வருடாந்தரம் முதல் - வரைவுகடாதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வருடாந்தரம் ஆண்டுமுடிவு ; ஆண்டுதோறும் ; ஆண்டுக்கொருமுறையான .
வருடித்தல் மழைபொழிதல் ; சொரிதல் .
வருடுதல் தடவுதல் .
வருடை வரையாடு ; ஆடு ; மேடராசி ; எண்காற்பறவை ; மாற்சரியம் .
வருடைமான் மலையாடு .
வருணசரம் செம்மணிகளாற் செய்த கழுத்தணி .
வருணதிசை மேற்கு .
வருணம் நிறம் ; சாதி ; குலம் ; எழுத்து ; அழகு ; ஒளி ; மஞ்சள் ; பொன்னுரை ; பொன் ; புகழ் ; துதி ; மணம் ; பூச்சுப்பொருள் ; குணம் ; மாதிரி ; நீர் ; யானை ; வேடம் ; விதம் ; சதயநாள் .
வருணமண்டலம் வருணனது உலகம் .
வருணவிந்து முத்துச்சிப்பி .
வருணன் மேற்றிசைப்பாலனும் கடலுக்கும் நெய்தல்நிலத்துக்கும் உரியவனும் மழைக்குத் தலைவனுமாகிய கடவுள் ; பன்னிரு ஆதித்தருள் ஒருவன் .
வருணனாள் சதயநாள் .
வருணனை புனைவுரை ; தோத்திரம் ; புகழ்ந்துரைத்தல் .
வருணாலயம் கடல் .
வருணி பிரமசாரி ; பொன் .
வருணித்தல் புனைந்துரைத்தல் ; தோத்திரித்தல் ; மிகைபடக் கூறுதல் ; உவமித்தல் .
வருத்தம் துன்பம் ; முயற்சி ; களைப்பு ; நோயாளியின் அபாயநிலை ; அரிதல் நிகழ்வது .
வருத்தமானம் இறந்துபட்ட ஒரு கணிதநூல் ; காண்க : வர்த்தமானம் .
வருத்தனம் உண்டை ; காண்க : வருத்தனை .
வருத்தனை பிழைப்பு ; தொழில் ; கூத்தின் செயல் ; பெருகுதல் ; செல்வம் ; சம்பளம் ; வழி ; மானியஉரிமை ; காண்க : வர்த்தனை .
வருத்தித்தல் பெருகுதல் ; உண்டாக்குதல் ; ஓவியம் எழுதுதல் .
வருத்து துன்பம் ; காண்க : வரத்து .
வருத்துதல் வருவித்தல் ; பெருகுதல் ; உண்டாக்குதல் ; மனப்பாடஞ்செய்தல் ; பயில்வித்தல் ; வருந்தச்செய்தல் .
வருத்துலம் வட்டவடிவு ; உருண்டை வடிவமான மாணிக்கம் .
வருதி ஆணை .
வருந்திக்கழித்தல் வருத்தத்துடன் காலம் போக்குதல் .
வருந்திக்கேட்டல் கெஞ்சுதல் .
வருந்துதல் துன்புறுதல் ; உடல்மெலிதல் ; மிக முயலுதல் ; வருந்தி வேண்டிக்கொள்ளுதல் .
வருந்துரு மரவகை .
வருநர் புதிதாய் வருபவர் ; விருந்தினர் .
வருநாள் எதிர்காலம் .
வருபிறப்பு மறுபிறப்பு ; மறுமை .
வருபுனல் பெருகிவரும் நீர் ; ஆறு ; ஆற்றுநீரும் ஊற்றுநீரும் அல்லாத வேற்றுநீர் .
வருபொருள் எதிர்கால நிகழ்ச்சி ; வருவதன் கருத்து .
வருபோகம் மறுபோக விளைவு .
வரும்படி காண்க : வருமானம் .
வருமதி காண்க : வருமானம் .
வருமாறு வரும்விதம் ; நிகழ்ச்சிமுறை .
வருமானம் வருவாய் .
வருமானவரி வருவாயின்மேல் விதிக்கும் அரசிறை .
வருமை மறுபிறப்பு .
வருமொழி நிலைமொழிக்குப் பின்மொழி .
வருவாய் தோன்றுமிடம் ; வருமானம் .
வருவித்தல் வரச்செய்தல் ; வேண்டியது ஒன்றைப் பொருந்த விரித்துக்கொள்ளுதல் .
வருவியம் முழங்கால் .
வரூதம் வாழுமிடம் ; பலகைத்தடுக்கு ; கவசம் ; பரிசை .
வரூதினி படை .
வரேந்திரன் அரசன் ; இந்திரன் .
வரை மலை ; மலையுச்சி ; பக்கமலை ; உயர்ந்த மலை ; கல் ; சிறுவரம்பு ; நீர்க்கரை ; எல்லை ; அளவு ; விரலிறை அளவு ; கோடு ; எழுத்து ; ஏற்றத்தாழ்வு நோக்குகை ; முத்துக்குற்றத்துள் ஒன்று ; மூங்கில் ; காலம் ; இடம் .
வரைகம்பு கம்மாளர் கருவியுள் ஒன்று .
வரைச்சிலம்பு மலைச்சாரல் .
வரைத்தாள் தாழ்வரை .
வரைதல் எழுதுதல் ; ஓவியம் எழுதுதல் ; கணித்தல் ; அளவுபடுத்தல் ; அடக்குதல் ; விலக்குதல் ; கைவிடுதல் ; ஒப்புக்காணல் ; அறவழியில் பொருளீட்டுதல் ; தனக்குரியதாக்குதல் ; திருமணஞ்செய்தல் .
வரைநீர் மலையருவி .
வரைநேமி சக்கரவாளமலை .
வரைப்பகை மலைக்குப் பகைவனான இந்திரன் .
வரைப்பு எழுதுகை ; எல்லை ; மதில் ; சுவர் சூழ்ந்த இடம் ; மாளிகை ; உலகம் ; குளம் .
வரைபாய்தல் மலையுச்சியினின்று விழுதல் .
வரைபொருட்பிரிதல் களவில் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலைக் கூறும் அகத்துறை .
வரையமிர்து காண்க : மலைபடுபொருள் .
வரையரமகளிர் மலையில் வாழும் தெய்வ மங்கையர் .
வரையரையன் இமவான் .
வரையறவு காண்க : வரையறை .
வரையறுத்தல் கணித்தல் ; மதிப்பிடுதல் ; எல்லைப்படுத்துதல் ; வளைத்தல் .
வரையறை எல்லை ; அளவு ; திட்டம் ; அடக்கவொடுக்கம் ; கண்டிப்பு ; முடிவு .
வரையாடு மலையாடு ; மான்வகை .
வரையாநுகர்ச்சி களவுப்புணர்ச்சி .
வரையாவீகை பெருங்கொடை .
வரையாழி சக்கரவாளமலை ; மலை .
வரைவாழை மலைவாழை .
வரைவில்லி பொதுமகளிர் .
வரைவின்மகளிர் பொதுமகளிர் .
வரைவின்மாதர் பொதுமகளிர் .
வரைவு அளவு ; எல்லை ; எழுதுகை ; சித்திரமெழுதுகை ; ஏற்றத்தாழ்வு நோக்குகை ; திருமணம் ; நீக்கம் ; பிரிவு .
வரைவுகடாதல் தலைவியை மணம்புரிந்து கொள்ளுமாறு தோழி தலைமகனை வற்புறுத்தும் அகத்துறை .