சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இழைக்குளிர்த்தி | துணியின் மென்மை ; புடைவையின் மென்மை . |
| இழைக்கை | இழைத்தல் . |
| இழைகொள்ளுதல் | தைத்தல் . |
| இழைத்த நாள் | விதித்த நாள் , ஏற்படுத்தப்பட்ட கால அளவு . |
| இழைத்தல் | செய்தல் ; குழைத்தல் ; தூற்றல் ; செதுக்குதல் ; வரைதல் ; மூச்சிரைத்தல் ; கூறுதல் ; நுண்ணிதாக ஆராய்தல் ; பூசுதல் ; வஞ்சினங் கூறுதல் ; கலப்பித்தல் ; அமைத்தல் ; இழையாக்குதல் ; மாத்திரை முதலியன உரைத்தல் ; பதித்தல் . |
| இழைத்துணர்தல் | நுட்பமாக ஆராய்ந்துணர்தல் . |
| இழைதல் | நூற்கப்படுதல் ; உராய்தல் ; சோறு முதலியன குழைதல் ; கூடுதல் ; நெருங்கிப்பழகுதல் ; உள்நெகிழ்தல் ; மூச்சுச் சிறுகுதல் ; குறுமூச்சு விடுதல் ; மனம் பொருந்துதல் . |
| இழைந்தவர் | கூடினவர் . |
| இழைநெருக்கம் | இழைக்குளிர்ச்சி , ஆடையின் மென்மை . |
| இழைப்பு | இழைத்தல் . |
| இழைப்புடைவை | நல்லாடை . |
| இழைப்புளி | சீவுளி ; இழைக்குந் தச்சுக்கருவி . |
| இழைபிடித்தல் | காயத்தை மூடித்தைத்தல் . |
| இழைபு | நூலழகுகளுள் ஒன்று , வல்லெழுத்துச் சேராது வருவது . |
| இழைபோடல் | புடைவை பொத்துதல் ; இழையிட்டுத் தைத்தல் . |
| இழையாடுதல் | இழையிட்டுத் தைத்தல் . |
| இழையிடுதல் | இழையிட்டுத் தைத்தல் . |
| இழையூசி | மெல்லிய ஊசி . |
| இழைவாங்கி | மெல்லிய ஊசி . |
| இளஃகுதல் | தளிர்த்தல் . |
| இளக்கம் | இளகிய தன்மை ; நெகிழ்ச்சி ; தளர்ச்சி ; மென்மை ; தணிவு . |
| இளக்கரித்தல் | வேகந்தணிதல் ; செயலில் கவனமின்றியிருத்தல் ; தளர்தல் ; இளகிப் பின்னிடுதல் . |
| இளக்காரம் | இளக்கம் ; மனநெகிழ்ச்சி ; தாழ்நிலை ; குறைவு . |
| இளக்குதல் | நெகிழச்செய்தல் ; அசைத்தல் . |
| இளக்கும் | அசைக்கும் . |
| இளகம் | இலேகியம் , மருந்துவகை . |
| இளகல் | நெகிழ்தல் ; குழைதல் ; அசைதல் ; தழைத்தல் ; மென்மையாதல் ; உருகுதல் ; தணிதல் . |
| இளகுதல் | நெகிழ்தல் ; குழைதல் ; அசைதல் ; தழைத்தல் ; மென்மையாதல் ; உருகுதல் ; தணிதல் . |
| இளங்கதிர் | பயிரின் இளங்கதிர் ; இளங்கிரணம் ; உதயசூரியன் . |
| இளங்கம்பு | கம்புவகை . |
| இளங்கலையான் | ஒரு நெல்வகை . |
| இளங்கள் | புதிய கள் . |
| இளங்கற்றா | இளங்கன்றையுடைய பசு . |
| இளங்கன்று | சிறுகன்று ; மரக்கன்று ; முதிராத கன்று . |
| இளங்காய் | முதிராத காய் . |
| இளங்கார் | கார்நெல் . |
| இளங்கால் | தென்றல் ; வெற்றிலையிளங்கொடி ; இளமைப் பருவம் . |
| இளங்காலை | அதிகாலை ; இளமைப் பருவம் . |
| இளங்காற்று | மெல்லிய காற்று , தென்றல் . |
| இளங்கிடை | ஊர்மாடுகள் எல்லாம் திரளும் வரை சேர்ந்த மாடுகளை மேய்ப்போன் நிறுத்தி வைக்கும் இடம் . |
