சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மேற்கொண்டு | மேலும் ; இனிமேல் . |
மேற்கொள்ளுதல் | மேலேறுதல் ; மேம்படுதல் பொறுப்பேற்றல் ; உறுதிமொழிகூறல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; முயலுதல் ; வஞ்சினம் உரைத்தல் . |
மேற்கோண்லைவு | வாதத்தில் முற்கூறியதற்கு மாறுபடக் கூறுகையாகிய குற்றம் . |
மேற்கோப்பு | வீட்டின் கூரைப்பகுதி . |
மேற்கோள் | ஏற்றுக்கொள்ளுகை ; எடுத்துக்காட்டு ; போர்வை ; பொறுப்பேற்கை ; ஊக்கம் ; உறுதிப்பாடான நோக்கம் ; வஞ்சினம் ; உறுதிமொழி ; மேன்மை ; சனி . |
மேற்சுவாசம் | இறக்குந்தறுவாயில் மேனோக்கி எழும் மூச்சு . |
மேற்செம்பாலை | பாலை யாழ்த்திறவகை . |
மேற்செல்லுதல் | அப்பாற்போதல் ; மேற்படுதல் ; போருக்குச் செல்லல் ; விரைதல் . |
மேற்செலவு | படையெடுப்பு ; வீட்டின் அன்றாடச் செலவு . |
மேற்பட்டை | மரத்தின்மேலுள்ள தோல் . |
மேற்படி | கதவுநிலையின் மேற்பாகத்திலிருக்கும் மரம் ; முன்குறித்தது . |
மேற்பரப்பு | தரை முதலியவற்றின் வெளிப்பரப்பு . |
மேற்பலகை | நகம் ; கதவுநிலையின் மேற்பாகத்திலிருக்கும் மரம் . |
மேற்பாதி | விளைவிலிருந்து நிலக்கிழாருக்குக் கொடுத்தற்குரிய தானியம் . |
மேற்பாதிநிலம் | மேடாயிருக்கும் பக்கநிலம் . |
மேற்பார்த்தல் | கண்காணித்தல் . |
மேற்பார்வை | மேல்விசாரணை ; மேலெழுந்த பார்வை ; செருக்கான நோக்கம் ; தொலைநோக்கு ; சாகுந்தறுவாயில் மேல்நோக்கி நிற்கும் பார்வை . |
மேற்பாரம் | அமுங்கும்படி ஒன்றன்மேலே வைக்கும் சுமை ; அதிகமாகச் சேர்க்கும் சுமை . |
மேற்பால் | உயர்குலம் . |
மேற்பாலம் | காண்க : மேம்பாலம் . |
மேற்புத்தி | மேலானவரிடத்திற் பெறும் புத்திமதி . |
மேற்புரம் | துறக்கம் . |
மேற்புலவர் | தேவர் . |
மேற்புறணி | காண்க : மேற்பட்டை . |
மேற்புறம் | வெளிப்புறம் ; கப்பலிற் காற்றுத்தாக்கும் பக்கம் ; மேலண்டைப்பக்கம் . |
மேற்பூச்சு | வெளிப்பூச்சு ; குற்றத்தை மறைக்கை ; மனம் ஈடுபடாத நடத்தை முதலியன . |
மேற்பேச்சு | வெளி உபசாரச்சொல் ; மேற்கொண்டு விவரித்தல் . |
மேற்போட்டுக்கொள்ளுதல் | வலிய ஏற்றுக்கொள்ளுதல் ; பிறனுக்காகப் பிணையேற்றல் . |
மேற்றட்டு | நிலைப்பேழை முதலியவற்றின் மேலறை ; உயர்தரம் ; கப்பலின் மேற்புறத்துள்ள தட்டு ; மேல்தளம் ; பரண்போன்ற மேலிடம் ; அடுக்குப்பாண்டத்திலுள்ள மேல்தட்டு ; உடுத்திருக்கும் சேலையின் வெளிச்சுற்று ; உயர்சாதி மட்டக்குதிரை . |
மேற்றலை | தலையின் மேற்பகுதி ; மேற்புறம் ; ஆறு முதலியன தொடங்குமிடம் ; கப்பலில் காற்றுத்தாக்கும் பக்கம் ; மேலண்டைப்பக்கம் . |
மேற்றளம் | மேல்மாடி ; கப்பலின் மேற்பக்கம் ; புறவிதழ் ; மெய்காவற்படை . |
மேற்றிசை | மேற்கு . |
மேற்றிசைப்பாலன் | வருணன் . |
மேற்றிணை | உயர்குலம் . |
மேற்றிராணி | அதிகாரம் ; கிறித்தவக் கண்காணியார் . |
மேற்றொழில் | சிறந்த செயல் . |
மேற்றோன்றி | செங்காந்தள்மலர் . |
மேன் | மேலிடம் . |
மேன்மக்கள் | உயர்ந்தோர் . |
மேன்மலை | சூரியன் மறையுமிடமான மேற்குப் புறத்தேயுள்ள மலை ; மேற்குமலை . |
மேன்மாடம் | உப்பரிகை . |
மேன்முறையாளர் | காண்க : மேன்மக்கள் . |
மேன்மேல் | பின்னும் பெருக . |
மேன்மேலும் | பின்னும் பெருக . |
மேன்மை | சிறப்பு ; பெருமை ; கண்ணியம் . |
மேன்றலை | மரக்கலத்தின் முன்புறம் . |
மேன | ஏழாம் வேற்றுமை உருபு . |
மேனாடு | துறக்கம் ; பீடபூமி ; கருநாடக மாநிலம் ; மேலுள்ள நாடு ; காண்க : பொன்னாங்காணி . |
மேனாணித்தல் | பெருமிதங்கொள்ளுதல் . |
மேனாணிப்பு | பெருமிதம் . |
மேனாள் | முன்னாள் ; பின்னாள் . |
மேனி | நிறம் ; வடிவம் ; உடல் ; அழகு ; நன்னிலைமை ; நிலத்தின் சராசரி விளைச்சல் ; காண்க : குப்பைமேனி . |
மேனிகரப்போர் | தம் உருவத்தை மறைக்க வல்லவரான அசுரர் . |
மேனிகுலைதல் | அழகு குன்றல் ; சீர்குலைதல் ; உருவங்கெடுதல் ; கலக்கமுறுதல் . |
மேனிமினுக்கி | எப்போதும் அலங்காரம் செய்து கொண்டு திரிபவர் . |
மேனிலர் | தேவர் . |
மேனிலை | மேல்மாடி ; முன்னர் உள்ளது . |
மேனிலைக்கட்டு | கோபுர முதலியவற்றின் மேல் மாடி . |
மேனீர் | மழைநீர் ; மேலிருந்துவரும் நீர் ; பூமி மேலே தங்கி ஓடும் நீர் ; நிலமட்டத்தை அடுத்துக் காணும் ஊற்றுநீர் . |
மேனை | மலையரசன் மனைவி . |
மேனைமகள் | பார்வதி . |
மேனோக்கம் | மேல்நோக்கிக் கிளம்புகை ; தாராள சிந்தை ; மேலெழுந்த பார்வை ; பேரவா ; செருக்கு . |
மேனோக்குதல் | மேலெழுதல் ; வாயாலெடுத்தல் ; பேரவாக்கொள்ளுதல் ; செருக்கடைதல் . |
![]() |
![]() |