சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஈன்றார் | பெற்றோர் . |
ஈன்றாள் | காண்க : ஈன்றவள் . |
ஈன்றோன் | காண்க : ஈன்றவன் . |
ஈனசுரம் | தாழ்ந்த குரல் , தாழ்ந்த ஓசை . |
ஈனத்தார் | கொன்றை . |
ஈனதை | இழிவு , கீழ்மை , தாழ்வு . |
ஈனம் | இழிநிலை ; குறைபாடு ; கீழ்மை , தாழ்வு , புன்மை ; கள்ளி ; சரிவு ; முயல் . |
ஈனல் | காய்த்தல் ; பெறுதல் ; கதிர் . |
ஈனவன் | இழிந்தோன் . |
ஈனன் | இழிந்தோன் . |
ஈனனம் | வெள்ளி . |
ஈனாயம் | நிந்தை , அவமதிப்பு , இழிவு . |
ஈனில் | கருவுயிர்க்குமிடம் , பேற்றுக்குரியவிடம் , மகப்பேறு நிலையம் . |
ஈனுதல் | கருவுயிர்த்தல் ; உண்டாக்குதல் ; குலைவிடுதல் ; தருதல் . |
ஈனை | இலை நரம்பு ; சித்திரக் குறிப்பு ; ஒரு நோய் . |
ஈனை எழுதுதல் | சித்திரக் குறிப்பு வரைதல் . |
ஈனோர் | இவ்வுலகத்தோர் . |
ஈரம் | நீர்ப்பற்று ; பசுமை ; குளிர்ச்சி ; அன்பு ; அருள் ; அழகு ; அறிவு ; குங்குமப்பூ ; பகுதி ; கரும்பு ; வெள்ளரி . |
ஈரல் | ஈருள் , மண்ணீரல் ; கல்ல¦ரல் ; வருத்துகை . |
ஈரல்கருகுதல் | வேதனை மிகுதல் ; மிகவும் அஞ்சுதல் . |
ஈரவன் | சந்திரன் . |
ஈரவிதைப்பு | புழுதி விதை ; ஈரநிலத்தில் விதைக்கை ; ஈரநிலத்தில் உண்டான பயிர் . |
ஈரவுள்ளி | காண்க : ஈருள்ளி . |
ஈரற்குலை | ஈரலின் கொத்து . |
ஈராட்டி | இரண்டு மனைவியர் ; காற்று மாறி அடிக்கை ; காற்று அமைதி ; நிலையின்மை . |
ஈராடி | ஈரம் ; மழைக்குணம் . |
ஈரி | கந்தை ; ஏழாங்காய் விளையாட்டின் ஓர் உறுப்பு , பலாக்காய்த் தும்பு ; மனக்கனிவு உள்ளவன்(ள்) . |
ஈரிணம் | களர்நிலம் ; பாழடைந்த நிலம் . |
ஈரித்தல் | ஈரமாதல் ; குளிர்தல் . |
ஈரிப்பு | குளிர்மை ; நட்பு . |
ஈரிய | ஈரத்தையுடைய ; குளிர்ந்த ; அன்புடைய . |
ஈரிழை | ஆடையின் இரட்டை நூல் . |
ஈருயிர்க்காரி | சூல்கொண்டவள் . |
ஈருயிர்ப்பிணவு | சூல்கொண்ட பெட்டை . |
ஈருள் | மண்ணீரல் , பித்தமிருக்குமிடம் . |
ஈருள்ளி | உள்ளிப்பூண்டு ; ஈரவெங்காயம் . |
ஈரெச்சம் | இருவகை வினைக்குறை , பெயரெச்சம் வினையெச்சம் . |
ஈரொட்டு | உறுதியின்மை , இரண்டுக்குற்றது ; ஐயம் . |
ஈரொற்றுவாரம் | தாளத்து இரண்டு மாத்திரை பெற்றுவரும் செய்யுள் . |
ஈலி | கைவாள் , சுரிகை . |
ஈவிரக்கம் | மனக்கசிவு ; இரக்கக்கொடை . |
ஈவு | கொடை ; நன்கொடைப் பொருள் ; பங்கிடுகை ; பிரித்துக் கண்ட பேறு ; ஒழிகை . |
ஈவுக்கணக்கு | பங்கிடுதல் ; பிரிவுக்கணக்கு , வகுத்தற் கணக்கு . |
ஈவுசோர்வு | சமயாசமயம் . |
ஈவோன் | கொடுப்பவன் , கொடையாளி , கற்பிப்பவன் . |
ஈழக்குலச்சான்றார் | சான்றார்குல வகுப்பு ; சாணார் ; ஏனாதி நாயனார் . |
ஈழங்கிழங்கு | பெருவள்ளி . |
ஈழத்தலரி | ஒருவகை அலரி ; பெருங்கள்ளி . |
ஈழதண்டம் | ஏர்க்கால் . |
ஈழநாடு | இலங்கை . |
ஈழம் | இலங்கை ; உலேர்கக்கட்டி ; கள்ளி ; கள் ; பொன் . |
ஈழமண்டலம் | இலங்கை . |
ஈழவன் | மலையாள நாட்டில் கள்ளிறக்கும் சாதியார் . |
ஈழுவன் | மலையாள நாட்டில் கள்ளிறக்கும் சாதியார் . |
ஈளை | கோழை ; இளைப்பு ; காசநோய் . |
ஈளைத்தரை | ஈரத்தரை . |
ஈற்றசை | பாட்டின் முடிவில் நிற்கும் அசை . |
ஈற்றம் | ஈனுகை . |
ஈற்றயல் | இறுதிக்கு முந்தையது . |
ஈற்றா | ஈற்றுப் பசு , கன்றீன்ற பசு . |
ஈற்று | ஈனுதல் ; ஈனப்பட்டது ; மரக்கன்று . |
ஈற்றேறுதல் | கதிர் விடுதல் ; கதிர் முற்றுதல் . |
ஈறல் | துன்பம் ; நெருக்கம் . |
ஈறிலான் | கடவுள் . |
ஈறிலி | கடவுள் . |
ஈறு | முடிவு ; உப்பளம் ; இறப்பு ; பல்ல¦று ; விகுதி ; எல்லை . |
ஈறுதப்பினபேச்சு | தகாதமொழி , எல்லைகடந்த சொல் . |
ஈன் | இவ்விடம் ; இவ்வுலகம் ; ஆச்சா . |
ஈன்றணிமை | அண்மையில் ஈனப்பட்டமை , புனிறு . |
ஈன்றணுமை | அண்மையில் ஈனப்பட்டமை , புனிறு . |
ஈன்றல் | ஈனல் ; உண்டாதல் . |
ஈன்றவள் | தாய் . |
ஈன்றவன் | தந்தை ; நான்முகன் . |
![]() |
![]() |