| இளங்கிளை | தங்கை ; இளமைச் சுற்றம் . |
| இளங்குரல் | சிறுகுரல் ; பயிரிளங்கதிர் . |
| இளங்குருத்து | முதிராத குருத்து . |
| இளங்கேள்வி | துணை மேலாளன் . |
| இழுக்கடித்தல் | அலையவைத்தல் . |
| இழுக்கம் | பிழை ; ஒழுக்கந் தவறுகை ; தீயநடத்தை ; ஈனம் ; தளர்வு ; தாமதம் . |
| இழுக்கல் | வழுக்குகை ; வழுக்குநிலம் ; தளர்வு ; தவறுதல் . |
| இழுக்காமை | மறவாமை . |
| இழுக்காறு | தீநெறி , தீயொழுக்கம் . |
| இழுக்கு | குற்றம் ; பொல்லாங்கு ; நிந்தை ; தாழ்வு ; மறதி ; வழுக்கு ; தவறு . |
| இழுக்குதல் | தவறுதல் ; வழுக்குதல் ; இழத்தல் ; தளர்தல் ; துன்புறுதல் ; தள்ளிவிடல் ; மறத்தல் ; பின்வாங்கல் . |
| இழுகுணி | சோம்பேறி ; பிசினாறி . |
| இழுகுதல் | பூசுதல் ; பரத்தல் ; படிதல் ; தாமதித்தல் . |
| இழுங்கு | நீங்குகை ; ஈனம் , வழு . |
| இழுத்தல் | உறிஞ்சுதல் ; ஈர்த்தல் ; வலித்தல் ; வசமாக்கல் ; காலம் நீட்டித்தல் ; சுழித்து வாங்குதல் ; பின்வாங்குதல் ; புறத்திலுள்ள நிறைகுறைகளை வெளிப்படுத்தல் ; ஒலியை நீட்டுதல் ; சுரம் பாடுதல் . |
| இழுத்துவிடுதல் | செயலை நீட்டித்துவிடுதல் ; வலிந்து தொடர்புண்டாக்குதல் ; வெளிப்படுத்தல் ; புதிதாய் உண்டாக்குதல் . |
| இழுது | வெண்ணெய் ; நெய் ; நிணம் ; தேன் ; கள் ; குழம்பு ; சேறு ; தித்திப்பு . |
| இழுதுதல் | கொழுத்தல் ; நெய்த்தல் . |
| இழுதை | பேய் ; அறிவின்மை ; அறிவிலி ; பொய் . |
| இழுப்பாட்டம் | காலம் நீட்டித்தல் ; உறுதியின்மை . |
| இழுப்பாணி | கலப்பையின் ஏர்க்காலை நுகத்திலே பூட்டும் முளை ; காலங்கடத்துவோன் . |
| இழுப்பு | இழுக்கை ; கவர்ச்சி ; இசிவுநோய் ; நீரிழுப்பு ; காலத்தாழ்வு ; குறைவு ; உறுதியின்மை . |
| இழுப்புண்ணுதல் | இழுக்கப்படுதல் . |
| இழுப்புப்பறிப்பாதல் | போராட்டமாதல் ; போதியதும் போதாததும் ஆதல் . |
| இழுப்புமாந்தம் | ஒரு நாய் , மாந்தவகை . |
| இழுபறி | தொல்லை ; பிணக்கு ; போராட்டம் ; வாது . |
| இழுபறிப்படுதல் | தொல்லைப்படுதல் . |
| இழும் | இனிமை ; உவப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு ; மென்மை . |
| இழுமு | தித்திப்பு ; களிப்பு ; இனிமை . |
| இழுமெனல் | அனுகரணவோசை ; இனிய ஓசைக்குறிப்பு ; இனிமை ; சீர்மை ; வழுவழுப்பு . |
| இழுவல் | இழுக்கை ; காலந்தாழ்த்தல் ; சுறுசுறுப்பில்லாதவன் ; குறைவு ; உறுதியின்மை . |
| இழுவை | இழுப்பு ; இழுக்கப்படும் பொருள் ; வடம் ; இழுத்த தடம் ; ஒரு முட்செடி . |
| இழை | நூல் ; நூலிழை ; அணிகலன் ; கையிற்கட்டுங்காப்பு . |
| இழைக்கயிறு | நூற்கயிறு ; காப்புநூல் . |
| இழைக்குளிர்ச்சி | துணியின் மென்மை ; புடைவையின் மென்மை . |
|
|
|