சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| முத்தமிடுதல் | அன்பிற்கறிகுறியாக உதடுகளால் கன்னம் முதலியவிடங்களில் தொடுகை . |
| முத்தமிழ் | இயல் , இசை , நாடகம் என்னும் மூவகைத் தமிழ் . |
| முத்தமிழுரியோன் | அகத்தியன் ; வயிரவன் . |
| முத்தமுண்ணுதல் | காண்க : முத்தமிடுதல் . |
| முத்தர் | திடர் . |
| முத்தரை | அரையிலணியும் முத்துவடம் . |
| முத்தலை | சூலம் . |
| முத்தலைக்கழு | சூலம் . |
| முத்தலைவேல் | சூலம் . |
| முத்தலைவேலோன் | பைரவன் . |
| முத்தவள்ளி | முத்துக்கோத்த கொடிபோன்ற கழுத்தணி . |
| முத்தவி | ஆமணக்கெண்ணெய் . |
| முத்தழல் | காண்க : முத்தீ . |
| முத்தளகி | முருங்கைமரம் . |
| முத்தன் | வீடுபேறடைந்தோன் ; இயல்பாகவே தளைகளிலிருந்து நீங்கியவனான சிவபிரான் ; திருமால் ; அருகன் ; வயிரவன் ; பிரியன் ; மூடன் ; புத்தன் . |
| முத்தாடுதல் | முத்தமிடுதல் . |
| முத்தாத்துக்கோல் | தூக்குக்கோல் . |
| முத்தாத்துமா | வீடுபெற்ற உயிர் . |
| முத்தாந்தம் | வீடுபேறாகிய உயர்நிலை . |
| முத்தாபலம் | முத்து ; காண்க : சங்கஞ்செடி . |
| முத்தாமணக்கு | ஓர் ஆமணக்கஞ்செடிவகை . |
| முத்தாரம் | முத்துமாலை . |
| முத்தாவளி | முத்துமாலை ; ஒரு பண்வகை . |
| முத்தானம் | அடுப்பு . |
| முத்தி | வீடுபேறு ; விடுபடுகை ; இருவகை முத்திநிலை ; திசை ; முத்தம் ; திருமகள் ; தேமல் . |
| முத்திக்கை | அரண்வளைப்பு . |
| முத்திதசை | பற்றுகளினின்று விடுபட்ட நிலை . |
| முத்திநகரங்கள்ஏழு | மதுரை , அயோத்தி , மாயை , காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை ஆகிய நகரங்கள் . |
| முத்திநெறி | வீட்டுநெறி . |
| முத்திப்பேறு | வீட்டுவாழ்வு . |
| முத்திபதம் | மோட்சபதவி ; ஞானநிலை . |
| முத்திமார்க்கம் | வீட்டுநெறி ; கருமவிதி மார்க்கம் . |
| முத்திமுத்திரை | தாமிரபரணி ஆறு . |
| முத்திமுதல் | முத்தியைப் பெறுதற்கு முதலாகிய ஆன்மா . |
| முத்தியெறிதல் | கழித்தல் . |
| முத்திராசாலை | அச்சுக்கூடம் . |
| முத்திராதாரணம் | சங்கு , சக்கரம் முதலிய முத்திரைகளை உடலில் ஏற்றுக்கொள்கை . |
| முத்திரிகை | எழுத்துப் பதிக்கப்பெற்ற மோதிரம் . |
| முத்திரித்தல் | முத்திரையிடுதல் . |
| முத்திரை | அடையாளம் ; இலாஞ்சனை ; அஞ்சல் முத்திரை முதலியன ; அடையாள வில்லை ; நூல் இறுதியில் வரும் ஆக்கியோன் பெயர்ப்பதிவு ; காதிலணியும் குண்டலவகை ; அபிநயக்குறி ; பூசை செய்யும்போது காட்டும் கையடையாளம் ; வங்கியம் நாகசுரம் வாசிக்கும்போது தொழிற்படாத துளை . |
| முத்திரைக்கூடம் | காவலறை ; பண்டங்களின் மேல் முத்திரையிடும் இடம் . |
