வியாயாமம் முதல் - விரிசல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வியாயாமம் உடற்பயிற்சி .
வியாழக்குறிஞ்சி குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று .
வியாழம் காண்க : வியாழன் .
வியாழவட்டம் வானமண்டலத்தில் குருவின் பன்னிரு ஆண்டுச் சுற்று ; வியாழக்கிழமை தோறும் .
வியாழன் தேவகுரு ; ஒரு கோள் ; வியாழக்கிழமை .
வியாளம் புலி ; பாம்பு ; கெட்ட குணமுள்ள யானை ; ஒரு விலங்கு .
வியானன் உடல் வாயுக்களில் ஒன்றான இரத்த ஒட்டத்தை உண்டாக்கும் வாயு .
வியூகபேதம் படை அணி முறிதல் .
வியூகம் படைவகுப்பு ; திரள் ; விலங்கின் கூட்டம் .
வியோகம் சாவு ; பிறவிநீக்கம் ; பிரிவு .
வியோமம் வானம் .
விரக்தி காண்க : விரத்தி ; துறவு ; வெறுப்பு .
விரகநோய் காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம் .
விரகம் பிரிவு ; உலர்த்துகை ; காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம் ; காமம் .
விரகவேதனை காண்க : விரகநோய் .
விரகன் திறமைமிக்கவன் ; வல்லவன் ; அறிஞன் ; சுற்றத்தான் .
விரகு வழிவகை ; திறமை ; தந்திரம் ; சூழ்ச்சி ; விவேகம் ; ஊக்கம் ; தின்பண்டம் .
விரசம் வெறுப்பு ; நிந்தை .
விரசுதல் செறிதல் ; பொருந்துதல் ; மிகவும் விரைவுபடுத்துதல் ; சொல்லால் கடிந்து வெருட்டுதல் .
விரசை வைகுண்டலோகத்திலுள்ள ஆறு ; தருப்பை ; மாட்டுத்தொழுவம் .
விரட்டுதல் அச்சுறுத்துதல் ; துரத்துதல் ; விரைவுபடுத்துதல் .
விரணம் புண் ; காயம் ; புண்கட்டி ; சிலந்திப்புண் ; பகைமை ; முரிவு ; புல்வகை .
விரத்தம் துறவு ; வெறுப்பு .
விரத்தன் உலகப்பற்றில்லாதவன் ; வெறுப்புள்ளவன் ; தவசி ; மணமின்றி யிருப்பதாக உறுதி செய்துகொண்டவன் .
விரக்தி உலகப்பற்றில்லாதவள் ; தவத்தி ; வெறுப்பு ; பற்றின்மை ; மணமின்றியிருப்பதாக உறுதி செய்துகொண்டவள் .
விரதங்காத்தல் நோன்பு மேற்கொண்டொழுகுதல் .
விரதம் நோன்பு ; உறுதி ; தவம் ; அருவருப்பு ; ஒழிகை .
விரதம்பிடித்தல் பட்டினிகிடத்தல் .
விரதன் நோன்பு மேற்கொண்டோன் ; பிரமசாரி ; துறவி .
விரதி நோன்பு மேற்கொண்டோன் ; பிரமசாரி ; துறவி .
விரயம் செலவு ; மிகுசெலவு ; பேதியாதல் .
விரல் கைகால்களின் இறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு ; விரல் அகலமுள்ள அளவு .
விரல்நொடி விரலைச் சொடுக்குகை .
விரலணி மோதிரம் .
விரலம் காண்க : விரளம் .
விரலாழி மோதிரம் .
விரலி மஞ்சள் ; வெள்ளரி .
விரலேறு ஒரு தோற்கருவி .
விரவல் கலத்தல் .
விரவலர் பகைவர் .
விரவார் பகைவர் .
விரவு கலப்பு .
விரவுத்திணை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகவருஞ் சொல்லின் திணை .
விரவுதல் கலத்தல் ; அடைதல் ; ஒத்தல் ; பொருந்துதல் ; நட்புக்கொள்ளுதல் .
விரவுப்பெயர் பொதுப்பெயர் .
விரளம் செறிவின்மை ; இடைவெளி ; அவகாசம் ; அருமை .
விரளல் நெருக்கம் .
விரற்கடை ஒரு விரல் அகலமுள்ள அளவு .
விரற்கிடை ஒரு விரல் அகலமுள்ள அளவு .
விரற்சாடு விரலுறை .
விரற்செறி நெளிமோதிரம் .
விரற்புட்டில் விரலுறை .
விரற்பூண் காண்க : விரலாழி .
விரனெரித்தல் பெருந்துயரத்தால் விரல்களை நெரித்தல் .
விராகம் பற்றின்மை .
விராகன் பற்றில்லாதவன் ; அருகன் ; கடவுள் .
விராகு காண்க : விராகம் .
விராட்டு பரப்பிரமம் ; ஓரடியுள் இரண்டெழுத்துக் குறைந்து சீரொத்துவரும் செய்யுள் ; புள்ளரசு ; ஓர் அரசன் .
விராட்புருடன் பிரபஞ்ச ரூபமான பரப்பிரமம் .
விராதம் கைவேலை ; தடை ; நாட்கூலிவேலை .
விராதனன் கொலைஞன் .
விராமம் முடிவு ; தூக்கு ; ஒற்றெழுத்து ; இளைப்பாறுகை ; ஓய்வுநாள் .
விராய் விறகு ; பூச்செடிவகை ; தளவாடம் .
விரால் காண்க : வரால் .
விராலம் பூனை .
விராவுதல் காண்க : விரவுதல் .
விரி விரிந்த அளவு ; விரித்தல் ; பொதியெருதின் மேலிடுஞ் சேணம் ; திரை ; விரியன்பாம்பு ; காட்டுப்புன்னை ; விரிக்கும் கம்பளம் முதலியன .
விரிகாங்கூலம் நிருத்தக்கைவகை .
விரிகுளம்பு பிளவுபட்ட காற்குளம்பு .
விரிகொம்பு விலங்கின் பரந்த கொம்பு .
விரிச்சி வாய்ச்சொல்லாகிய நன்னிமித்தம் .
விரிச்சிகன் கதிரவன் ; நிமித்தங் கூறுவோன் .
விரிச்சிநிற்றல் நற்சொற் கேட்க விரும்பி நிற்றல் .
விரிச்சியோர்த்தல் நற்சொற் கேட்க விரும்பி நிற்றல் .
விரிசல் பிளவு ; அலை ; காண்க : விரியல் .