சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| முகிழ்த்தல் | அரும்புதல் ; தோன்றுதல் ; குவிதல் ; தோற்றுவித்தல் ; ஈனுதல் . |
| முகிழ்தல் | குவிதல் . |
| முகிழ்நகை | புன்சிரிப்பு . |
| முகிழ்ப்புறம் | காய் , பூ முதலியவற்றின் காம்படி . |
| முகிழம் | மலரும்பருவத்து அரும்பு . |
| முகிழித்தல் | காண்க : முகிழ்தல் . |
| முகிழிதம் | அரும்பு , காய் , பூ முதலியவற்றின் காம்படி ; தேங்காய் முதலியவற்றின் மடல் ; தயிர் முதலியவற்றின் கட்டி ; இணையாவினைக்கைவகை . |
| முகிள் | அரும்பு . |
| முகிளம் | அரும்பு . |
| முகிளிதம் | அரும்பு ; சிறிது குவிகை . |
| முகிற்குன்றம் | மேகமூடிய மலை ; வக்கிராந்த பாடாணம் . |
| முகின்மேனி | காண்க : முகில்வண்ணன் . |
| முகினாயகன் | வருணன் . |
| முகினி | புளியமரம் . |
| முகு | விருப்பம் ; மனநிறைவு . |
| முகுடம் | முடி ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று . |
| முகுத்தம் | காண்க : முகூர்த்தம் . |
| முகுந்தம் | குபேரன் நவநிதிகளுள் ஒன்று . |
| முகுந்தன் | திருமால் . |
| முகுர்த்தம் | காண்க : முகூர்த்தம் . |
| முகுரம் | கண்ணாடி ; பெருமல்லிகை ; தளிர் . |
| முகுலி | தாழைமரம் . |
| முகுளம் | அரும்பு ; தாமரைத்தண்டு ஐந்து விரலும் தம்மில் தலைகுவிந்து உயர்ந்துநிற்கும் இணையாவினைக்கைவகை ; யோகாசனவகை ; ஆசனவகை ; மூளையின் பின்பகுதி . |
| முகுளாதனம் | இரண்டு கையும் முதுகிலே கூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை . |
| முகுளித்தல் | காண்க : முகிழ்தல் . |
| முகூர்த்தக்கால் | கலியாணப் பந்தலுக்கு நல்வேளையில் முதலாக நாட்டும் பந்தற்கால் . |
| முகூர்த்தம் | நேரம் ; நல்வேளை ; ஒன்றரை மணி நேரங்கொண்ட காலவளவை ; இரண்டு நாழிகை கொண்ட நேரம் ; திருமணம் . |
| முகூர்த்தம்பார்த்தல் | திருமணம் முதலிய நற்செயல்களுக்கு நல்வேளை ஆராய்தல் ; காண்க : முகூர்த்தம்வைத்தல் . |
| முகூர்த்தம்வைத்தல் | திருமணம் உறுதிசெய்தல் ; நல்வேளை குறித்தல் . |
| முகூர்த்தவிதானி | முகூர்த்தம் விதிப்பவன் . |
| முகேரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| முகை | அரும்பு ; மொட்டு ; குகை ; கூட்டம் ; மிடா . |
| முகைத்தல் | அரும்புதல் . |
| முகைதல் | அரும்புதல் . |
| முகைதிறத்தல் | அரும்பு மலர்தல் . |
| முங்குதல் | நீரில் மூழ்குதல் ; அமிழ்தல் ; நிறைதல் . |
| முச்சக்கரம் | மூவுலகங்களான துறக்க மத்திய பாதாள உலகங்கள் . |
| முச்சகம் | மூவுலகங்களான துறக்க மத்திய பாதாள உலகங்கள் . |
