அசராதி முதல் - அசுணமா வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
அசாரவாசி அரசனது வாயில் காப்பவன் .
அசாவாமை தளராமை .
அசாவிடுதல் இளைப்பாறுதல் .
அசாவுதல் இளைப்படைதல் ; தளர்தல் .
அசாவேரி ஒரு பண் .
அசி படைக்கலம் ; அம்பு ; வாள் ; இகழ்ச்சி நகை , ஏளனம் ; ஆன்மா .
அசிகை நகைத்துப் பேசும் பேச்சு .
அசிங்கம் தகாத பேச்சு ; அழகற்றது ; ஒழுங்கற்றது .
அசித்தம் முடிக்கப்படாதது .
அசித்தல் உண்டல் ; அழித்தல் ; சிரித்தல் .
அசித்திரன் கள்வன் .
அசித்து அறிவற்ற பொருள் , சடப்பொருள் .
அசிதம் கருமை ; சனி ; ஒரு சிவாகமம் ; வெல்லக் கூடாதது ; சிரிப்பது ; மலர்வது .
அசிதன் வெல்லற்கு அரியோன் ; சிவன் ; திருமால் ; புத்தன் ; தந்தை ; சனி .
அசிதாரு ஒரு நரகம் .
அசிதை அவுரி ; சிவசத்தியின் நால்வகைப் பிரிவுகளுள் ஒன்று .
அசிந்தம் சிந்திக்கப்படாதது ; ஒரு பேரெண் ; இறப்பு .
அசிந்திதன் சிந்திக்கப்படாதவன் ; மனத்துக்கு எட்டாதவன் .
அசிந்தியம் சிந்தைக்கு எட்டாதது ஒரு பேரெண் .
அசிப்பு ஏளனச் சிரிப்பு .
அசிபத்திரகம் கரும்பு .
அசிபதம் தத்துவமசி என்னும் பேருரையின் மூன்றாம் சொல் .
அசிர்த்தல் காண்க : அயிர்த்தல் .
அசிரத்தை அக்கறையின்மை ; கவனிப்பு இல்லாமை ; ஊக்கமின்மை .
அசிரம் உடல் ; அற்பகாலம் ; காற்று ; தவளை ; முன்றில் ; தலையற்றது , முண்டம் ; தீ .
அசிரவணம் செவிடு , காதுமந்தம் .
அசிரன் அக்கினி ; சூரியன் : கவந்தன் .
அசினம் விலங்கின் தோல் ; மானின் தோல் ; தோலிருக்கை .
அசீதி எண்பது ; ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு .
அசீரணம் செரியாமை ; பசியின்மை ; அழிவு படாதது .
அசீரியம் அழியாதது .
அசு மூச்சு ; உயிர்வளி ; துன்பம் .
அசுக்காட்டுதல் எள்ளல் , பரிகசித்தல் .
அசுகுசுத்தல் அருவருத்தல் ; ஐயுறுதல் .
அசுகுணி செடிப்பூச்சி வகையுள் ஒன்று ; காதில் வரும் கரப்பான் .
அசுகை அருவருப்பு ; ஐயம் .
அசுசி தூய்மையின்மை , அழுக்கு ; அருவருப்பு .
அசுணம் இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு .
அசுணமா இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு .
அசராதி கொன்றை .
அசராது கொன்றை .
அசரீரி வானொலி , ஆகாயவாணி ; சரீரமில்லாதது .
அசருதல் காண்க : அயர்தல் .
அசரை அயிரைமீன் .
அசல் முதல் ; மூலம் ; முதற்படி ; உயர்ந்தது ; அருகு ; அயல் ; கொசு ; சீலை ; பூமி .
அசல்குறிப்பு நாளேடு ; தினசரிக் குறிப்பு .
அசலக்கால் தென்றல் .
அசலகன்னிகை மலைமகள் , உமாதேவி .
அசலம் அசைவின்மை ; அசையாநிலை ; அசையாதது ; பூமி ; மலை .
அசலலிங்கம் வழிபாட்டிற்குரிய கோபுரம் முதலியவை .
அசலன் அசைவில்லாதவன் , கடவுள் .
அசலிடுதல் எல்லை கடத்தல் .
அசலை அசையாதது ; உமாதேவி ; நிலம் ; மீன் வகை .
அசவல் அசறு ; சேறு ; கொசு .
அசவாகனன் ஆட்டை ஊர்தியாக உடையவன் , அக்கினிதேவன் .
அசற்காரியவாதம் உற்பத்திக்கு மூலம் இல்லாமலே காரியம் தோன்றும் என்னும் கொள்கை .
அசற்சரக்கு முதல் தரமான பண்டம் , கலப்பற்ற பண்டம் .
அசற்பிரதி மூலப்படி .
அசறு அசர் ; ஒருவகைச் செடிப்பூச்சி ; ஆட்டுச் சொறி ; சேறு .
அசறுபாய்தல் அசும்பொழுகுதல் ; பொசிந்து பரவுதல் .
அசன் பிறப்பிலி , கடவுள் .
அசனசாலை உணவுவிடுதி .
அசனம் சோறு ; உணவு ; பகுதி ; அளவு ; சிரிப்பு ; வேங்கைமரம் ; வெள்ளுள்ளி .
அசனவேதி சீரகம் ; உணவைச் செரிக்கச் செய்வது .
அசனி இடி ; வச்சிரப்படை ; சாம்பிராணி இலை ; தீச்சட்டி .
அசனிபாதம் இடியின் வீழ்ச்சி .
அசா தளர்ச்சி ; வருத்தம் துயர் .
அசாக்கிரதை விழிப்பின்மை , கவனக்குறைவு , சோம்பல் .
அசாகளத்தனம் ஆட்டின் கழுத்தில் தொங்கும் தசை .
அசாசி கருஞ்சீரகம் .
அசாணிமூலி வேலிப்பருத்தி .
அசாதசத்துரு பகைவரால் வெவ்லப்படாதவன் ; வம்புதும்பற்றவன் ; தருமபுத்திரன் ; புத்தர் காலத்திலிருந்த ஓர் அரசன் .
அசாதாரணம் பொதுவின்மை , சிறப்பு .
அசாயசூரன் காண்க : அசகாயசூரன் .
அசாரம் சாரமற்றது ; ஆமணக்கு ; அரசவை மண்டபம் .