யாமளம் முதல் - யானைப்போர் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
யாமளம் காளியைத் தெய்வமாகக் கொண்ட ஒரு வேதம் ; இரட்டை ; பச்சை ; இளமை .
யாமளை பார்வதி ; காளி .
யாமி இராத்திரி ; யமன்தேவி ; கற்புடையாள் ; உடன்பிறந்தாள் ; தெற்கு ; மகள் ; மருமகள் .
யாமிகன் இரவில் நகரைக் காக்கும் காவற்காரன் .
யாமியம் தெற்கு ; சந்தனம் ; தவம் .
யாமினி மூன்று யாமங்களையுடைய இரவு .
யாமுனம் அஞ்சனக்கல் .
யாமை ஆமை ; இரவு ; காண்க : யாழ்பதங்காளி ; தெற்கு .
யாமைமணை ஆமையின் வடிவமைந்த ஓர் இருக்கை .
யாய் தாய் .
யார் யாவர் ; காண்க : நத்தைச்சூரி .
யாரள் காண்க : யாவள் .
யாரி கதவு ; கள்ளக்கணவன் ; எதிரி .
யாரும் எவரும் .
யாலம் ஆச்சாமரம் ; இரவு .
யாவகம் செம்பஞ்சு ; காண்க : பெரும்பயறு .
யாவண் எவ்விடம் .
யாவது எது ; எவ்விதம் .
யாவதும் சிறிதும் ; காண்க : யாவும் .
யாவர் எவர் .
யாவரும் எல்லோரும் .
யாவள் எவள் .
யாவன் எவன் .
யாவும் எல்லாம் .
யாவை எவை .
யாழ் பேரியாழ் , சகோடயாழ் , மகரயாழ் , செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக் கருவி ; மிதுனராசி ; அசுவினிநாள் ; திருவாதிரை நாள் ; பண் ; ஆந்தை .
யாழ்க்கரணம் யாழ்மீட்டற்குரிய செய்கை .
யாழ்செய்தல் பாடுதல் .
யாழ்த்திறம் பண் ; ஐந்து சுரமுள்ள இசை .
யாழ்தரித்தாள் பார்வதிதேவி .
யாழ்ப்பாணர் யாழ்மீட்டும் பாணர் வகையினர் ; யாழ்ப்பாண நாட்டார் .
யாழ்பதங்காளி செவ்வழி யாழ்த்திறத்துள் ஒன்று .
யாழ்முனிவர் நாரதர் .
யாழ்வல்லோர் காண்க : யாழோர் .
யாழ ஒரு முன்னிலை யசைச்சொல் .
யாழல் கறையான் .
யாழோர் கந்தருவர் .
யாழோர்கூட்டம் எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் .
யாழோர்மணவினை எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் .
யாளி யானையின் துதிக்கையும் சிங்கத்தின் முகமுமுடைய விலங்கு ; அரிமா ; சிம்மராசி ; யானை ; இறைகூடைவகை .
யாளியூர்தி யாளியை ஊர்தியாக உடைய காளி .
யாற்றுநீர் அடிதொறும் ஆற்றுநீர் ஒழுக்குப் போல நெறிப்பட்டு அற்றுஅற்று ஒழுகுவதான எண்வகைப் பொருள்கோளுள் ஒன்று .
யாறு ஆறு .
யான் தன்மை யொருமைப் பெயர் .
யான்மை அகங்காரம் .
யானஞ்செய்தல் செல்லுதல் .
யானம் ஊர்தி ; சிவிகை ; மரக்கலம் ; போர்ச்செலவு ; அறைவீடு ; கள் .
யானெனதெனல் தன்முனைப்பும் பற்றுடைமையும் வெளிப்படப் பேசுதல் .
யானை துதிக்கையுடைய விலங்குவகை ; ஆனை மரம் .
யானைக்கச்சை யானையின் கழுத்திலிடும் கயிறு .
யானைக்கண் சிறுகண் ; இலை , காய் முதலியவற்றில் விழும் புள்ளி .
யானைக்கதி நடனம் , துரிதம் , மந்தரம் , ஓட்டம் என்னும் நான்கு வகைப்பட்ட யானை நடை .
யானைக்கவடு யானைபோல் மனத்துள் மறைத்துவைத்திருக்கும் பகைமை .
யானைக்கன்று யானைக்குட்டி .
யானைக்கால் ஒரு நோய்வகை .
யானைக்குப்பு சதுரங்கம் .
யானைக்குருகு சக்கரவாகப்புள் .
யானைக்கை தும்பிக்கை ; கைவீக்கங் காணும் நோய்வகை .
யானைகைக்கோள் பகைவரை எறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை .
யானைச்சாலை காண்க : யானைத்தொழு .
யானைத்தண்டம் யானை செல்லும் வழி .
யானைத்தந்தம் யானைக்கொம்பு ; யானையின் எலும்பு .
யானைத்தலைவன் யானைக் கூட்டத்துள் தலைமைதாங்கும் யானை .
யானைத்தறி காண்க : யானைத்தூண் .
யானைத்திசை வடக்கு .
யானைத்திப்பிலி ஒரு திப்பிலிவகை .
யானைத்தீ தணியாப் பசியைத்தரும் நோய் .
யானைத்தூண் யானைகட்டும் கம்பம் .
யானைத்தொழு யானைகள் கட்டுமிடம் .
யானைநெருஞ்சி பெருநெருஞ்சி .
யானைப்பட்டம் யானையின் முகவோடை .
யானைப்படுகுழி யானையை அகப்படுத்துங்குழி .
யானைப்பல் யானையின் கொம்பு .
யானைப்பாகன் யானையை நடத்துவோன் .
யானைப்போர் யானைகள் ஒன்றோடொன்று செய்யும் போர் .