அட்டகுணம் முதல் - அடங்கலன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
அட்டு பனாட்டு , பனைவெல்லம் ; சமைக்கப்பட்டது .
அட்டுதல் அழித்தல் ; குற்றுதல் ; இடுதல் ; அள்ளுதல் ; எடுத்தல் ; வடிதல் ; வடித்தல் ; சமைத்தல் ; வார்த்தல் ; சொரிதல் ; சுவைத்தல் ; செலுத்துதல் ; தான சாசனம் அளித்தல் .
அட்டுப்பு காய்ச்சப்பட்ட உப்பு .
அட்டும் ' வரட்டும் ' என்றாற்போல வரும் ஒரு வியங்கோள் விகுதி .
அட்டூழியம் தகாதசெய்கை ; தீம்பு , கொடுமை .
அட்டை நீர்வாழ் உயிர்களுள் ஒன்று ; செருப்பினடி ; காகித அட்டை ; மிகுகனமுள்ள தாள் ; புத்தக மேலுறை .
அட்டையாடல் உடல் துண்டிக்கப்பட்டாலும் அட்டைபோல வீரனின் உடல் வீரச் செயல் காட்டி ஆடுதல் .
அட்டோலகம் உல்லாசம் ; பகட்டு .
அடக்கம் மனமொழிமெய்கள் அடங்குகை ; கீழ்ப்படிவு ; பணிவு ; அடங்கிய பொருள் ; மறை பொருள் ; கொள்முதல் ; பிணம் அடக்கம் செய்தல் .
அடக்கம்பண்ணுதல் உள்ளடக்கி வைத்தல் , மறைத்தல் சேமஞ்செய்தல் ; புதைத்தல் ; பிணம் முதலியவற்றைப் புதைத்தல் .
அடக்கல் மறைத்தல் ; கீழ்ப்படுத்துதல் ; உட்படுத்துதல் ; ஒடுக்கல் ; பணியச் செய்தல் .
அடக்கியல்வாரம் சிலவகைக் கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் என்னும் உறுப்பு .
அடக்குமுறை அடக்கியாளும் முறை ; கண்டித்து அடக்குகை .
அடகு இலை ; இலைக்கறி , கீரை ; ஈட்டுப் பொருள் ; கொதுவை ; மகளிர் விளையாட்டு வகை .
அடங்கல் எல்லாம் முழுதும் ; தங்குமிடம் ; பயிர்செய்கைக் கணக்கு ; செய்யத்தக்கது .
அடங்கல்முறை முதல் ஏழு தேவாரத் திருமுறைகளைக் கொண்ட நூல் ; சம்பந்தர் , அப்பர் , சுந்தரர் என்னும் மூவர் பாடிய பக்திப்பாடல்கள் .
அடங்கலன் அடங்காதவன் ; பகைவன் ; மனமடக்க மற்றவன் .
அட்டமி எட்டாம் நாள் .
அட்டமூர்த்தம் சிவனின் எட்டுவகை வடிவம் ; அவை : நிலம் , நீர் , தீ , காற்று , வான் , சூரியன் , சந்திரன் , இயமானன் .
அட்டயோகம் எட்டுவகை யோகநிலை ; அவை இயமம் , நியமம் , ஆதனம் , பிராணாயாமம் , பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் , சமாதி .
அட்டரக்கு உருக்கிய அரக்கு .
அட்டல் அழித்தல் ; காய்ச்சுதல் ; வார்த்தல் .
அட்டலக்குமி எட்டு இலக்குமி ; அவர்களாவார் ; தனலக்குமி , தானியலக்குமி , தைரியலக்குமி , சௌரியலக்குமி , வித்தியாலக்குமி , கீர்த்திலக்குமி , விசயலக்குமி , இராச்சியலககுமி .
அட்டலோககற்பம் பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , வெண்கலம் , தரா , வங்கம் , துத்தநாகம் என்னும் எட்டு உலோகங்கள் சேர்ந்த கலவைப் பொடி .
அட்டவசுக்கள் தேவதைகளுள் ஒரு பிரிவினரான எட்டு வசுக்கள் ; அவர்களாவார் ; அனலன் , அனிலன் , ஆபன் , சோமன் , தரன் , துருவன் , துருவன் பிரத்தியூடன் , பிரபாசன் .
அட்டவணை வரிசைக் குறிப்பு , தொகுத்துச் சேர்க்கப்பட்டது , பொருட்குறிப்பு .
அட்டவணைக்கணக்கன் அட்டவணைக்காரன் , பேரேடு எழுதும் கணக்கன் .
அட்டவணைச்சாலை கணக்குவேலை பார்க்கும் இடம் .
அட்டவணைப்பிள்ளை காண்க : அட்டவணைக் கணக்கன் .
அட்டவிஞ்சதி இருபத்தெட்டு .
