விங்களம் முதல் - விசிட்டன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
விங்களம் குறைவு ; திரிவு ; நட்பின்மை ; உதவிபுரியப் பின்வாங்குதல் ; கபடம் ; களிம்பு .
விங்களித்தல் சூதுசெய்தல் ; வேறுபடுத்தல் ; நட்பில் மனம் வேறுபடுதல் ; நிலையற்றிருத்தல் ; பிரித்தல் .
விங்குதல் மிகுதல் ; துளைத்தல் .
விச்சம் தாமரைவகை .
விச்சவம் அம்பு .
விச்சாதரர் பதினெண்கணத்துள் ஒருசாரார் .
விச்சாவாதி வித்தையால் திறமையாக வாதிப்பவன் .
விச்சிரமித்தல் இளைப்பாறுதல் ; இளைப்பாறச் சயனித்தல் .
விச்சிராந்தி இளைப்பாறுகை .
விச்சிரானம் பேதிமருந்து .
விச்சின்னம் இடையில் விட்டுப்போகை ; இடையில் சிதைவுறுகை .
விச்சு விதை ; மிகுதி .
விச்சுதல் விதைத்தல் ; பரப்புதல் ; பிறர் மனத்தில் பதியவைத்தல் .
விச்சுவம் எல்லாம் ; நெடுமால் ; சுக்கு ; முழுமையும் .
விச்சுளி மீன்கொத்திப்பறவை ; சுறுசுறுப்புள்ளவர் ; ஒல்லி .
விச்சுளிப்பாய்தல் விரைவாகப் பாய்தல் .
விச்சுளியன் சுறுசுறுப்புள்ளவன் ; அறிவாளன் .
விச்சை வித்தை ; கல்வி ; அறிவு ; மாயவித்தை ; மந்திரம் ; காண்க : வித்தியாதத்துவம் ; தெரு ; வெள்ளெருக்கு .
விச்சையன் கல்வியாளன் ; மாயவித்தைக்காரன் .
விச்சொரூபம் வேறுபட்ட வடிவம் .
விசகலி மல்லிகை .
விசகலிதம் சிதைவு .
விசசனம் கொடுவாள் ; கொலை ; தண்டம் ; ஒரு நரகம் .
விசதம் வெளிப்படையானது ; அழுக்கற்றது ; வெண்மை ; தூய்மை ; எச்சில் .
விசம் தாமரைநூல் ; நஞ்சு ; விகிதம் ; செலவு ; படித்தரம் .
விசமம் சமமின்மை .
விசய அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தேழாம் ஆண்டு .
விசயசரிதன் வெற்றியாளன் .
விசயஞ்செய்தல் குரு , அரசர்போன்ற பெரியோர் எழுந்தருளுதல் .
விசயம் காண்க : விசையம் ; நூற்றுமுப்பத்தைந்து சிகரங்களையும் பதினேழு மேனிலைக் கட்டுகளையுமுடைய கோயில் ; ஐயம் ; ஆராய்வு ; தருமபுத்திரனுடைய சங்கு ; அடைக்கலம் .
விசயமுரசம் வெற்றிமுரசு .
விசயலக்குமி வெற்றித்திருமகள் .
விசயன் அருச்சுனன் ; திருமாலின் வாயில்காப்போன் ; வெற்றியாளன் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் ; சாலிவாகனன் ; கடுக்காய்வகை .
விசயார்த்தம் வெள்ளிமலை , கைலைமலை .
விசயை வெற்றித்திருமகள் , துர்க்கை , பார்வதி .
விசர் பைத்தியம் .
விசர்க்கம் ஒரு வடமொழி எழுத்து ; ஒழிகை ; விட்டுவிடுதல் ; மலங்கழித்தல் ; அபானவாயு ; தட்சிணாயனமார்க்கம் .
விசரம் கூட்டம் ; கொலை ; மரவகை .
விசலம் கஞ்சி ; தளிர் .
விசலி சீந்திற்கொடி .
விசலிகை காண்க : கொடிமல்லிகை .
விசவல்லி காண்க : கீழாநெல்லி .
விசளை சட்டி ; சட்டியளவு .
விசனப்படுதல் துன்புறுதல் .
விசனம் துன்பம் ; விடாமுயற்சி ; வேட்டை முதலியவற்றில் மிக்க விருப்பு ; பேராசை ; மனிதரில்லாவிடம் ; விசிறி ; தனிமை .
விசனம்பண்ணுதல் நெருக்கித் துன்புறுத்துதல் .
விசாகம் பதினாறாம் நட்சத்திரம் ; வைகாசி .
விசாகன் விசாகநாளில் பிறந்த முருகக்கடவுள் .
விசாணம் விலங்கின் கொம்பு .
விசாதி நோய் ; வேறான சாதி ; காண்க : விசாதி பேதம் .
விசாதிபேதம் வேறுபாடு மூன்றனுள் ஒன்றான சாதியால் உண்டாகும் வேறுபாடு .
விசாய்தல் மேலிடுதல் .
விசாரகன் நியாயவிசாரணை செய்பவன் .
விசாரணம் ஆராய்ச்சி .
விசாரணை ஆராய்ச்சி ; நியாயவிசாரிப்பு ; மேற்பார்வை ; போற்றுகை ; மரவகை .
விசாரணைக்காரன் மேற்பார்ப்போன் .
விசாரம் சூழ்வினை ; ஆராய்ச்சி ; கவலை .
விசாரி ஆராய்வோன் .
விசாரித்தல் ஆராய்தல் ; வினாவுதல் ; நினைத்தல் ; பாதுகாத்தல் ; போற்றுதல் .
விசாரிப்பு ஆராய்ச்சி ; நியாயவிசாரிப்பு ; போற்றுகை ; உபசாரம் ; மேற்பார்வை ; கண்காணிப்பாளன் ; ஊர்ப்பணியாளருள் ஒருவன் .
விசாலபுத்தி பரந்த அறிவு .
விசாலம் இடப்பரப்பு ; பெரியது ; பொலிவு ; மான்வகை ; ஒரு பறவைவகை ; ஒரு நாடு ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; வெண்கடம்பு ; வாழை ; மரவகை ; வாயுவிளங்கம் .
விசாலாட்சன் சிவபிரான் ; கருடன் .
விசாலாட்சி காசியில் உள்ள பார்வதி ; தடங்கண்ணி .
விசாலித்தல் விரிவுபெறுதல் .
விசாலை அவந்திநகர் ; மிதிலைப்பட்டணம் .
விசானம் சுடுகாடு .
விசி கட்டு ; பறையிறுக்கும் வார் ; விசிப்பலகை ; கட்டில் ; தண்டு ; அலை .
விசிக்கோல் அம்பு .
விசிகம் அம்பு ; இருப்புலக்கை ; அலை .
விசிகரம் அலை .
விசிகை முலைக்கச்சு ; கருத்து ; தெரு ; கடப்பாரை ; மருத்துவமனை .
விசிட்டஞானம் இறையறிவு .
விசிட்டம் குணத்தோடு கூடியது ; மேன்மையுள்ளது .
விசிட்டன் பெரியோன் .