சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மோப்பு | காதல் . |
மோம்பழம் | மணமுள்ள கனி . |
மோய் | அம்மோய் ' என்பதன் முதற்குறை ; தாய் . |
மோர் | நீர்விட்டுக் கடைந்த தயிர் ; முத்திரை . |
மோரடகம் | கரும்புவேர் ; வீழிப்பூடு . |
மோரடம் | கரும்புவேர் ; வீழிப்பூடு . |
மோரை | முகம் ; முகவாய்க்கட்டை . |
மோரைக்கயிறு | மாட்டின் வாயைச்சுற்றிக் கட்டுங் கயிறு . |
மோலி | மயிர்முடி ; சடைமுடி ; மணிமுடி . |
மோவம் | ஆன்மாவிற்கு மயக்கத்தைச் செய்யும் குற்றம் . |
மோவாய் | காண்க : மோவாய்க்கட்டை ; தாடி . |
மோவாய்க்கட்டை | வாய்க்குக் கீழுள்ள இடம் . |
மோழல் | காண்க : மோழைமுகம் . |
மோழலம்பன்றி | ஆண்பன்றி . |
மோழி | குழம்புவகை ; மேழி . |
மோழை | கொம்பில்லாத விலங்கு ; மொட்டை ; மரத்தின் அடிமுண்டம் ; மடமை ; வெடிப்பு ; கீழாறு ; குமிழி ; மடு ; கஞ்சி . |
மோழைமுகம் | பன்றி . |
மோழைமை | மடமை ; இகழ்மொழி . |
மோழைவழி | நுழைவழி . |
மோறாத்தல் | சோம்பியிருத்தல் ; அங்காத்தல் . |
மோறை | மோவாய் ; முகம் ; முருட்டுத்தனம் . |
மோறைக்கட்டை | முகம் . |
மோனம் | அமைதி ; பேசாதிருத்தல் . |
மோனமுத்திரை | மௌனநிலையைக் காட்டும் முத்திரைவகை . |
மோனர் | பேசாநோன்பு மேற்கொண்ட துறவியர் . |
மோனி | பேசாநோன்பு பூண்டவன் . |
மோனீகம் | பெருச்சாளி . |
மோனை | முதன்மை ; மகன் ; சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்குந் தொடை . |
![]() |
![]() |