மானவன் முதல் - மானேறு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மானவன் மனிதன் ; பெருமையுடையோன் ; அரசன் ; படைத்தலைவன் ; வீரன் .
மானவாரி காண்க : மானம்பார்த்தபூமி ; மழை பெய்து விளையும் விளைச்சல் ; ஒரு நெல்வகை .
மானவாரிநிலம் காண்க : மானம்பார்த்தபூமி .
மானவிலங்கு காண்க : மானமா .
மானவிறல்வேள் முற்காலத்துச் சிற்றரசர் சிலருக்கு வழங்கிய பட்டபெயர் .
மானவீனம் காண்க : மானக்கேடு .
மானவு தெளிவு .
மானன் தலைவன் ; மூடன் ; வேடன் ; மதிப்புள்ளவன் .
மானா பாட்டன் ; தகப்பன் .
மானாகம் காண்க : பெருநாரை .
மானாங்காணி யோசனையின்மை ; ஒழுங்கீனம் .
மானாபரணன் மானமாகிய அணிகலனை அணியாக அணிந்தவன் .
மானார் பெண்டிர் ; பகைவர் .
மானாவாரி மனப்போக்கு ; ஒரு விளைச்சல் ; விழிப்பின்மை ; மழைபெய்து விளையும் விளைச்சல் .
மானாவி நவராத்திரி விழா ; காண்க : மானாவிச்சோலை .
மானாவிச்சோலை ஒன்பான் இரவு (நவராத்திரி) விழாவில் அமைக்கும் அலங்காரச் சோலை .
மானாள் காண்க : மானுடத்தி .
மானி மதிப்புள்ளவர் ; செருக்குடையவர் ; மங்கையர்க்கரசியார் ; மாமன் .
மானிகை சாராயம் .
மானிடச்சட்டை தெய்வந்தாங்கும் மானிட வடிவம் .
மானிடசாதி மக்கட்பிறப்பு ; காண்க : மானிடம் .
மானிடசென்மம் மக்கட்பிறப்பு ; காண்க : மானிடம் .
மானிடத்தன் மானை இடக்கையில் ஏந்தியவனாகிய சிவபிரான் .
மானிடத்தன்மன் குபேரன் .
மானிடம் மக்கள்தொகுதி ; மனிதன் .
மானிடமேந்தி காண்க : மானிடத்தன் .
மானிடவன் காண்க : மானுடவன் .
மானிடவேள்வி விருந்தினரைப் போற்றுதல் .
மானிடன் மனிதன் ; காண்க : மானிடத்தன் .
மானித்தல் நாணுதல் ; செருக்குக்கொள்ளுதல் ; பெருமைப்படுத்துதல் .
மானிதம் சிறப்பு .
மானிதை சிறப்பு .
மானியக்காரன் சொந்தநிலக்காரன் .
மானியம் இறையிலி நிலம் ; அளவிடுகை ; நிலத்தின் தீர்வையை இனாமாகப் பெறும் உரிமை .
மானினி பெண் .
மானுடத்தி பெண் .
மானுடம் காண்க : மானிடசாதி ; மானிடவேள்வி .
மானுடமடங்கல் திருமாலின் நரசிம்மாவதாரம் .
மானுடயாகம் காண்க : மானிடவேள்வி .
மானுடவன் மனிதன் .
மானுதல் ஒத்தல் .
மானேறு உத்தரநாள் ; கலைமான் .