இரைமீட்டல் முதல் - இலக்காரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இலக்கணச்சிதைவு இலக்கண நூலிலே விதித்த விதிகளுக்கு விலக்காகச் சிதைந்து வழங்கும் சொல் ; தவறாய் வழங்கும் சொல் .
இலக்கணச்சுழி குதிரைகளுக்கு உடையனவாகச் சொல்லப்படும் நல்ல சுழி .
இலக்கணச்சொல் காண்க : இலக்கணமுடையது .
இலக்கண நூல் ஒரு மொழியைப் பேசுதற்கும் எழுதுதற்கும் உரிய முறையைக் கற்பிக்கும் நூல் ; ஏதாயினும் ஒரு பொருளின் இயல்பை விளக்கும் நூல் .
இலக்கணப்போலி இலக்கணம் உடையதுபோல் அடிப்பட்ட சான்றோராலே தொன்று தொட்டு வழங்கப்படும் சொல் .
இலக்கணம் சிறப்பியல்பு ; இயல்பு ; அடையாளம் ; நல்வாழ்வை உரைக்கும் உடற்குறி ; அழகு ; ஒழுங்கு ; இலக்கியத்தினமைதி ; எழுத்திலக்கணம் , சொல்லிலக்கணம் ; பொருளிலக்கணம் , யாப்பிலக்கணம் , அணியிலக்கணம் என்னும் ஐவகை இலக்கணம் .
இலக்கணமுடையது இலக்கண வழியால் வரும் சொல் .
இலக்கண வழக்கு இலக்கண நடை .
இலக்கண வழு இலக்கணப் பிழை .
இலக்கணி இலக்கணம் அறிந்தவன் ; அழகன் .
இலக்கணை ஒரு பொருளை நேரே உணர்த்தும் சொல் , அப் பொருளை உணர்த்தாது அதனோடு இயைபுடைய மற்றொரு பொருளை உணர்த்துவது .
இலக்கம் விளக்கம் ; குறிப்பொருள் ; நூறாயிரம் ; எண் ; எண்குறி ; இலக்கு ; காணுதல் .
இலக்கமடைத்தல் எப்படிக் கூட்டினும் மொத்த எண் ஒன்றேயாகும்படி எண்களைக் கட்டங்களில் அடைத்தல் .
இலக்கமிடுதல் எண் குறித்தல் ; கணக்கிடுதல் .
இலக்கர் இலக்கமென்னும் தொகையினர் ; ஆடை ; கந்தை ; சீலை .
இலக்காந்தரம் இடையிலக்கம் .
இலக்காரம் சீலை ; ஆடை .
இல்பொருள் அசத்து ; இல்லாத பொருள் .
இல்பொருள் உவமை இல்லாத ஒன்றனைக் கற்பித்துக்காட்டும் உவமை , அபூத உவமை .
இல்லக்கிழத்தி மனைவி .
இல்லகம் வீடு .
இல்லடை அடைக்கலம் ; அடைமானப்பொருள் ; ஒட்டடை ; பண்டசாலை ; இல்லுவமம்
இல்லடைக்கலம் அடைக்கலப் பொருள் ; அடைமானப்பொருள் .
இல்லத்துப்பிள்ளை ஈழவர் பட்டப்பெயர் .
இல்லது பிரகிருதி ; இல்லாதது ; கிடைக்காதது ; இல்பொருள் ; மனையிலுள்ளது ; மனைவியினுடையது .
இல்லம் வீடு ; மனைவி ; இல்வாழ்க்கை ; தேற்றாமரம் .
இல்லல் நடக்கை ; கடத்தல் ; போகுதல் .
இல்லவள் மனைவி ; வறியவள் .
இல்லவன் கணவன் ; தலைவன் ; வறிஞன் .
இல்லவை இல்லாதவை ; மனையில் உள்ளவை .
இல்லறம் இல்வாழ்க்கை , இல்லத்தில் மனையாளோடு கூடிவாழும் ஒழுக்கம் ; இல்வாழ்வார் கடமை .
இல்லாக்குடி வறுமைக் குடும்பம் .
இல்லாக்குற்றம் வறுமை ; அபாண்டம் .
இல்லாண்முல்லை பாசறைத் தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை ; தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைக் கூறும் புறத்துறை .
