வினைசெயல்வகை முதல் - வினோதித்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வினைசெயல்வகை வினையைச் செய்யுந் திறம் .
வினைஞர் தொழில் செய்வோர் ; மருதநில மக்கள் ; கம்மாளர் ; கூத்தர் ; வணிகர் ; வேளாளர் .
வினைத்தலை போர்க்களம் .
வினைத்திட்பம் தொழில்செய்வதில் மனவலிமை .
வினைத்திரிசொல் திரிந்த வினைச்சொல் ; வழக்கிலின்றி அரிதிற் பொருளுணர்தற்குரிய வினைச்சொல் .
வினைத்தூய்மை செயலின் தூய்மை .
வினைத்தொகை காலங்கரந்த பெயரெச்சத் தொடர் .
வினைத்தொடர்ச்சி தீவினையின் பயன் .
வினைதீயோர் தீவினையோர் .
வினைதீர்த்தல் முன்னை வினையைப் போக்குதல் ; இடையூறு நீக்குதல் .
வினைதீர்த்தான் விநாயகன் .
வினைநர் தொழில்வல்லோர் .
வினைப்பகாப்பதம் ' செய் ' யென்னும் வாய்பாட்டால் வரும் முதனிலை .
வினைப்பகுதி பகுபதத்தில் வினைச்சொல்லாகிய பகுதி ; செயற்கூறு .
வினைப்பகுபதம் பகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்கத்தக்க வினைச்சொல் .
வினைப்பயன் முன்வினைப்படி வந்த பலன் .
வினைப்பெயர் தொழிற்பெயர் ; காண்க : வினையாலணையும் பெயர் ; செய்தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர் .
வினைமாற்று முன்சொன்ன தொழில் ஒழிய இனி வேறொன்று என்பதைக் காட்டுவதாகிய பொருண்மை .
வினைமுதல் கருத்தா .
வினைமுதற்றொழில் செயப்படுபொருள் .
வினைமூளுதல் ஊழ்வினை முதிர்ந்து பயன் தரும் நிலையில் அமைதல் .
வினையம் செய்தொழில் ; முன்னை வினை ; சூழ்ச்சி ; வஞ்சகம் ; வஞ்சக வேலைப்பாடு ; நிகழ்ச்சி ; கொடுஞ்செயல் .
வினையன் தொழில் செய்பவன் ; வஞ்சகன் .
வினையாட்டி ஏவல்வேலை செய்பவள் ; தீவினையுடையவள் .
வினையாண்மை தொழிலைச் செய்துமுடிக்குந் திறமை .
வினையாலணையும்பெயர் வினைமுற்றுப் பெயர்த்தன்மை பெற்றுவருவது .
வினையாள் ஏவல்செய்வோன் ; தொழில் இயற்றுவோன் ; தீவினையுடையவன் .
வினையாளன் ஏவல்செய்வோன் ; தொழில் இயற்றுவோன் ; தீவினையுடையவன் .
வினையிடைச்சொல் வினைத்தன்மை பெற்று வரும் இடைச்சொல்வகை .
வினையியற்சொல் உலகவழக்கிலுள்ள வினைச்சொல் .
வினையிலி கடவுள் .
வினையின்மை வினைப்பயன் இன்மையாகிய குணம் .
வினையுருபு வினைச்சொல்லின் உறுப்பான இடைநிலை , விகுதி முதலியன .
வினையுரைப்போர் தூதர் .
வினையுவமம் தொழில்பற்றி வரும் ஒப்புமை .
வினையுவமை தொழில்பற்றி வரும் ஒப்புமை .
வினையெச்சக்குறிப்பு காண்க : குறிப்புவினையெச்சம் .
வினையெச்சம் வினையைக்கொண்டு முடியும் குறைவினை .
வினையெஞ்சணி வினை எஞ்சி நிற்பதாகிய ஓரணி .
வினையெஞ்சுகிளவி காண்க : வினையெச்சம் .
வினைவயிற்பிரிதல் தலைவன் தலைவியை நீங்கி வேந்தன் ஆணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை .
வினைவர் தொழிலினர் ; சந்து செய்விப்பவர் ; அமைச்சர் .
வினைவலம்படுத்தல் எடுத்துக்கொண்ட செயலை வெற்றிபெறச் செய்தல் .
வினைவலர் பிறர் சொன்ன செயல்களைச் செய்வோர் ; தொழில்செய்வதில் வல்லமையுள்ளோர் .
வினைவலி செய்யக் கருதும் தொழிலின் வலிமை ; காண்க : வினைத்திட்பம் ; ஊழ்வினையின் வலிமை .
வினைவளர்த்தல் பகைவிளைத்தல் .
வினைவாங்குதல் செயலைப் புலப்படுத்தல் .
வினைவிநாசன் தீவினையை ஒழிப்பவனாகிய கடவுள் .
வினைவிளைத்தல் பொல்லாங்கு செய்தல் .
வினோதக்கூத்து அரசர்முன்பு நடிக்கும் வெற்றிக் கொண்டாட்டக் கூத்து .
வினோதம் அவா ; இயற்கைக்கு மாறானது ; விநோதம் .
வினோதன் ஒன்றில் ஈடுபட்டு அதிலேயே பொழுது கழிப்போன் ; உற்சாகி .
வினோதி ஒன்றில் ஈடுபட்டு அதிலேயே பொழுது கழிப்போன் ; உற்சாகி .
வினோதித்தல் விளையாடுதல் .