சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இலாவணம் | போர்வீரர்களின் பட்டி ; பெயர்ப் பதிவு ; மரபின்படி வரும் உத்தியோகத்துக்குக் கொடுக்கும் ஆணை ; வீடுதோறும் இனவாரி வழங்கும் அரிசி ; உப்பு ; உரையாடல் . |
| இலாவணமெழுதுதல் | படைக்கு ஆள் சேர்த்தல் . |
| இலாவணியம் | அழகு ; உப்புந்தன்மை . |
| இலாவிருதம் | நவகண்டத்துள் ஒன்று . |
| இலாளன் | இல்லாதவன் . |
| இலாளனை | காண்க : இலாலனை . |
| இலாளிதம் | அழகு . |
| இலி | இல்லாதவன்(ள்) ; இல்லாதது . |
| இலிகம் | எழுதுகை . |
| இலிகனம் | எழுதுகை . |
| இலிகி | எழுத்து ; எழுதுகை . |
| இலிகிதம் | எழுதப்பட்டது ; கடிதம் ; எழுதப்பட்ட புத்தகம் ; அறுபத்து நான்கு கலையுள் ஒன்றான எழுதுவதில் திறமை . |
| இலிகிதன் | எழுத்தாளன் . |
| இலிகுசம் | எலுமிச்சை மரம் . |
| இலிங்கக்கட்டு | சாதிலிங்கக் கட்டு , இஃது ஒரு வைப்பு மருந்துச் சரக்கு . |
| இலிங்கக்கல் | வளைவுக் கட்டடத்தின் நடுக்கல் . |
| இலிங்ககவசம் | ஆண்குறியின் மேல்தோல் ; சிவலிங்கத்திற்குச் சாத்தப்படும் மேலாடை . |
| இலிங்கங்கட்டி | இலிங்கத்தைக் கழுத்தில் கட்டியிருப்பவன் , வீரசைவன் . |
| இலிங்கசரீரம் | நுண்ணுடல் ; ஆன்மாவோடு கருப்பத்திலே கூடப்பதிந்தும் பருவுடலை விட்டுப் போகும்பொழுது கூடப்போயும் வீடு வரை பின்தொடர்வதான உடல் . |
| இலிங்கசுத்தி | ஐந்துவகைத் தூய்மையுள் ஒன்று . |
| இலிங்கசூலை | ஆண்குறியைப் பற்றிவரும் ஒரு நோய் . |
| இலிங்கத்தாரணம் | இலிங்கம் அணிகை . |
| இலிங்கத்தாரணத்தலம் | இலிங்கம் தரிக்கும் தலம் . |
| இலிங்கதாரி | காண்க : இலிங்கங்கட்டி . |
| இலிங்கப்புடோல் | ஐவிரலிக் கொடி ; கோவைக் கொடி . |
| இலிங்கப்புற்று | ஒரு மேகநோய் . |
| இலிங்கப்பொருத்தம் | மணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று . |
| இலிங்கபற்பம் | நீற்று மருந்துவகை . |
| இலிங்கம் | அடையாளம் ; ஆண்குறி ; ஏது ; வடமொழிப் பெயர்ச்சொற்குரிய பால் ; சிவலிங்கம் ; சாதிலிங்கம் ; இலிங்க புராணம் ; பிரகிருதி ; உபநிடதம் முப்பத்திரண்டனுள் ஒன்று ; கருவிழியின் நடுவிலிருக்கிற பாவை ; கறை ; நோய்க்குறி . |
| இலிங்கமுத்திரை | பூசை செய்யும்போது காட்டும் முத்திரைவகை . |
| இலிங்கமெழுகு | ஒருவகை மருந்து . |
| இலிங்கரோகம் | ஆண்குறியில் வரும் ஒருவகைப் புண் . |
| இலாகிரி | மதர்ப்பு ; மதுக்களிப்பு . |
| இலாகு | தாங்கல் . |
| இலாகுளம் | சைவப் பிரிவுகளுள் ஒன்று ; பாசுபத சமயப் பிரிவுகளுள் ஒன்று . |
| இலாகை | விதம் . |
| இலாங்கலம் | பூவகை ; பூனை ; கலப்பை ; கொடுங்கை . |
| இலாங்கலி | கலப்பை ; தென்னை ; செங்காந்தள் ; செங்கரந்தைப் பூண்டு ; வெண்தோன்றிப் பூண்டு ; பாம்பு ; பலராமன் . |
| இலாங்கூலம் | விலங்கின் வால் ; ஆண்குறி . |
| இலாங்கூலி | குரங்கு . |
| இலாச்சம் | தானிய அளவைவகை ; ஒரு நில அளவை . |
| இலாச்சி | செருகுபெட்டியின் அறை . |
| இலாசடி | வருத்தம் ; தொல்லை . |
| இலாசடை | வருத்தம் ; தொல்லை . |
| இலாசம் | நனைத்த தவசம் ; பொரி . |
| இலாசவோமம் | திருமணத்தில் பொரியால் செய்யப்படும் ஓமம் . |
| இலாசிகை | கூத்தாடுபவள் . |
| இலாசியம் | கூத்து . |
| இலாஞ்சலி | அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் . |
| இலாஞ்சனை | அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் . |
| இலாஞ்சனம் | அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் . |
| இலாஞ்சி | ஏலம் . |
| இலாஞ்சினைப்பேறு | பழைய வரிவகை . |
| இலாட்சை | செவ்வரக்கு . |
| இலாடசங்கிலி | கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி . |
| இலாடசிங்கி | கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி . |
| இலாடசிந்தூரம் | குதிரைக் காலிரும்பை நீற்றிச் செய்த பொடி . |
| இலாடம் | பரத கண்டத்தில் ஒரு நாடு ; வங்காள தேசப்பகுதி ; நெற்றி ; புளியமரம் ; காளை குதிரைகளின் கால் இலாடம் ; ஒரு மொழி ; சேலை ; மூல நட்சத்திரத்திற்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை ஒட்டிக் கணிக்கும் நாள் . |
| இலாடவி | அகில்மரம் . |
| இலாடன் | இலாட நாட்டான் ; பைராகி . |
| இலாடன் பருத்தி | பருத்திச் செடிவகை . |
| இலாபகரம் | ஊதியம் தருவது . |
| இலாபத்தானம் | இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் . |
| இலாபநட்டம் | பேறும் இழப்பும் . |
| இலாபம் | ஊதியம் ; பயன் ; ஆதாயம் ; தானிய அளவையில் முதல் எண்ணுக்கு வழங்கும் சொல் . |
| இலாபாந்தராயம் | குறித்த பேற்றை இடைநின்று விலக்கும் கருமத்தடை . |
| இலாமச்சம் | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாமச்சை | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாமிச்சு | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாமிச்சை | ஒருவகை மணமுள்ள வேர் . |
| இலாயம் | ஏலவரிசி ; குதிரைப் பந்தி , குதிரைச்சாலை . |
| இலாலனம் | நயஞ்செய்கை ; அன்பு பாராட்டுதல் ; சீராட்டுதல் ; செல்லம் காட்டுதல் . |
| இலாலனை | நயஞ்செய்கை ; அன்பு பாராட்டுதல் ; சீராட்டுதல் ; செல்லம் காட்டுதல் . |
| இலாலி | இச்சக வார்த்தை ; ஏமாற்றுவோன் ; காமி : தீமைக்கு உட்படுத்துவோன் ; ஒரு வாழ்த்து ; மங்கலப் பாடல் . |
| இலாவண்ணியார்ச்சிதம் | சீதனவகை . |
|
|
|