சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மெழுகுதல் | தரையை சாணமிட்டுத் தூய்மை செய்தல் ; பூசுதல் ; குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல் . |
மெழுகுதிரி | காண்க : மெழுகுவத்த . |
மெழுகுபதம் | காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் மெழுகுபோலத் திரளும் பக்குவம் . |
மெழுகுமண் | கருக்கட்டும் பசைமண் . |
மெழுகுவத்தி | எரிய உதவும்படி நடுவே திரியிட்டுச் செய்யப்பட்ட மெழுகுகோல் . |
மெள்ள | காண்க : மெல்ல . |
மெள்ளென | காண்க : மெல்லென . |
மென்கண் | இரக்கம் . |
மென்கணம் | காண்க : மெல்லினம் . |
மென்கால் | தென்றல் . |
மென்சொல் | இனியசொல் ; அன்பான மொழி . |
மென்பறை | பறவைக்குஞ்சு . |
மென்பால் | மருதநிலம் . |
மென்பிணி | சிறுதுயில் . |
மென்பு | மென்¬ . |
மென்புலம் | மருதநிலம் ; நெய்தல் நிலம் . |
மென்மெல | மெல்ல . |
மென்மேல் | மேலும் மேலும் . |
மென்மை | நுண்மை ; மென்மைத்தன்மை ; தாழ்வு ; வலியின்மை ; அமைதி ; காண்க : மெல்லெழுத்து . |
மென்றொடர் | மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் . |
மென்றொடர்க்குற்றியலுகரம் | மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் . |
மென்றொடர்மொழி | மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் . |
மென்னகை | புன்சிரிப்பு . |
மென்னடை | மெதுவான நடை ; அன்னம் . |
மென்னி | மிடறு , கழுத்து . |
மென்னை | மிடறு , கழுத்து . |
மெனக்கெடுத்தல் | வினைகெடுத்தலின் திரிபு ; பயனின்றிப் போகச்செய்தல் . |
![]() |
![]() |