சொல்
|
அருஞ்சொற்பொருள் |
வெறும்பிலுக்கு | வீண்பகட்டு . |
வெறும்புறங்கூற்று | அலர்மொழி . |
வெறும்புறங்கூறல் | கோள்சொல்லுதல் ; அலர் தூற்றுதல் . |
வெறும்புறம் | ஒன்றுமில்லாதிருக்கை ; காரணமின்மை . |
வெறுமன் | வீண் . |
வெறுமனே | வீணாக ; வேலையின்றி . |
வெறுமனை | வீணாக ; வேலையின்றி . |
வெறுமை | பயனின்மை ; அறியாமை ; வறுமை ; கலப்பின்மை . |
வெறுமொருவன் | தனித்த ஒருவன் . |
வெறுமொன்று | தனித்த ஒன்று . |
வெறுவாய்க்கிலைகெட்டவன் | ஒன்றுமில்லாத வறியவன் . |
வெறுவாயலட்டுதல் | வீண்பேச்சுப் பேசுதல் ; தற்பெருமை பேசுதல் ; பிதற்றுதல் . |
வெறுவியர் | பயனற்றவர் . |
வெறுவிலி | ஒன்றுமில்லாத வறியவன் . |
வென் | வெற்றி ; முதுகு . |
வென்றவன் | வெற்றிபெற்றவன் ; பற்றற்றுச் சித்தி பெற்றவன் ; அருகக்கடவுள் . |
வென்றி | வெற்றி . |
வென்றிக்கூத்து | மாற்றான் ஒடுக்கமும் மன்னன் உயர்ச்சியும் காட்டும் கூத்து . |
வென்றிமாலை | போர்வென்றோர் சூடும் மாலை ; வெற்றியொழுங்கு . |
வென்றியன் | காண்க : வென்றவன் . |
வென்றோன் | வெற்றியடைந்தோன் ; புலனடங்கப்பெற்றோன் ; அருகக்கடவுள் . |
![]() |
![]() |