மொய்த்தல் முதல் - மொறுமொறெனல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மொய்த்தல் நெருங்கல் ; மேல் பரவுதல் ; மூடுதல் ; இருத்தல் ; நெருங்கிச் சுற்றுதல் ; துன்புறுத்தல் ; கொடுத்தல் .
மொய்த்தாய் தாய் .
மொய்தாய் தாய் .
மொய்ப்பணம் திருமணம் முதலியவற்றில் வழங்கும் நன்கொடைப் பணம் .
மொய்ப்பு கூட்டம் .
மொய்ம்பன் வீரன் .
மொய்ம்பு வலிமை ; தோள் .
மொய்யெழுத்து தருமசாசனம் .
மொய்யெழுதுதல் மணம் முதலிய விழாக்களில் நன்கொடையளித்தல் ; அறத்திற்குச் சிறுதொகை உதவுதல் ; கொடுத்துத் திரும்பக் கிடையாதனவற்றைச் செலவாக எழுதுதல் .
மொரமொரப்பு முறுக்காயொலிக்கை ; தூய்மை ; முறுமுறுப்பு .
மொரமொரெனல் தூய்மையாயிருத்தல் ; முறுக்காயிருத்தற்குறிப்பு .
மொருமொருத்தல் முணுமுணுத்தல் ; காண்க : மொரமொரப்பு .
மொருமொரெனல் முணுமுணுத்தற்குறிப்பு ; காண்க : மொரமொரெனல் .
மொலுமொலெனல் விடாது பேசற்குறிப்பு ; முணுமுணுத்தற்குறிப்பு ; தினவெடுத்தற்குறிப்பு ; சொறிதற்குறிப்பு ; இரைச்சற்குறிப்பு .
மொழி சொல் ; கட்டுரை ; சொற்றொகுதி ; பேச்சுமுறை ; வாக்குமூலம் ; பொருள் ; மணிக்கட்டு , முழங்கால் , கணுக்கால் முதலியவற்றின் பொருத்து ; மரக்கணு .
மொழிச்சாரியை இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆகிய சாரியை .
மொழிதடுமாறுதல் திக்கிப்பேசுதல் ; வாய்குழறுதல் .
மொழிதல் சொல்லுதல் .
மொழிநூல் மொழியின் வரலாற்றைக் கூறும் நூல் .
மொழிப்பிசகு காண்க : மொழிபிசகுதல் .
மொழிப்பொருள் சொல்லுக்கு ஏற்பட்ட பொருள் ; நிமித்தச்சொல் ; மந்திரம் .
மொழிபிசகுதல் வாக்குத்தவறுதல் ; உடற்பொருத்து இடம்விட்டு விலகுதல் .
மொழிபிறழ்தல் வாக்குத்தவறுதல் ; உடற்பொருத்து இடம்விட்டு விலகுதல் .
மொழிபெயர்த்தல் ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றி எழுதுதல் .
மொழிபெயர்ப்பு ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றி எழுதுதல் .
மொழிமாற்று ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள்கொள்ளுதல் .
மொழிமை பழமொழி .
மொழியொலிக்குறிப்பு சொல்லின் அழுத்தமான உச்சரிப்பு .
மொழியோசை பலுக்குதல் ; உச்சரிப்பு .
மொழுக்கன் தடித்தவன் ; மட்டமான வேலை ; வேலைப்பாடில்லாத அணிகலன் .
மொழுக்கெனல் சடக்கென ஒடிதற்குறிப்பு ; எண்ணெய்ப்பசையா யிருத்தற்குறிப்பு .
மொழுங்கன் காண்க : மொழுக்கன் .
மொழுப்பு கட்டு ; சோலைசெறிந்த பகுதி .
மொழுப்புதல் செயலை மழுப்புதல் .
மொழுமொழுத்தல் கொழுகொழுப்பாயிருத்தல் .
மொள்ளுதல் தண்ணீர் முதலியன முகத்தல் .
மொறமொறப்பு தூய்மை ; சருக்கரை ; உலர்ச்சி .
மொறுமொறுத்தல் வெறுப்புக்குறிப்புக் காட்டுதல் .
மொறுமொறெனல் காண்க : மொரமொரெனல் .