடன் | ஒரு சிறுதெய்வம் ; மூடன் . |
மாடாபத்தியம் | மடத்தின் தலைமை அதிகாரம் ; கோயில் விசாரணை . |
மாடி | உபரிகை ; இக்கட்டு ; கோபம் ; புடைவையோரம் ; ஓர் ஊர்த்தேவதை . |
மாடியம் | காப்புச்சட்டை , கவசம் . |
மாடிவீடு | உபரிகையுள்ள வீடு . |
மாடு | எருது ; பக்கம் ; இடம் ; ஏழனுருபு ; செல்வம் ; பொன் ; சீதனம் ; அகன்மணி . |
மாடுசாய்த்தல் | மாடுகளை ஒருசேர ஓட்டிச் செலுத்துதல் . |
மாடுசாய்தல் | மாடுகள் ஒருசேர மாலையில் வீடு நோக்கி வருகை . |
மாடுவரும்வேளை | மேய்ச்சலானபின் மாடுகள் திரும்பிவரும் காலம் ; மாலைவேளை . |
மாடை | பொன் , அரை வராகன் ; ஒரு பழைய நாணயவகை ; மாட்டுக்கொம்பு முதலியன கீழ்நோக்கி வளைந்திருத்தல் . |
மாடைக்கொம்பன் | கீழ்நோக்கி வளைந்த கொம்புள்ள மாடு . |
மாடோட்டும்வேளை | மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் காலைவேளை . |
மாண் | மாட்சிமை ; மடங்கு ; மாணவன் ; பிரமசாரி ; குள்ளமானவர் . |
மாண்டல் | மாட்சிமைப்படுதல் ; இறத்தல் . |
மாண்டவர் | மாட்சிமையுள்ளவர் ; இறந்தவர் . |
மாண்டார் | மாட்சிமையுள்ளவர் ; இறந்தவர் . |
மாண்பு | பெருமை ; அழகு ; நன்மை ; மாட்சிமை . |
மாணம் | மாட்சிமை . |
மாணல் | மாட்சிமை ; நன்மை . |
மாணவ்வியம் | பிள்ளைத்தன்மை ; மாணவர்கூட்டம் . |
மாணவகம் | கல்வி . |
மாணவகன் | பிரமசாரி ; மாணாக்கன் ; எட்டு முதல் பதினாறு ஆண்டிற்குட்பட்ட சிறுவன் ; அறிவீனன் . |
மாணவம் | பிரமசரியம் ; பதினாறு கோவையுள்ள முத்தாரம் . |
மாணவன் | பிரமசாரி ; மாணாக்கன் ; படிக்கும் சீடன் . |
மாணவி | காண்க : மாணாக்கி . |
மாணாக்கன் | பள்ளியில் படிக்கும் சிறுவன் . |
மாணாக்கி | பள்ளியில் படிக்குஞ் சிறுமி . |
மாணார் | மாட்சிமையற்ற பகைவர் . |
மாணி | பிரமசாரி ; குறள்வடிவம் ; அழகு ; ஆண்குறி . |
மாணிக்கத்தாள் | விலைமகள் . |
மாணிக்கப்பட்டை | கோயிலின் திருமதில் முதலியவற்றில் அடிக்கும் சிவப்புப்பட்டை . |
மாணிக்கப்பீடம் | மணிவைத்து இழைத்த மோதிரம் . |
மாணிக்கம் | ஒன்பான் மணியுள் ஒன்றான சிவப்பு மணி . |
மாணிக்கமாலை | வெள்ளை சிவப்பு வளையங்கள் மாறிமாறிவரத் தொடுத்த பூமாலைவகை . |
மாணை | ஒரு கொடிவகை . |
மாத்தகை | பெருந்தகுதியுள்ளவன் . |
![]() |
![]() |
![]() |