வன்னியமறுத்தல் முதல் - வனைதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வன்னியமறுத்தல் சிற்றரசரை அழித்தல் .
வன்னியன் சாமந்தன் ; ஒரு சாதியாரின் பட்டப்பெயர் .
வன்னிலம் பாறைப்பாங்கான பூமி .
வன்னிவகன் தீயைத் தாங்குபவனாகிய காற்று .
வன்னிவண்ணம் செந்தாமரை ; செவ்வாம்பல் .
வன்னெஞ்சு கடுமையான மனம் .
வனகவம் காட்டுப்பசு .
வனச்சார்பு காட்டுப்பாங்கான முல்லைநிலம் .
வனச்சுவை நரி ; புலி ; புனுகுபூனை .
வனசஞ்சாரம் காட்டிலே திரிந்துவாழ்கை .
வனசந்தனம் வண்டுகொல்லி ; மரவகை .
வனசம் தாமரை .
வனசமூகம் பூஞ்சோலை .
வனசரம் காட்டுவிலங்கு ; காட்டானை ; காடு .
வனசரர் பாலைநில மக்கள் ; வேடர் .
வனசரிதன் காண்க : வனவாசி .
வனசன் காமன் .
வனசுரம் பாலைநிலம் .
வனசை திருமகள் ; சந்தனமரம் .
வனசோபனம் காண்க : வனசம் .
வனதீபம் காண்க : சண்பகம் .
வனதுர்க்கம் காட்டரண் .
வனதேவதை காடுறை தெய்வம் .
வனநரம் காண்க : வானரம் .
வனப்பிரியம் குயில் .
வனப்பு அழகு ; இளமைநிறம் ; பலவுறுப்புத் திரண்டவழிப் பெறுவதொரு செய்யுள் அழகு ; பெருந்தோற்றம் .
வனப்புவண்ணம் இசைவகை .
வனபதி பூவாது காய்க்கும் மரம் .
வனபந்தம் தடாகம் .
வனபலம் காண்க : ஆனைத்திப்பிலி .
வனபோசனம் சோலை முதலியவற்றில் நடத்தும் விருந்து ; திருவிழா .
வனம் காடு ; ஊர் சூழ்ந்த சோலை ; சுடுகாடு ; நீர் ; மலையருவி ; உறைவிடம் ; வழி ; துளசி ; புற்று ; அழகு ; மிகுதி ; நிறம் .
வனமரை காண்க : ஓரிதழ்த்தாமரை .
வனமல்லிகை காட்டுமல்லிகை ; ஊசிமல்லிகை .
வனமா காண்க : கொடிவேலி ; மரவகை .
வனமாலி திருமால் ; துளசி .
வனமாலை பலவகை நிறமுள்ள மலருந்தழையுங் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை ; துளசிமாலை .
வனரஞ்சனி முலைப்பால் .
வனராசன் அரிமா .
வனருகம் காண்க : வனசம் .
வனலட்சுமி வாழை .
வனவசம் சந்தனமரம் .
வனவன் வேடன் .
வனவாசம் காட்டில் வாழ்கை .
வனவாசி காட்டில் வாழ்பவன் .
வனாந்தரம் காட்டின் உட்பகுதி ; பாலைவனம் .
வனாந்தரமாய்க்கிடத்தல் மிகுதியாய் இருத்தல் .
வனி சுரம் .
வனிகை தோப்பு .
வனிதம் சிறப்பு ; மேன்மை .
வனிதை பெண் ; மனைவி .
வனைதல் உருவம் அமையச்செய்தல் ; அலங்கரித்தல் ; ஓவியம் எழுதுதல் .