ஆனைக்கூடம் முதல் - ஆனோன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆனைச்சிலந்தி புண்கட்டி வகை .
ஆனைச்சீரகம் காண்க : பெருஞ்சீரகம் .
ஆனைச்சுண்டை மலைச்சுண்டை என்னும் சுண்டைவகை .
ஆனைச்செவியடி பூடுவகை .
ஆனைச்சேவகன் யானை வீரன் ; யானைப் படைத் தலைவன் .
ஆனைச்சொறி பெருஞ்சொறிசிரங்கு .
ஆனைசேனை மிகுதி .
ஆனைத்தடிச்சல் படர்கொடிவகை ; காண்க : புளிநறளை .
ஆனைத்தடிப்பு ஒரு பூடு .
ஆனைத்தாள் மதகு .
ஆனைத்திசை வடதிசை .
ஆனைத்திப்பிலி கொடிவகை .
ஆனைத்தீ பெரும்பசியை விளைப்பதொரு நோய் .
ஆனைத்தீநோய் பெரும்பசியை விளைப்பதொரு நோய் .
ஆனைத்தும்பிக்கை துதிக்கை ; காண்க : ஆனைத்தூம்பு .
ஆனைத்தும்பை பெருந்தும்பை .
ஆனைத்தூம்பு யானை வடிவாயமைந்த நீர் விழுங் குழாய் .
ஆனைத்தெல்லு படர்கொடி வகை ;
ஆனைத்தேர் விடத்தேர் .
ஆனைத்தொழில் பெருஞ்செயல் .
ஆனைத்தோட்டி அங்குசம் .
ஆனைந்து காண்க : ஆனஞ்சு .
ஆனைநார் மரவகை .
ஆனைநெருஞ்சி பெருநெருஞ்சி .
ஆனைப்படுவன் வெப்புநோய்வகை .
ஆனைப்பார்வை கீழ்நோக்கிய பார்வை .
ஆனைப்பிச்சான் ஒரு பூடு .
ஆனைப்புல் காண்க : ஆனைக்கோரை .
ஆனைப்புளி பப்பரப்புளி .
ஆனைப்பெருங்காயம் ஒருவகைப் பெருங்காயக் கலவை .
ஆனைப்பேன் கத்தரிச் செடியில் உண்டாகும் ஒருவகைப் பூச்சி .
ஆனைமஞ்சள் ஒரு பூடு .
ஆனைமயிர்க்காப்பு யானையின் வால்மயிரால் செய்தணியும் காப்பு .
ஆனைமீக்குவம் கருமருது .
ஆனைமீன் பெருமீன்வகை .
ஆனைமுகன் விநாயகன் ; ஓர் அசுரன் .
ஆனையச்சு ஒருவகைப் பொற்காசு .
ஆனையடி சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் கதி .
ஆனையடிச் செங்கல் வட்டமான செங்கல் .
ஆனையடியப்பளம் கலியாணத்தில் பயன்படுத்தப்படும் பெரிய அப்பளம் .
ஆனையர்க்குளா கடல்மீன்வகை .
ஆனையரசாணி மணமேடையில் வைக்கப்படும் யானை முதலிய உருவங்கள் .
ஆனையறுகு அறுகுவகை .
ஆனையறையும் புள் காண்க : ஆனையிறாஞ்சிப்புள் .
ஆனையாடுதல் குழந்தைகள் உடம்பை ஆட்டுதல் .
ஆனையாள் யானைவீரன் .
ஆனையிலத்தி யானையின் மலம் .
ஆனையிறாஞ்சிப்புள் ஒரு பெரும்பறவை .
ஆனையுண்குருகு ஒரு பெரும்பறவை .
ஆனையுண்ட விளங்கனி விளாம்பழத்தில் தோன்றும் ஒரு நோய் .
ஆனையுரித்தோன் சிவன் .
ஆனையூர்தி இந்திரன் ; ஐயனார் .
ஆனையேற்றம் ஆனைமேலேறி நடத்தும் தொழில் .
ஆனையோசை உழைப்பண் .
ஆனைவசம்பு அரத்தை .
ஆனைவணங்கி காண்க : தேட்கொடுக்கி : பெருநெருஞ்சி .
ஆனைவாயன்கற்றலை ஆனைக்கற்றலைமீன் ; பொருவாக்கற்றலைமீன் .
ஆனைவாழை நீண்ட குலைகொண்ட ஒருவித வாழை ; குளங்கோவை நெல் .
ஆனைவேக்கட்டான் நெல்வகை .
ஆனோன் காண்க : ஆனவன் .
ஆனைக்கூடம் யானை கட்டுமிடம் ; பழைய வரிவகை .
ஆனைக்கெளுத்தி மீன்வகை .
ஆனைக்கொம்பன் ஆறுமாதத்தில் விளையும் ஒருவகை நெல் ; வாழைவகை .
ஆனைக்கொம்பு யானைத் தந்தம் .
ஆனைக்கோடன்சுரை சுரைவகை .
ஆனைக்கோரை கோரைவகை .
ஆனைச்சப்பரம் அம்பாரி .
ஆனைச்சாத்தான் காண்க : கரிக்குருவி .
ஆனைச்சிரங்கு ஒருவகைப் பெரும்புண் .