| முத்திரைச்சூடு | கால்நடைகளுக்கு இடும் சூடு . |
| முத்திரைச்சேவகன் | வில்லைச்சேவகன் . |
| முத்திரைத்தாள் | முத்திரையிடப்பட்ட பத்திரம் . |
| முத்திரைப்படி | அரசாங்க அடையாளமிடப்பட்ட படி . |
| முத்திரைமண் | தானியக் குவியலில் இடும் மண்குறி ; முத்திரையிடுதற்குரிய மண் முதலிய பொருள் . |
| முத்திரைமோதிரம் | முத்திரையிட்ட மோதிரம் . |
| முத்திரையுட்சிக்கு | நாணய முத்திரையில் உள்ள குறைவகை . |
| முத்திறங்குதல் | அம்மையில் முத்துகள் பால் வடிந்து மறைகை . |
| முத்திறமணி | காண்க : திரிமணி . |
| முத்தீ | ஆகவனீயம் , தட்சிணாக்கினி , காருகபத்தியம் என்னும் மூவகை வேதாக்கினி ; வயிற்றுத்தீ , காமத்தீ , சினத்தீ என்னும் மூவகை நெருப்பு ; காண்க : ஆயுர்வேதாக்கினி . |
| முத்தீமரபினர் | வேதாக்கினி மூன்றையும் பேணும் குலத்தவராகிய பார்ப்பனர் . |
| முத்து | ஒன்பான் மணியுள் ஒன்று ; கண்ணீர் ; ஆமணக்குவிதை ; அம்மைக்கொப்புளம் ; நெய்யுள்ள விதை ; மாதுளையின் விதை ; அரிசி ; 7/8 பணவெடைகொண்ட ஒரு பொன்னிறை ; ஆட்டக்காய்கள் ; மேலானது ; அழகு ; மகிழ்ச்சி ; அன்பு ; முத்தம் ; வெண்குருகு . |
| முத்துக்கற்கம் | முத்துக்கொட்டைப் பிண்ணாக்கு ; முத்தைப் புடமிட்டுச் செய்யும் மருந்துவகை . |
| முத்துக்குடை | அருகனது மூன்று குடையுள் ஒன்று . |
| முத்துக்குமாரன் | முருகக்கடவுள் . |
| முத்துக்குளித்தல் | முத்தெடுக்கக் கடலில் மூழ்குதல் . |
| முத்துக்குறி | கையிலுள்ள முத்துகளைக் கணக்கிட்டுப் பலன் சொல்லும் குறி . |
| முத்துக்கொட்டை | ஆமணக்குவிதை . |
| முத்துக்கோவை | காண்க : முத்துமாலை . |
| முத்துச்சம்பா | ஒரு நெல்வகை . |
| முத்துச்சலாபம் | முத்துக்குளிக்கை ; முத்துக் குளிப்பில் அடையும் பேறு . |
| முத்துச்சிப்பி | முத்துள்ள ஓட்டினையுடைய நீர்வாழ் உயிரி ; முத்துத் தங்கிய சிப்பியோடு . |
| முத்துச்சிவிகை | முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு . |
| முத்துச்சொரிதல் | அன்னம் படைத்தல் ; வேண்டுதலுக்காக நென்மணியைச் சொரிதல் . |
| முத்துத்தரியம் | முத்தினால் அலங்கரித்த மேலாடை . |
| முத்துத்தாமம் | காண்க : முத்துமாலை ; முத்துக்கோத்த தொங்கல் . |
| முத்துதல் | சேர்தல் ; முத்தமிடுதல் . |
| முத்துநீர் | பனிநீர்த் திவலை . |
| முத்துப்பந்தர் | முத்துமாலைகளால் அலங்கரித்த மேற்கட்டி அமைந்த பந்தல் . |
| முத்துப்புரி | முத்துக் கோத்த தொங்கல் . |
| முத்துப்போடுதல் | அம்மைநோயில் முத்துப்போடுதல் . |
| முத்துமணல் | மணல்போன்ற சிறிய முத்து . |
| முத்துமழை | பருவமழை . |
| முத்துமழைபெய்தல் | செல்வம் பொங்குதல் . |
|
|
|