சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மூச்சொடுங்குதல் | மூச்சடங்கல் ; சாதல் . |
மூசல் | மொய்த்தல் ; சாதல் ; கெடுதல் . |
மூசாந்தம் | வெண்டாமரை . |
மூசாப்பு | மந்தாரம் ; மூச்சுமுட்டல் . |
மூசு | மொய்த்தல் ; இளங்காய் . |
மூசுண்டை | தின்பண்டம் ; கேடுற்ற பணிகாரம் . |
மூசுதல் | காண்க : மூசல் ; மோப்பம்பிடித்தல் . |
மூசை | மண்ணாலான குகை , உலோகங்களை உருக்கி வார்ப்பதற்கான மட்கரு . |
மூஞ்சி | முகம் . |
மூஞ்சிசுண்டுதல் | முகங்கருகல் ; முகத்தைச் சுளித்தல் . |
மூஞ்சுறு | எலிவகை ; மாட்டுநோய்வகை . |
மூஞ்சூறு | எலிவகை ; மாட்டுநோய்வகை . |
மூஞ்சை | கோணிய முகம் ; நீண்ட முகம் ; நீண்ட மூக்கு . |
மூஞ்சையன் | முகங்கோணியவன் . |
மூட்குதல் | அகப்பையால் எடுத்தல் ; சிக்கலை விடுவித்தல் . |
மூட்சி | சினமிகுதி . |
மூட்டங்கட்டுதல் | உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல் ; மேகம் ஒருங்குசேர்தல் ; மண் முதலியவற்றால் மூடுதல் ; ஆயத்தப்படுத்துதல் ; தொடங்குதல் . |
மூட்டங்கலைத்தல் | மூடியுள்ள மூட்டத்தை நீக்குதல் . |
மூட்டம் | மூடியிருப்பது ; மேகமூட்டம் ; உலைமுகம் ; மூடுதழல் ; மூடிய தானியக்குவியல் ; விறகு ; சொக்கப்பனை ; ஆயத்தம் ; கம்மக் கருவிவகை ; மகளிர்க்கு மகப்பேற்றின் பின்னும் அடுத்துவரும் மாதவிடாய்க்கு முன்னுமுள்ள காலம் . |
மூட்டு | உடல் முதலியவற்றின் பொருத்து ; சந்திப்பு ; குதிரைக் கடிவாளம் ; கோள் ; கட்டு ; கட்டப்பட்டது ; தையல் ; மனவெழுச்சி ; மூடுகின்ற பொருள் ; மூடியிருப்பது . |
மூட்டுதல் | மூளச்செய்தல் ; செலுத்துதல் ; இசைத்தல் ; தைத்தல் ; தூண்டிவிடுதல் ; அதிகப்படுத்துதல் . |
மூட்டுநழுவல் | உடற்பொருத்துப் பிசகல் . |
மூட்டுப்பூச்சி | பூச்சிவகை ; கம்பளிப்பூச்சி . |
மூட்டுவாய் | பொருத்து . |
மூட்டை | உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு ; பொதி ; பெரும்பொய் ; கம்பளிப்பூச்சி ; ஓர் அளவு . |
மூட்டைதூக்கி | பொருள்களைத் தூக்கிச் செல்லும் கூலியாள் . |
மூடகருப்பம் | கருப்பத்திலிறந்த பிள்ளை ; பேறுகாலத்திற் குழந்தை எளிதில் வெளியேறாமற் செய்யும் நோய்வகை . |
மூடத்தனம் | அறிவின்மை . |
மூடதை | அறிவின்மை . |
மூடபத்தி | காரணமறியாமற் செய்யும் பத்தி . |
மூடம் | மந்தாரம் ; குளிர் ; எட்டு மரக்கால் கொண்ட முகத்தலளவை ; மறைந்த இடம் ; அறிவின்மை ; மயக்கம் ; ஐயம் . |
மூடமதி | அறிவிலி . |
மூடர் | அறிவில்லார் . |
மூடல் | மூடுதல் ; மூடி . |
மூடன் | அறிவில்லான் ; கீழ்மகன் . |
