வெண்ணாவல் முதல் - வெப்புள் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வெண்ணாவல் ஒரு நாவல்மரவகை .
வெண்ணிலம் வெறுந்தரை ; மணல்தரை .
வெண்ணிலவு நிலாக்கதிர் .
வெண்ணிலை ஈடுகாட்டாது வாங்கும் கடன் .
வெண்ணிலைக்கடன் ஈடுகாட்டாது வாங்கும் கடன் .
வெண்ணீர் சுக்கிலம் .
வெண்ணீறு திருநீறு .
வெண்ணெய் தயிரிலிருந்து எடுக்கப்படுவது ; தைலமருந்து காய்ச்சும் பக்குவவகை .
வெண்ணெய்த்தாழி வெண்ணெய் வைக்குஞ்சட்டி ; கண்ணபிரான் வெண்ணெய் திருடியது குறித்து நடத்தப்பெறும் கோயில் திருவிழா .
வெண்ணெய்வெட்டி கூர்மழுங்கியது ; பயனற்றவன் ; துணிவில்லாதவன் .
வெண்ணொச்சி மரவகை .
வெண்பட்டு வெள்ளை நிறமுள்ள பட்டு .
வெண்படலிகை வெள்ளித்தட்டு .
வெண்படை நெய்தற்குரிய நூற்பா .
வெண்பதம் இளம்பதம் .
வெண்பலி சாம்பல் .
வெண்பா நால்வகைப் பாக்களுள் ஒன்று .
வெண்பாசி பாசிமணிவகை .
வெண்பாட்டம் கோடைமழை ; முன்பணமின்றிவிடுங் குத்தகை .
வெண்பாட்டு காண்க : வெண்பா .
வெண்பாவை நாமகள் .
வெண்பிறப்பு மக்கட்பிறப்பு .
வெண்பிறை வெள்ளிய பிறைச்சந்திரன் .
வெண்புழுக்கல் இளம்புழுக்கல் ; இளம்புழுக்கலரிசி ; காண்க : வெண்சோறு .
வெண்புழுங்கல் இளம்புழுக்கல் ; இளம்புழுக்கலரிசி ; காண்க : வெண்சோறு .
வெண்பூம்பட்டு வெண்பட்டாடைவகை .
வெண்பூமான் கலைமகள் .
வெண்பொங்கல் பருப்பு , நெய் முதலியன சேர்த்துச் செய்த சோற்றுக்கலவை .
வெண்பொடி திருநீறு .
வெண்பொத்தி துகில்வகை .
வெண்பொன் வெள்ளி , சுக்கிரன் .
வெண்மண்டை பிச்சைக்காரர் கைக்கொள்ளும் உண்கலவகை .
வெண்மணி முத்து ; கருவிழியைச் சூழ்ந்துள்ள வெள்ளைவட்டம் .
வெண்மதி சந்திரன் ; காண்க : வெள்ளைச்சேம்பு .
வெண்மயிர் நரைமயிர் ; காண்க : வெண்சாமரை .
வெண்மலை கைலைமலை .
வெண்மழை மழைபெய்யும் நிலையை அடையாத வெற்றுமேகம் .
வெண்மீன் சுக்கிரன் .
வெண்முகில் காண்க : வெண்மழை .
வெண்மை வெண்ணிறம் ; தூய்மை ; ஒளி ; இளமை ; மனக்கவடின்மை ; அறிவின்மை ; புல்லறிவுடைமை .
வெதரி இலந்தைமரம் .
வெதிர் நடுக்கம் ; மூங்கில் ; விரிமலர் ; செவிடு .
வெதிர்ங்கோல் மூங்கிற்கோல் .
வெதிர்த்தல் நடுங்குதல் .
வெதிர்ப்பு அச்சம் ; கலக்கம் ; நடுக்கம் ; சினக்குறிப்பு .
வெதிரம் மூங்கில் .
வெதிரன் செவிடன் .
வெதிரேகம் வேறுபாடு ; பரிணாமம் ; எதிர்மறை .
வெதுக்கலன் துயரம் முதலியவற்றால் உடலிளைத்தவன் .
வெதுப்படக்கி ஒரு மருந்துச் செடிவகை .
வெதுப்பம் இளஞ்சூடு ; சூட்டினால் உண்டாகும் வயிற்றுப்போக்கு .
வெதுப்பு சுரநோய்வகை ; மாட்டுநோய்வகை ; காண்க : வெதுப்பம் .
வெதும்புதல் இளஞ்சூடாதல் ; சிறிது வாடுதல் ; வெம்மையாதல் ; கொதித்தல் ; சினங்கொள்ளுதல் ; மனங்கலங்குதல் .
வெதுவெதுப்பு இளஞ்சூடு .
வெந் முதுகு .
வெந்தயம் செடிவகை ; வெந்தயஅரிசி .
வெந்தழல் சிவந்தெரியும் தீ .
வெந்தித்தல் சினத்தல் ; சூடாதல் ; ஒற்றுமையாதல் ; கட்டுதல் .
வெந்திப்பு கொதிப்பு ; சினம் ; கட்டு .
வெந்திறல் மிகுவலிமை .
வெந்துப்பு மிகுவலிமை .
வெந்துளி துயரக்கண்ணீர் .
வெந்தை நீராவியிலேயே புழுங்கியது ; பிட்டு .
வெந்தையம் காண்க : வெந்தயம் .
வெந்நிடுதல் புறங்காட்டுதல் .
வெந்நீர் சுடுநீர் .
வெப்பசாரம் மனத்துயர் ; சினம் ; பொறாமை .
வெப்பம் வெம்மை ; கடுமை ; சுரநோய் ; பொறாமை ; ஆசை ; சினம் ; துயர் ; ஒரு நரகம் .
வெப்பர் காண்க : வெப்பம் ; சூடான உணவு .
வெப்பித்தல் சூடாக்குதல் ; மனக்கொதிப்பு உண்டாக்குதல் .
வெப்பிராளம் மனக்குழப்பம் .
வெப்பு வெம்மை ; சுரநோய் ; சுரதேவதை ; சுரநட்சத்திரம் ; தாபம் ; சினம் ; பொறாமை ; துயர் ; ஆசை ; கொடுமை ; தொழுநோய் .
வெப்புக்கட்டி நாட்பட்ட சுரத்தினால் வயிற்றில் உண்டாகும் கட்டிவகை .
வெப்புநோய் சுரத்தால் உண்டாகும் சூடு ; தொழுநோய் .
வெப்புள் வெம்மை .