விருந்தை முதல் - வில்லை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
விருந்தை துளசிச்செடி .
விருந்தோம்பல் புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் போற்றுதல் .
விருந்தோர் புதியவர் .
விருப்பம் ஆசை ; அன்பு ; பற்று .
விருப்பன் ஆசையுள்ளவன் ; அன்புள்ளவன் .
விருப்பு காண்க : விருப்பம் .
விருப்புவெறுப்பு வேண்டுதல்வேண்டாமை .
விருபன் வெள்ளெலி .
விரும்பன் காண்க : விருப்பன் .
விரும்புதல் ஆசைப்படுதல் ; அழுத்தமாய்க் கருதுதல் .
விருவிருத்தல் கடுத்தல் ; உறைப்பாயிருத்தல் ; சினத்தாற் பரபரத்தல் ; காமம் முதலியவற்றால் உடலூருதல் ; விரைதல் .
விருவிருப்பு நஞ்சு முதலியன ஏறுங்குறிப்பு ; கடுப்பு ; காமம் ; முதலியவற்றால் உடல் ஊருகை ; உறைப்பு ; சினத்தால் உண்டாகும் பரபரப்பு ; விரைவு .
விருவிரெனல் கடுப்புக்குறிப்பு ; காமம் முதலியவற்றால் உடலூருதற்குறிப்பு ; உறைப்பாய் இருத்தற்குறிப்பு ; சினத்தால் உண்டாகும் பரபரப்புக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
விரூளை கடிவாளப்பூண் .
விரூபக்கண்ணன் சிவபிரான் .
விரூபகவுருவகம் ஒரு பொருட்குக் கூடாத தன்மைகள் பலவுங் கூட்டிச் செய்யும் உருவகம் .
விரூபம் விகாரவுருவம் ; வேற்றுமை .
விரூபாக்கன் சிவன் .
விரூபாட்சன் சிவன் .
விரேசனம் பேதிமருந்து ; மலங்கழிகை .
விரேசித்தல் பேதியாதல் .
விரை நறுமணம் ; கோட்டம் ; துருக்கம் , தகரம் , அகில் , சந்தனம் என்னும் ஐவகை மணப்பண்டம் ; நறும்புகை ; கலவைச்சாந்து ; பூந்தேன் ; மலர் விதை ; அண்டபீசம் .
விரைக்கரும்பு நடுதற்குரிய கரும்பு .
விரைக்கால் விதைக்குப் பயன்படும் முற்றற்காய் ; அண்டபீசம் .
விரைக்குவிடுதல் விதைக்கு உதவுமாறு கொடி மரங்களிற் காய்களை முற்றவிடுதல் .
விரைக்கொட்டை நிலக்கடலைமணி ; அண்டபீசம் .
விரைக்கோட்டை ஒரு கோட்டை விதை விதைத்தற்குரிய நிலவளவு ; விதைப்பதற்குரிய தானியத்தை உள்ளடக்கிச் சுற்றிக்கட்டிய வைக்கோற்கட்டு ; பீசப்பை .
விரைகால் விதைத்தற்குரிய நிலம் .
விரைசொல் விரைவைக் குறிக்கும் அடுக்குச் சொல் .
விரைத்தல் விதைத்தல் ; மணங்கமழ்தல் ; பரவச்செய்தல் ; திகைத்தல் ; மரத்துப்போதல் ; குளிர் முதலியவற்றால் நடுங்குதல் ; செருக்குக் காட்டுதல் .
விரைதல் வேகமாதல் ; அவசரப்படுதல் ; ஆத்திரங்காட்டுதல் ; மனங்கலங்குதல் .
விரைதெளித்தல் நாற்றுக்காக விதையிடுதல் ; அச்சுதந்தெளித்தல் .
விரைப்பு விதைப்பு ; காண்க : விறைப்பு .
விரைபோடுதல் விதையிடுதல் ; செயல் தொடங்குதல் .
விரையாக்கலி சிவபிரானது திருவாணை ; சிவபிரானை முன்னிட்டுச் செய்யும் ஆணை .