மூடனம் | மிளகு ; அறிவின்மை . |
மூடாத்துமா | மதிகேடன் . |
மூடி | மூடுகருவி ; தேங்காய்மூடி ; கொத்துமல்லிப் பூண்டு ; மூடப்பெண் . |
மூடிகம் | எலிவகை . |
மூடிவைத்தல் | பாதுகாப்பாக வைத்தல் ; இரகசியமாக மறைத்துவைத்தல் . |
மூடு | வேர் ; காரணம் ; சிறுதூறு ; பெண்ணாடு ; பூச்சிவகை ; அறிவிலான் ; நிலை . |
மூடுகுப்பாயம் | மேற்போர்வை ; நீண்ட அங்கி . |
மூடுசீலை | போர்த்தும் ஆடை . |
மூடுதல் | போர்த்தல் ; மறைத்தல் ; சுற்றிக் கொள்ளுதல் ; நோய் முதலியன மிகுதல் . |
மூடுதிரை | காண்க : மூடுசீலை . |
மூடுபனி | அடர்ந்து பெய்யும் பனி . |
மூடுபாறை | தூம்பின்மேல் மூடுங் கல் . |
மூடுமந்திரம் | மிகக் கமுக்கம் , பரம இரகசியம் . |
மூடுவழி | கோட்டை முதலியவற்றில் கட்டடத்தால் மூடிக் காக்கப்பட்ட வழி , சுருங்கை . |
மூடை | பண்டமூட்டை ; தானியக்கோட்டை ; தனியாக்குதிர் . |
மூண்டன் | மிளகு . |
மூத்ததிகாரம் | தலைமையதிகாரம் . |
மூத்தநாயனார் | சிவபிரானின் மூத்த புதல்வரான விநாயகர் . |
மூத்தப்பன் | பாட்டன் . |
மூத்தபிள்ளையார் | காண்க : மூத்தநாயனார் . |
மூத்தம் | காண்க : முகூர்த்தம் . |
மூத்தல் | முதுமையுறுதல் ; கேடுறுதல் ; முடிதல் . |
மூத்தவன் | ஆண்டில் முதிர்ந்தவன் ; தமையன் ; மேலோன் . |
மூத்தார் | கணவனுடைய தமையன் ; முதியவர் . |
மூத்தாள் | முதியவள் , முன்பிறந்தாள் ; மூதேவி ; முதல் மனைவி . |
மூத்திரக்கிருச்சிரம் | வருத்தத்துடன் சிறிது சிறிதாக மூத்திரம் போகச்செய்யும் நோய்வகை . |
மூத்திரக்குண்டிக்காய் | இரத்தத்திலுள்ள கெட்டநீரைப் பிரித்து மூத்திரமாக்கும் உடலுறுப்பு . |
மூத்திரக்குழல் | மூத்திரக்குண்டிக்காயுள் சிறுநீர் சுரக்குங் குழல் ; மூத்திரக் குண்டிக்காயினின்றும் மூத்திரப்பைக்குச் செல்லும் சிறுநீர்க் குழல் . |
மூத்திரசங்கம் | நீரிழிவுநோய் . |
மூத்திரசுக்கிலம் | சிறுநீருடன் விந்து இறங்கும் வெட்டைநோய் . |
மூத்திரப்பை | உடலில் சிறுநீர் தங்கும் உறுப்பு . |
மூத்திரபுடம் | அடிவயிறு . |
மூத்திரபுரீடங்கள் | சலமலங்கள் . |
மூத்திரம் | சிறுநீர் . |
மூத்திரம்பெய்தல் | சிறுநீரை வெளிவிடுதல் ; புறக்கணித்தல் . |
மூத்திராசயம் | காண்க : மூத்திரப்பை . |
மூத்தோர் | முதியவர் ; பண்டிதர் ; அமைச்சர் . |
மூத்தோன் | முதியவன் ; தமையன் ; விநாயகன் ; நாற்பத்தெட்டு வயதுக்குமேல் அறுபத்து நான்கு வயதுக்குட்பட்ட மனிதன் . |
மூதண்டம் | பிரமாண்டம் ; பிரம அண்டத்தின் முகடு ; அறுகம்புல் . |
மூதணங்கு | கொற்றவை . |
![]() |
![]() |