இல்லாண்மை குடியினை ஆளும் தன்மை ; தன் குடியிலுள்ளாரை உயரச்செய்து தன்வழிப் படுத்தல் .
இல்லாத்தனம் வறுமை .
இல்லாததும்பொல்லாததும் பொய்யும் தீங்கு விளைப்பதும் .
இல்லாதபொய் முழுப் பொய்
இல்லாதவன் வறியவன் .
இல்லாமை இன்மை , வறுமை .
இல்லாவாட்டி வறியவள் .
இல்லாள் மனைவி ; மருத முல்லை நிலங்களின் தலைவியர் ; வறுமையுடையவள் .
இல்லாளன் இல்லறத்தான் ; கணவன் .
இல்லாளி இல்லறத்தான் ; கணவன் .
இல்லி சில்லி , பொள்ளல் , ஓட்டை ; தேற்றாமரத்தின் இலை ; வால்மிளகு ; ஒருவகைப் புழு .
இல்லிக் கண்ணன் மிகச் சிறிய கண்ணுடையான் ; கூச்சுக் கண்ணுள்ளவன் .
இல்லிக்காது சிறிய துளையையுடைய காது .
இல்லிக்குடம் ஓட்டைக் குடம் .
இல்லிடம் வீடு ; ஊர் .
இல்லிமூக்கு சில்லிமூக்கு ; இரத்தம் வடியும் மூக்கு .
இல்லிறத்தல் பிறன் மனையாளை விழைதல் .
இல்லுவமம் உவம அணியுள் ஒன்று , உலகத்தில் இல்லாத ஒன்றனை உவமையாக எடுத்துச் சொல்லுதல் .
இல்லுவமை உவம அணியுள் ஒன்று , உலகத்தில் இல்லாத ஒன்றனை உவமையாக எடுத்துச் சொல்லுதல் .
இல்லுறைகல் அம்மிக்கல் .
இல்லுறைதெய்வம் வீட்டில் வாழும் தெய்வம் .
இல்லெலி வீட்டெலி .
இல்லெனல் இல்லையென்று சொல்லி மறுத்தல் ; பொருள் இல்லை என்று சொல்லுதல் ; இறந்து போனான் என்று சொல்லுதல் ; சூனிய மாகுகை .
இல்லை உண்டு என்பதன் எதிர்மறை ; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று ; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று .
இல்லைசெய்தல் மறுத்தல் .
இல்லொடுவரவு குடிப்பிறப்பு .
இல்லொழுக்கம் காண்க : இல்லறம் .
இல்வழக்கு பொய்வழக்கு ; இல்லதனை இல்லையென்கை .
இல்வாழ்க்கை மனையாளோடு கூடிவாழ்கை ; இல்லறத்தில் வாழ்கை .
இல்வாழ்பேய் பொருந்தா மனைவி .
இல்வாழ்வான் இல்லறத்தோடு கூடி வாழ்பவன் .
இல்வாழ்வு காண்க : இல்வாழ்க்கை .
இல இலவு ; இலவமரம் ; 'ஏடீ' என்னும் பொருளில் வரும் விளிப்பெயர் .
இலக்கணக்கருமம் சாமுத்திரிகம் ; அங்க இலக்கண நூல் .
இரைமீட்டல் அசைபோடுதல் .
இரையெடுத்தல் பறவை , பாம்பு முதலியன உணவுகொள்ளுதல் ; உணவு தின்னுதல் ; அசைபோடுதல் .
இரௌத்தன் காணக : இராவுத்தன் .
இரௌத்திரம் பெருஞ்சினம் ; ஒன்பான் சுவையுள் ஒன்று ; பகலிரவுகளுக்குத் தனித்தனியே உரிய பதினைந்து முழுத்தங்களுள் முதலாவது .
இரௌத்திரி அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்து நாலாம் ஆண்டு ; ஒரு சிவசித்தி .
இரௌரவம் ஒரு நரகம் ; சிவாகமத்துள் ஒன்று .
இல் இடம் ; வீடு ; இல்லறம் ; மனைவி ; மருதமுல்லை நிலங்களின் தலைவியர் ; குடி ; இராசி ; தேற்றாங்கொட்டை ; இன்மை ; சாவு ; எதிர்மறை இடைநிலை ; ஐந்தாம் வேற்றுமை உருபு ; ஏழாம் வேற்றுமை உருபு .