சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| வீழி | மருந்துச்செடிவகை ; திருவீழிமிழலை என்னும் ஊர் . |
| வீளை | சீழ்க்கை ; சிள்ளென்ற ஓசை ; சத்தம் . |
| வீற்றம் | வேறுபடுகை . |
| வீற்றாதல் | பிரிவுபடுதல் . |
| வீற்றிருக்கை | அரசிருக்கை . |
| வீற்றிருத்தல் | சிறப்போடிருத்தல் ; வேறுபாடு தோன்ற இருத்தல் ; இறுமாந்திருத்தல் ; தனிமையாயிருத்தல் ; கவலையற்றிருத்தல் . |
| வீற்று | வேறுபடுகை ; துண்டு ; கூறு ; தனிமை ; விளைவு . |
| வீற்றுத்தெய்வம் | உடலிலமர்ந்து காட்சியின்பத்தை உண்டாக்கும் தெய்வம் . |
| வீற்றும் | மற்றும் . |
| வீற்றுவளம் | பிற நாட்டுக்கில்லாத செல்வம் . |
| வீற்றுவீற்று | வெவ்வேறு . |
| வீறல் | வெடிப்பு . |
| வீறாப்பு | இறுமாப்பு . |
| வீறிடுதல் | காண்க : வீரிடுதல . |
| வீறு | தனிப்பட்ட சிறப்பு ; வெற்றி ; வேறொன்றற்கில்லா அழகு ; பொலிவு ; பெருமை ; மிகுதி ; நல்வினை ; மருந்து முதலியவற்றின் ஆற்றல் ; செருக்கு ; வெறுப்பு ; ஒளி ; வேறு ; தனிமை ; அடி . |
| வீறுதல் | மேம்படுதல் ; மிகுதல் ; கீறுதல் ; வெட்டுதல் ; அடித்தல் . |
| வீறுவாதம் | உண்மையில் நோக்கமின்றி வெற்றியே வேண்டுவோன் செய்யும் வாதவகை . |
|
|