அட்டவிகாரம் காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் , இடும்பை , அசூயை என்னும் எண்வகைத் தீக்குணங்கள் .
அட்டவீரட்டம் சிவபெருமான் வீரம் வெளிப்படுத்திய எட்டு இடங்கள் ; அவை : கண்டியூர் , கடவூர் , அதிகை , வழுவூர் , பறியலூர் , கோவலூர் , குறுக்கை , விற்குடி .
அட்டவெற்றி வெட்சி , கரந்தை , வஞ்சி , காஞ்சி , நொச்சி , உழிஞை , தும்பை , வாகை எனப்படும் எண்வகைப் போர் வெற்றி .
அட்டன் எண்வகை மூர்த்தியான சிவபெருமான் .
அட்டனம் சக்கராயுதம் .
அட்டாக்கரம் திருமாலை வழிபடும் ' ஓம் நமோ நாராயண ' என்னும் எட்டெழுத்து மந்திரம் .
அட்டாங்கம் எண்வகை உறுப்பு ; அவை : இருகால் , இருகை , இருதோள் , மார்பு , நெற்றி .
அட்டாணி கோட்டை மதில்மேல் மண்டபம் .
அட்டாதுட்டி மிக்க துடுக்குத்தனம் ; அடாவடி , தாறுமாறு ; குறும்பு .
அட்டாலகம் கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டாளகம் கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டாலம் கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டலிகை கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டளிகை கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டாலை கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டாவதானம் ஒரே வேளையில் எட்டுச் செயல்களில் கவனம் செலுத்துகை .
அட்டாவதானி ஒரே சமயத்தில் எண்வகை நினைவாற்றல் உள்ளவன் .
அட்டாளை ஒரு மரம் .
அட்டி அதிமதுரம் ; செஞ்சந்தனம் ; எட்டி ; பருப்பு ; தாமதம் ; தடை ; கப்பலின் பின்பக்கம் ; பீப்பாயின் மேல் கீழ்ப் பக்கம் .
அட்டி (வி) இட்டு , தடைந்து .
அட்டிகை மகளிர் கழுத்தணிவகை .
அட்டிப்பேறு தான சாசனத்தால் கொடுக்கப் பட்ட உரிமை .
அட்டிமை ஓமம் ; சீரகம் .
அட்டியல் காண்க : அட்டிகை .
அட்டில் சமையலறை , அடுக்களை , மடைப்பள்ளி , வேள்விச் சாலை .
அட்டிற்சாலை சமையலறை , அடுக்களை , மடைப்பள்ளி , வேள்விச் சாலை .
அட்டகுணம் காண்க : எண்குணம் .
அட்டசித்தி காண்க : அட்டமாசித்தி .
அட்டணங்கால் காண்க : அட்டணைக்கால் .
அட்டணை குறுக்கு , மடித்தல் .
அட்டணைக்கால் மடித்த கால் ; குறுக்காக மடக்கி வைக்கும் கால் ; கால்மேலிடும் கால் .
அட்டதாது எண்வகை உலோகம் .
அட்டதிக்கயம் எட்டுத் திக்கு யானை .
அட்டதிக்கு எண்திசை ; அவை : கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு .
அட்டதிக்குப்பாலகர் எட்டுத்திக்குக் காவலர் ; அவராவார் ; இந்திரன் , அக்கினி , யமன் , நிருதி , வருணன் , வாயு , குபேரன் , ஈசானன் .
அட்டநேமிநாதர் பொன்னெயில் வட்டத்தில் இருக்கும் சமணப் பெரியோர் .
அட்டபந்தம் கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து ; தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை .
அட்டபந்தனம் கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து ; தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை .
அட்டபரிசம் எட்டுவகைத் தொடுகை முறை ; அவை : தட்டல் , பற்றல் , தடவல் , தீண்டல் , குத்தல் , வெட்டல் , கட்டல் , ஊன்றல் .
அட்டபாதம் எண்காற் பறவை .
அட்டபுட்பம் எட்டுவகைப் பூ ; அவை : புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவட்டம் , குலளை , பாதிரி , அலரி , செந்தாமரை .
அட்டம் எட்டு ; குறுக்கு ; அருகிடம் ; அண்மை ; பக்கம் ; மேல்வீடு ; நேர் ; சாதிக்காய் ; பகை .
அட்டமங்கலம் எட்டுவகை மங்கலப் பொருள் ; அவை : கவரி , நிறைகுடம் , கண்ணாடி , தோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் , நூல்வகைகளுள் ஒன்று .
அட்டமம் எட்டாவது .
அட்டமாசித்தி எண்வகைச் சித்திகள் ; அவை : அணிமா , மகிமா , கரிமா , இலகிமா , பிராத்தி , பிராகாமியம் , ஈசத்துவம் , வசித்துவம் .