வெள்ளைவிழி முதல் - வெற்றம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வெள்ளைவிழி கண்ணில் வெண்மையாயுள்ள பாகம் .
வெள்ளைவெளுத்தல் ஆடையழுக் ககற்றல் .
வெள்ளைவெளேரெனல் மிகுவெள்ளைக்குறிப்பு .
வெள்ளொக்கலர் குற்றமரபினர் ; செல்வந்தர்களை உறவினர்களாக உடையவர் ; மாசற்ற சுற்றத்தினை உடையவர் .
வெள்ளொத்தாழிசை வெண்பாவின் இனம் .
வெள்ளோசை வெண்பாவுக்குரிய ஓசை ; பாடும் போது தோன்றும் வெடித்த குரலாகிய இசைக்குற்றம் ; பாடுகையில் தோன்றும் வெடித்தகுரல் .
வெள்ளோட்டம் ஆய்வுக்காக முதன்முதலாகத்தேர் , மரக்கலம் முதலியவற்றை ஓடச்செய்தல் ; ஒன்றனைப் பயன்படுத்துதற்குமுன் செய்துபார்க்கும் ஆய்வு ; ஒருவன் நோக்கத்தை அறிய முன்னால் செய்யுல் செயல் .
வெள்ளோலை எழுதப்படாத ஓலை ; முத்திரையிடப்படாத ஓலை .
வெளி புறம் ; வெளிப்பக்கம் ; வானம் ; இடைவெளி ; வெளிப்படை ; வெட்டவெளி ; மைதானம் ; தூய்மை ; வெண்பா ; மேற்பார்வைக்குக் காணும் காட்சி .
வெளிக்கட்டு வீட்டின் முன்பாகம் .
வெளிக்காட்சி காண்க : வெளித்தோற்றம் .
வெளிக்குப்போதல் மலங்கழித்தல் .
வெளிக்குவருதல் வெளிப்படையாதல் ; மலங்கழிக்க உணர்வு உண்டாதல் .
வெளிகொடுவெளியே வெளிப்படையாய் .
வெளிச்சங்காட்டுதல் வழிதெரிய விளக்கின் மூலம் ஒளி காட்டுதல் ; வெளிக்குப் பகட்டாய்த் தோன்றுதல் ; ஒளி செய்தல் ; பகட்டுச் சொல்லால் மழுப்புதல் ; ஒளியால் கப்பல் முதலியவற்றுக்கு அடையாளம் தெரிவித்தல் .
வெளிச்சம் ஒளி ; விளக்கு ; தெளிவு ; பகட்டு .
வெளிச்சம்போடுதல் வாணிகப் பொருள்களை ஒளிபெறச்செய்தல் ; விளக்கேற்றுதல் ; உள்ளதை மறைத்துப் பொய்த்தோற்றம் காட்டுதல் .
வெளிச்சமாதல் விடிதல் ; விளங்குதல் .
வெளிச்சாடை வெளிப்பகட்டு ; மேற்பார்வைக்குக் காணும் காட்சி .
வெளிச்செண்ணெய் தேங்காயெண்ணெய் .
வெளிசம் தூண்டில் .
வெளித்தல் வெளிப்படையாதல் ; சூழ்ச்சி வெளியாதல் ; விடிதல் ; தெளிவாதல் ; வெண்ணிறங் கொள்ளுதல் ; பயனிலதாதல் ; வெறிதாதல் .
வெளித்தோற்றம் மேற்பார்வைக்குக் காணுங்காட்சி ; உற்பத்தி ; நேர்காட்சி ; உருவெளித்தோற்றம் .
வெளிதிறத்தல் வெளியிடுதல் ; வெளிப்படையாதல் ; காண்க : வெளிர்த்துக்காட்டுதல் .
வெளிது வெண்மையானது ; வெள்ளிய ஆடை .
வெளிநாட்டம் தீநெறி ஒழுகுகை .
வெளிநாடு அயல்நாடு ; வெளியுலகம் .
வெளிநாடுதல் வெளியிற் காணப்படுதல் ; தீநெறியில் ஒழுகுதல் .
வெளிப்பகட்டு காண்க : வெளிமயக்கு .
வெளிப்படுத்தல் பலர் அறியத் தெரிவித்தல் ; காட்டுதல் ; வெளியே வரச்செய்தல் ; புத்தகம் பதிப்பித்தல் ; வெளியே போகச்செய்தல் .
வெளிப்படுத்துதல் பலர் அறியத் தெரிவித்தல் ; காட்டுதல் ; வெளியே வரச்செய்தல் ; புத்தகம் பதிப்பித்தல் ; வெளியே போகச்செய்தல் .
வெளிப்படுதல் வெளியே வருதல் ; வெளிப்படத்தோற்றுதல் ; பொருள் விளக்கமாதல் ; பதிப்பிக்கப்படுதல் .
