சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மிடுமிடுத்தல் | விரைதல் . |
மிடை | பரண் ; புணர்ச்சி ; நெருக்கம் ; தூறு . |
மிண்டன் | திண்ணியன் ; அறிவில்லாதவன் . |
மிண்டி | நெம்புதடி . |
மிண்டு | வலிமை ; முட்டு ; துணிவு ; அறிந்து செய்யுங் குற்றம் ; துடுக்கு ; இடக்கர்ப்பேச்சு ; செருக்கிக்கூறும் மொழி . |
மிண்டுதல் | நெருங்குதல் ; வலியதாதல் ; நிறைதல் ; மதங்கொள்ளுதல் ; போரிற் கலத்தல் ; நெம்புதல் ; குத்துதல் ; செருக்காகப் பேசுதல் ; முன்தள்ளுதல் . |
மிண்டை | கண்ணின் கருவிழி . |
மிணுமிணுத்தல் | காண்க : முணமுணத்தல் ; இரகசியம் பேசுதல் ; மந்திரஞ் செபித்தல் . |
மிணுமிணுப்பு | முணுமுணுப்பு . |
மித்திஞ்சயம் | காண்க : மிருத்தியுஞ்சயம் . |
மித்தியம் | பொய் . |
மித்தியாத்துவம் | உண்மைநிலை மறைகை ; பிரகிருதி தத்துவங்களுள் ஒன்று . |
மித்தியாமதி | அறியாமை ; பிழை . |
மித்தியை | பொய் ; கபடம் . |
மித்திரநாள் | அனுடநாள் . |
மித்திரபேதம் | நட்பினரைப் பிரித்தல் . |
மித்திரம் | நட்பு ; பொய்கூறுகை ; கோள் . |
மித்திரன் | நண்பன் ; உறவினன் ; பதினோர் ஆதித்தருள் ஒருவன் ; சூரியன் . |
மித்திரை | தோழி . |
மித்துரு | நண்பன் . |
மித்துருத்தானம் | சன்மலக்கினத்துக்கு நாலாமிடம் . |
மித்தை | பொய் . |
மிதத்தல் | நீர் முதலியவற்றின்மேற் கிடத்தல் ; மேலெழும்புதல் ; அளவிற்குமேற் குவிதல் ; மிகுதல் ; வீண்பெருமை பண்ணுதல் . |
மிதப்பு | உயர்ச்சி ; மேடு ; தெப்பம் ; செழிப்பு ; பொருட்படுத்தாமை ; மேலெழுந்த தன்மை ; நீர் முதலியவற்றின்மேற் கிடக்கை ; தூண்டில் , வலை முதலியவற்றில் நீர்மேல் மிதக்குமாறு அமைத்த மரச்சக்கை . |
மிதம் | அளவு ; நிதானம் ; நடுத்தரமானது . |
மிதலை | கொப்பூழ் . |
மிதவாதி | தணிப்பாளன் , நிதானமான கொள்கையாளன் . |
மிதவை | தெப்பம் ; சோறு ; கூழ் ; கும்மாயம் . |
மிதாசனி | அளவாக உண்பவர் ; சிறியவளவு உண்பவர் . |
மிதி | மிதிக்கை ; அடிவைப்பு ; படிக்கல் ; நெய்வார் கருவியுள் ஒன்று ; மிதித்துத் திரட்டப் பெற்ற கவளம் ; நடை ; அளவு ; அறிவு ; சான்று . |
மிதித்தல் | அடிவைத்தல் ; காலால் துவைத்தல் ; அவமதித்தல் ; பாய்தல் ; குதித்தல் . |
மிதிதோல் | துருத்தி . |
மிதிபலகை | அடி வைக்கும் படிப்பலகை . |
மிதிபாகல் | ஒரு பாகல்வகை . |
மிதியடி | பாதுகை , செருப்பு . |
மிதியிடுதல் | அடியால் குறிசெய்தல் ; காலால் துவைத்தல் . |
மிதிலைநாடி | சீதை . |
மிதிவண்டி | மிதித்து ஓட்டும் சைக்கிள்வண்டி , ஈருருளி . |
மிதுக்கை | தும்மட்டிக்கொடி . |
மிதுனம் | இரட்டை ; புணர்ச்சி ; மிதுனராசி ; ஆனிமாதம் ; ஆண்பெண் இரட்டை ; ஒரு பறவைவகை . |
மிதுனவீதி | சூரியவீதியுள் ஒன்று . |
மிதுனன் | மிதுனராசிக்குடையவனான புதன் . |
மிதுனி | காண்க : கரிக்குருவி . |
மியா | ஒரு முன்னிலை அசைச்சொல் . |
மிரட்டுதல் | அச்சுறுத்தல் ; மயக்குதல் ; ஓட்டுதல் . |
மிரதம் | பாம்பு . |
மிரள்தல் | மயங்கி அஞ்சுதல் . |
மிரளுதல் | மயங்கி அஞ்சுதல் . |
மிராசி | மரபுவழி நிலவுரிமை ; நிலம் , உத்தியோகம் இவை தொடர்பாக வழிவழியாய் வரும் முழு உரிமை . |
மிராசு | மரபுவழி நிலவுரிமை ; நிலம் , உத்தியோகம் இவை தொடர்பாக வழிவழியாய் வரும் முழு உரிமை . |
மிராசுகுடி | வழிவழி நிலவுரிமை உடையவன் . |
மிரிநாளம் | தாமரை . |
மிரியம் | மிளகு . |
மிரியல் | மிளகு . |
மிருகசஞ்சாரம் | விலங்கு திரியுமிடம் ; நாணமில்லாப் புணர்ச்சி ; விலங்கோடு புணர்கை . |
மிருகசீரிடம் | ஐந்தாம் நட்சத்திரம் . |
மிருகதரன் | சந்திரன் . |
மிருகதூர்த்தகன் | நரி . |
மிருகநாதன் | காண்க : மிருகபதி . |
மிருகநாபி | கத்தூரி ; கத்தூரிமான் . |
மிருகபதி | விலங்குகட்கு அரசனான அரிமா . |
மிருகம் | விலங்கு ; மான் ; விலங்கின் பொது ; மிருகசீரிடநாள் ; பன்றி ; யானைவகை ; கத்தூரிமான் ; பாம்பு . |
மிருகமதம் | கத்தூரி ; கத்தூரிவிலங்கு ; கத்தூரிமஞ்சள் . |
மிருகராசன் | விலங்குகட்கு அரசனான அரிமா ; வேங்கைப்புலி . |
மிருகவாகனன் | மானை ஊர்தியாகவுடைய வாயுதேவன் . |
மிருகாங்கம் | காற்று ; சந்திரன் . |
மிருகாங்கன் | சிவன் ; சந்திரன் . |
மிருகாசனம் | அரிமா ; புலி . |
மிருகாண்டி | விலங்காண்டி ; காட்டுமிராண்டி . |
மிருகாதனம் | காண்க : மிருகாசனம் ; சிவிங்கி ; கழுதைப்புலி . |
மிருகாதிபதி | காண்க : மிருகபதி ; ஐயனார் . |
மிருகாரி | காண்க : மிருகாசனம் ; நாய் ; நரி . |
மிருகேந்திரன் | அரிமா ; சிம்மராசி . |
மிருசம் | காட்சி . |
மிருஞ்சி | செம்முருங்கை . |
![]() |
![]() |
![]() |