சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மீறுதல் | ஆணை முதலியன கடத்தல் ; மேற்போதல் ; அதிகாரஞ்செய்தல் ; மிகுதல் ; எஞ்சியிருத்தல் ; பெரியதாய் வளர்தல் ; செருக்கடைதல் . |
| மீன் | நீர்வாழ் உயிரி ; விண்மீன் ; சித்திரைநாள் ; அத்தநாள் ; மீனராசி ; சுறா ; நெய்தல்நிலப்பறை . |
| மீன்கவிச்சு | மீனின் நாற்றம் . |
| மீன்காரன் | மீன்விற்போன் ; செம்படவன் . |
| மீன்காரி | மீன்விற்பவள் ; செம்படத்தி . |
| மீன்குஞ்சு | மீனின் இளமை . |
| மீன்குத்தி | மீன்கொத்திப்பறவை ; பாரைக்கோல் . |
| மீன்கொடியோன் | காண்க : மீனக்கொடியோன் . |
| மீன்கொத்தி | சிச்சிலிப்பறவை . |
| மீன்கொழுப்பு | திமிங்கிலநெய் . |
| மீன்கோட்பறை | நெய்தல்நிலப் பறை . |
| மீன்சிதள் | காண்க : மீன்செதில்(ள்) . |
| மீன்சிறகு | சிறகுபோலக் காணப்படும் மீனின் உறுப்பு . |
| மீன்சினை | மீன்முட்டை ; மீனின் கொழுப்பு . |
| மீன்செகிள் | மீனின் மேற்புறத்தேயுள்ள பிரால் . |
| மீன்செதில் | மீனின் மேற்புறத்தேயுள்ள பிரால் . |
| மீன்செதிள் | மீனின் மேற்புறத்தேயுள்ள பிரால் . |
| மீன்செலு | மீனின் மேற்புறத்தேயுள்ள பிரால் . |
| மீன்பறி | மீன்பிடிக்குங் கூட்டுப்பொறி . |
| மீன்பாடு | மீன்கள் வலையுட்படுகை . |
| மீன்பிரால் | காண்க : மீன்செதில்(ள்) . |
| மீன்மடை | குளங்குட்டைகளில் மீன்பிடித்தற்கு அமைத்த சிறிய மண்ணணை . |
| மீன்முள் | மீனெலும்பு . |
| மீன்வேட்டை | மீன்பிடிக்கை . |
| மீனக்கொடியோன் | மீன் வடிவமெழுதிய கொடியையுடைய பாண்டியன் ; மன்மதன் . |
| மீனகேதனன் | மீன் வடிவமெழுதிய கொடியையுடைய பாண்டியன் ; மன்மதன் . |
| மீனங்கம் | காண்க : மீன்முள் . |
| மீனச்சனி | மீனராசியிலுள்ள சனி . |
| மீனத்துவசன் | காண்க : மீனக்கொடியோன் . |
| மீனநிலயம் | காண்க : மீனாலயம் . |
| மீனம் | உடு ; மீன் ; காண்க : மீனராசி ; பங்குனி மாதம் . |
| மீனம்பர் | மீன்வயிற்றில் அகப்படும் ஒரு மணப்பண்டவகை . |
| மீனரசு | உடுக்களின் அரசான சந்திரன் . |
| மீனராசி | மேடத்திலிருந்து பன்னிரண்டாம் ராசி . |
| மீனவன் | மீன்கொடியையுடையவனான பாண்டியன் . |
| மீனவுச்சன் | மீனராசியை உச்சத்தானமாகக் கொண்டவனான சுக்கிரன் . |
| மீனன் | மீனராசியை வீடாக உடைய வியாழன் . |
| மீனா | வயிரமுள்ள மரவகை . |
| மீனாட்சி | மதுரைத் தெய்வமாகிய உமாதேவி , அங்கயற்கண்ணி , பொன்னாங்காணிக்கீரை . |
| மீனாண்டி | சருக்கரை . |
| மீனாம்பூச்சி | காண்க : மின்மினிப்பூச்சி . |
| மீனாய் | நீர்நாய் . |
| மீனாலயம் | மீன்களின் இருப்பிடமான கடல் . |
| மீனிலா | உடுக்களின் வெளிச்சம் . |
| மீனுணங்கல் | கருவாடு . |
| மீனூர்தி | மீனை ஊர்தியாகவுடைய வருணன் . |
| மீனெண்ணெய் | ஒருவகை மீனிலிருந்து எடுக்கும் நெய் . |
| மீனெய் | ஒருவகை மீனிலிருந்து எடுக்கும் நெய் . |
| மீனெறிபறவை | மீன்கொத்திப்பறவை . |
| மீனேறு | சுறாமீன் . |
|
|