வெளிப்படை தெளிவானது ; மேற்பார்வையில் தோன்றுவது ; அணிவகை .
வெளிப்படைச்சொல் இயல்பாகப் பொருள் விளங்கி நிற்கும் மொழி .
வெளிப்படையுவமம் குறிப்பால் அன்றித் தெளிவாக அறியப்படும் உவமம் .
வெளிப்பயன் வெளிப்படத் தெரியக்கூடிய இலாபம் ; தெளிவாய் அறியப்படும் பொருள் .
வெளிப்பாடு வெளிப்படை ; காணிக்கை .
வெளிப்பு வெளியிடம் ; வெளிப்புறம் ; தெளிவு .
வெளிப்பேச்சு நாட்டுச்செய்தி ; உண்மையற்ற பேச்சு .
வெளிமடை கோயில் புறம்பேயுள்ள சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் பலி ; குளம் முதலியவற்றிலிருந்து வெளியே நீர் செல்லும் மதகு .
வெளிமயக்கு வெளித்தோற்றத்தால் உண்டாம் மதிமயக்கம் .
வெளிமான் மான்வகை ; பெண்மான் ; சங்ககாலத்துத் தலைவருள் ஒருவன் .
வெளிமுகடு வானத்தின் புறவெல்லை .
வெளிமுற்றம் வீட்டின் வெளிப்புறத்துள்ள திறந்தவெளி .
வெளியடை திரைச்சீலை .
வெளியரங்கம் தெளிவானது .
வெளியாக்குதல் காண்க : வெளிப்படுத்துதல் .
வெளியாடை தோரணம் ; புறவுடை .
வெளியாதல் காண்க : வெளிப்படுதல் .
வெளியார் அறிவிலார் ; புறம்பானவர் .
வெளியிடுதல் காண்க : வெளிப்படுத்துதல் ; வெளிவாங்குதல் .
வெளியீடு நூல் முதலியவற்றின் பதிப்பு ; நூற்பதிப்பு .
வெளியேற்றுதல் வெளியே போகச்செய்தல் ; நாடு கடத்துதல் ; காண்க : வெளிப்படுத்துதல் .
வெளியேறுதல் வெளியே போதல் ; வீட்டை விட்டு ஓடிப்போதல் ; வெளியூருக்குப் போதல் ; கேட்டினின்றும் தப்பித்துவருதல் .
வெளிர்த்துக்காட்டுதல் மழை நின்ற பின் வானம் வெளுத்தல் ; வெளிறின நிறமாகத் தோன்றுதல் .
வெளில் யானைகட்டுந் தூண் ; தயிர்கடையும் மத்து ; கம்பம் ; அணில் .
வெளிவருதல் பலராலும் அறியப்படுதல் ; பலருக்குங் கிடைக்குமாறு பதிப்பிக்கப்படுதல் .
வெளிவாங்குதல் மழை பெய்தபின் மேகங்கலைந்து வெளிச்சமாதல் .
வெளிவாசல் கட்டடத்தின் வெளியிலிருக்கும் வாசல் ; வீட்டின் முகப்பிலுள்ள முற்றம் .
வெளிவாய்ப்படுகை ஆறு குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம் .
வெளிவிடுதல் வெளிப்படுத்துதல் ; பலரறியச் செய்தல் .
வெளிவேடம் தன்னுருவைப் பிறர் அறியாதபடி மறைக்கை ; வெளித்தோற்றம் ; கபடம் .
வெளிற்றுப்பனை வயிரமற்ற பனை .
வெளிற்றுமரம் காண்க : அலிமரம் ; மரவகை .
வெளிற்றுரை பயனில் சொல் .
வெளிறன் அறிவில்லாதவன் ; கீழ்மகன் .
வெளிறு வெண்மை ; நிறக்கேடு ; வெளிச்சம் ; வெளிப்படுகை ; பயனின்மை ; அறியாமை ; இளமை ; திண்மையற்றது ; குற்றம் ; வயிரமின்மை ; மரவகை ; காண்க : அலிமரம் .
வெளிறுதல் வெண்மையாதல் ; நிறங்கெடுதல் .
வெளுத்தல் காண்க : வெளிறுதல் ; உண்மைநிலை வெளிப்படுதல் ; ஆடை வெளுத்தல் ; புடைத்தல் .
வெளுத்துவாங்குதல் மிக நன்றாகச் செய்தல் ; நிறம் கெடுதல் .
வெளுப்பு வெண்மை ; ஆடைவெளுத்தல் ; நோயால் உடல் வெளிறுகை ; புடைக்கை .
வெளேரெனல் வெண்மையாதற்குறிப்பு ; நிறம் வெளிறுதற்குறிப்பு .
வெற்பன் குறிஞ்சிநிலத் தலைவன் .
வெற்பு மலை ; பக்கமலை .
வெற்றம் வெற்றி ; வீரம் .