இங்கிதக்களிப்பு முதல் - இசைக்குழல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இசிப்பு இழுக்கை ; நரம்புவலி ; சிரிப்பு .
இசிபலம் காண்க : பேய்ப்புடல் .
இசிவு நரம்பிழுப்பு ; மகப்பேற்று வலி .
இசிவுநொப்பி சன்னியைத் தடுக்கும் மருந்து .
இசின் இறந்தகால இடைநிலை ; அசைநிலை .
இசுதாரு காண்க : கடம்பு .
இசுப்பு காண்க : இழுப்பு .
இசும்பு வழுக்கு ; ஏற்றவிறக்கங்கள் மிகுந்த கடுவழி ; நீர்க்கசிவு ; எட்கசிவு .
இசை இசைவு ; பொன் ; ஊதியம் ; ஓசை ; சொல் ; புகழ் ; இசைப்பாட்டு ; நரம்பிற்பிறக்கும் ஓசை ; இனிமை ; ஏந்திசை ; தூங்கிசை , ஒழுகிசை ; சீர் ; சுரம் ; வண்மை ; திசை .
இசைக்கரணம் இசைக்கருவியில் காட்டும் தொழில் .
இசைக்கருவி தோற்கருவி , துளைக்கருவி , நரம்புக்கருவி , மிடற்றுக்கருவி ; கஞ்சக்கருவி என ஐவகைப்படும் வாத்தியம் ; வாத்தியம் .
இசைக்கிளை ஆயத்தம் , எடுப்பு , உற்சாகம் , சஞ்சாரம் , இடாயம் என்னும் ஐவகை இசை .
இசைக்குரற் குருவி குயில் .
இசைக்குழல் குழற்கருவி ; ஊதுகுழல் .
இங்கிதக்களிப்பு காமக்குறிப்போடு கூடிய களிப்பு .
இங்கிதக்காரன் பிறன் குறிப்பறிந்து அதற்கிசைய நடப்பவன் .
இங்கிதகவி பாட்டுடைத் தலைவன் கருத்தை விளக்கும் பாடல் ; இனிமை தரும் கவிபாடுவோன் .
இங்கிதம் குறிப்பு ; கருத்து ; இனிமை ; சமயோசித நடை ; போகை ; புணர்ச்சி .
இங்கிரி கத்தூரி ; செடிவகை .
இங்கிற்றி காண்க : இங்குத்தி .
இங்கு இவ்விடம் ; பெருங்காயம் .
இங்குசக்கண்டன் நீர்முள்ளி ; நெருஞ்சி .
இங்குசக்காண்டன் நீர்முள்ளி ; நெருஞ்சி .
இங்குசக்கண்டான் நீர்முள்ளி ; நெருஞ்சி .
இங்குசக்காண்டான் நீர்முள்ளி ; நெருஞ்சி .
இங்குடுமம் பெருங்காயம் .
இங்குத்தி ஒரு மரியாதைச் சொல் .
இங்குத்தை இவ்விடம் .
இங்குதல் தங்குதல் ; அழுந்துதல் .
இங்குதாரி ஒருவகை உலோகமண் .
இங்குதாழி பீதரோகிணி .
இங்குதி மரவகை .
இங்குராமம் காண்க : இங்குடுமம் .
இங்குலியம் சாதிலிங்கம் ; சிவப்பு .
இங்குளி காண்க : இங்குடுமம் .
இங்ஙன் இங்ஙனம் , இப்படி ; இவ்விடம் .
இங்ஙனம் இங்கு ; இவ்வாறு .
இச்சகம் முகமன் ; நேரில் புகழ்கை ; பெறக் கருதிய தொகை .
இச்சம் விருப்பம் ; பக்தியோடு புரியும் தொண்டு ; வினா ; அறியாமை ; பொய்கூறுகை .
இச்சாசத்தி விருப்பாற்றல் , சிவனுடைய ஐந்து சக்திகளுள் ஒன்று ; முதல்வன் ஆன்மாக்களுக்கு மலபந்தத்தை நீக்கிச் சிவத்தையளித்தற்கண் உள்ளதாகிய அருள் .
இச்சாப்பிராரத்தம் தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச் செய்விக்கும் பிராரத்த கருமவகை .
இச்சாபத்தியம் மருந்துண்ணுங் காலத்தில் புணர்ச்சி தவிர்கை ; கடுகு , நல்லெண்ணெய் முதலியவற்றை நீக்கியுண்ணும் பத்தியம் .
இச்சாபோகம் விரும்பியபடி இன்பம் நுகர்தல் .
இச்சாரோகம் போகாதிக்கத்தால் வரும் நோய் .
இச்சி காண்க : கல்லிச்சி ; மரவகை ; பெண்பால் விகுதி .
இச்சிச்சிச்செனல் பறவை முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு .
இச்சித்தல் விரும்புதல் .
இச்சியல் கடுகுரோகிணி .
இச்சியால் இத்திமரம் .
இச்சில் இத்திமரம் .
இச்சியை கொடை ; வேள்வி ; பூசனை .
இச்சுக்கொட்டுதல் பறவை ஒலித்தல் ; ஒலிக்குறிப்பினால் மறுமொழி கூறுதல் .
இச்சை விருப்பம் ; பக்தியோடு புரியும் தொண்டு ; வினா ; அறியாமை .
இச்சைசெய்தி காண்க : திரோபவம் ; மறைப்பு ; மயக்கம் .
இச்சையடக்கம் ஆசையை அடக்கிக் கொள்ளுகை .
இசக்கி துர்க்கையின் மாற்றுரு ; ஊர்த் தெய்வம் .
இசக்கியம்மன் துர்க்கையின் மாற்றுரு ; ஊர்த் தெய்வம் .
இசக்குபிசக்கு முறைகேடு ; குழப்பம் .
இசகுபிசகு முறைகேடு ; குழப்பம் .
இசங்கு சங்கஞ்செடி .
இசங்குதல் போதல் .
இசடு பொருக்கு .
இசப்புதல் ஏமாற்றுதல் .
இசருகம் காண்க : தும்பை .
இசல்தல் மாறுபடுதல் ; வாதாடுதல் .
இசலுதல் மாறுபடுதல் ; வாதாடுதல் .
இசலாட்டம் காண்க : இகலாட்டம் .
இசலி பிணங்குபவள் .
இசலிப்புழுக்குதல் கலகப்படுதல் .
இசவில் காண்க : கொன்றை .
இசாபு கணக்கு .
இசி உரிக்கை ; ஒடிக்கை ; சிரிப்பு .
இசிகப்படை ஒருவகை அம்பு .
இசிகர் காண்க : கடுகு .
இசித்தல் நரம்பிழுத்தல் ; நோவுண்டாதல் ; இழுத்தல் ; முறித்தல் ; உரித்தல் ; சிரித்தல் .