விரைவழித்தல் நறுமணப்பண்டம் பூசுதல் .
விரைவாதம் விதைவீக்கம் ; நீர்ச்சூலை ; பீசநோய்வகை .
விரைவித்து விதை .
விரைவினர் வேகமுடையவர் .
விரைவு வேகம் ; வெம்மை ; போற்றுகை ; வேண்டுதல் .
விரைவைத்தல் விதைப்பதற்கு நெல்லைத் தயார்செய்து வைத்தல் .
விரோசனம் காண்க : விரேசனம் .
விரோசனன் சூரியன் ; சந்திரன் ; அக்கினி ; பிரகலாதனின் மகன் .
விரோசினி கடுக்காய்வகை .
விரோதக்காரன் பகைவன் .
விரோதம் பகை ; மாறுபாடு ; காண்க : விரோதவணி ; இருள் ; மயிர் .
விரோதவணி சொல்லாலாவது பொருளாலாவது மாறுபாட்டுத்தன்மை தோன்ற உரைக்கும் அணிவகை .
விரோதவுவமை உவமான உவமேயங்கள் தம்முள் முரண் குணமுடையனவாகச் சொல்லும் உவமைவகை .
விரோதார்த்தம் எதிர்மாறான பொருள் ; பிடிவாதமாக எதிர்க்கை .
விரோதி பகைவன் ; அறுபதாண்டுக் கணக்கில் இருபத்துமூன்றாம் ஆண்டு .
விரோதிகிருது அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தைந்தாம் ஆண்டு .
விரோதித்தல் பகைத்தல் ; முரண்படுதல் ; எதிர்த்துநிற்றல் .
வில் அம்பெய்தற்குரிய கருவி ; வில்லின் நாண் ; காண்க : விற்கிடை ; வானவில் ; மூலநாள் ; ஒளி .
வில்மாடம் வில்போல் வளைந்த கட்டடப்பகுதி .
வில்யாழ் வில்வடிவான யாழ் .
வில்லகவிரல் விற்பிடிப்பில் இணைந்து செறிந்த விரல் .
வில்லங்கப்படுதல் தொந்தரவுக்குட்படுதல் ; அடைமானம் முதலிய பந்தகத்துக்குட்படுதல் .
வில்லங்கம் தடை ; துன்பம் ; வழக்கு ; அடைமானம் முதலிய பந்தகம் ; வியவகாரம் ; சொத்துரிமையில் உள்ள குற்றம் ; முட்டுப்பாடு ; வலாற்காரம் .
வில்லடை இடையூறு ; தடை ; பகைமை .
வில்லண்டம் வலாற்காரம் ; முட்டுப்பாடு .
வில்லரணம் விற்படையாலாகிய காவல் .
வில்லவன் கரும்புவில்லையுடைய மன்மதன் ; விற்கொடியை உடைய சேரன் .
வில்லாண்மை வில்லாற்றல் .
வில்லார் வில்லுடையவர் ; வேடர் .
வில்லாள் விற்றொழிலில் வல்லவன் .
வில்லாளன் விற்றொழிலில் வல்லவன் .
வில்லாளி விற்றொழிலில் வல்லவன் .
வில்லி காண்க : வில்லாளன் ; மன்மதன் ; வீரபத்திரன் ; அருச்சுனன் ; வேடன் ; வில்லிபுத்தூராழ்வார் .
வில்லிடுதல் காண்க : வில்வீசுதல் .
வில்லிமை வில்திறமை .
வில்லியர் வேடர் ; வில்வல்லோர் ; ஒரு சாதியார் .
வில்லுவம் வில்வமரம் .
வில்லேப்பாடு அம்புவிழும் எல்லை .
வில்லேருழவர் வீரர் ; வேடர் ; பாலைநில மக்கள் .
வில்லை வட்டமாயிருப்பது ; மணப்பில்லை ; ஒட்டுத்துணி ; காதணிவகை ; சேவகர் தரிக்கும் வட்டமான உலோகத்தகடு ; கோயில்களில் கிடைக்கும் பட்டைச்சோறு .