| முச்சங்கம் | பாண்டியமன்னர் ஆதரவில் புலவர்கள் கூடி ஆராய்ந்த தலை , இடை , கடைச் சங்கம் என்னும் மூவகைத் தமிழ்ச் சங்கங்கள் . |
| முச்சட்டை | அழகு ; ஒழுங்கு . |
| முச்சத்தி | பிரபுசத்தி , மந்திரசத்தி , உற்சாகசத்தி என்னும் அரசர்க்குரிய மூவகை ஆற்றல் . |
| முச்சதுரம் | முக்கோணம் , காண்க : சதுரக்கள்ளி . |
| முச்சந்தி | காலை , உச்சி , மாலை என்னும் முக்கால சந்தி ; மூன்று தெருக்கள் கூடுமிடம் . |
| முச்சலிக்கா | உடன்படிக்கைப் பத்திரம் ; பிணையப் பத்திரம் . |
| முச்சலிக்கை | உடன்படிக்கைப் பத்திரம் ; பிணையப் பத்திரம் . |
| முச்சலிகை | வாய்நீர் , சிறுநீர் , நாதநீர் என்னும் மூவகைநீர் . |
| முச்சாரிகை | குதிரை , தேர் , யானை என்னும் இவை மூன்றும் சேர்ந்துபோதல் . |
| முச்சி | தலையுச்சி ; கொண்டைமுடி ; சிறுசுளகு ; சூட்டு ; வேலையாள் ; தோல்வினைஞன் ; உறைகாரன் ; வன்னக்காரன் ; தச்சன் . |
| முச்சியர் | வன்னக்காரர் ; மரவினையாளர் . |
| முச்சிரம் | சூலம் ; பெருஞ்சீரகம் . |
| முச்சில் | சிறுமுறம் . |
| முச்சுடர் | சூரியன் , சந்திரன் , அக்கினி ஆகிய மூன்று சோதிகள் . |
| முச்சூடும் | முழுதும் . |
| முச்செயல் | காண்க : முத்தொழில் . |
| முச்சொல்லலங்காரம் | ஒரு தொடர் மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள்கொண்டு நிற்கும் சொல்லணிவகை . |
| முசகம் | எலி . |
| முசர் | தயிர் ; மோர் . |
| முசரு | தயிர் ; மோர் . |
| முசல் | முயல் ; கொம்மட்டி ; ஒரு பூண்டுவகை . |
| முசல்வலி | ஒரு வலிப்புநோய்வகை . |
| முசலகன் | நடராசப் பெருமான் ஏறி நடித்து மிதிக்கும் பூதம் ; ஒரு நோய்வகை . |
| முசலம் | உலக்கை ; ஓர் ஆயுதம் . |
| முசலி | உடும்பு ; பல்லி ; முதலை ; கடல்மீன் ; நிலப்பனை ; வெருகங்கிழங்கு ; தாழைமரம் ; முசலத்தையுடைய பலராமன் ; பச்சோந்தி . |
| முசலிகை | உடும்பு ; இரண்டு கையும் காலும் சம்மணம் கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை . |
| முசலை | கோரைக்கிழங்கு . |
| முசற்காது | மருந்துப்பூண்டு ; அடப்பங்கொடி . |
| முசாதகம் | வெண்டாமரை . |
| முசிகுந்தம் | குபேரன் வில் ; சூரியன் கைச்சங்கு . |
| முசித்தல் | களைத்தல் ; இடர்ப்படுதல் ; மெலிதல் ; அழிதல் ; கசக்குதல் ; திருகுதல் . |
| முசிதல் | அறுதல் ; கசங்குதல் ; களைத்தல் : மெலிதல் ; அழிதல் ; குன்றுதல் . |
| முசிப்பாற்றி | இளைப்பாற்றுகை . |
| முசிப்பாறுதல் | இளைப்பாறுதல . |
| முசிப்பு | இடை ; மெலிவு ; களைப்பு ; அழிவு . |
| முசிரம் | வள்ளல்தன்மை . |
| முசிரன் | கொடையாளி . |
|
|
|