சொல்
|
அருஞ்சொற்பொருள் |
எச்சிற்கல்லை | உண்ட தையல் இலைக்கலம் , எச்சிலிலை . |
எச்சிற்கலப்பு | கணவன் எச்சிலை மனைவி உண்ணும் சடங்கு ; மணமக்கள் ஒருவர்பின் ஒருவர் ஒரு கலத்தில் பாலுண்ணுகை |
எச்சிற்கிதம் பாடுதல் | இழிந்த பொருளுக்காக ஒருவரைப் புகழ்ந்து கூறுதல் ; தகாத நோக்கத்தோடு குற்றத்திற்கு இணங்குதல் . |
எச்சிற்படுத்தல் | எச்சிலாக்குதல் ; புண்படுத்துதல் ; கன்னிமை கெடுத்தல் . |
எச்சிற்படுதல் | உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடுதல் . |
எச்சிற் புரட்டுதல் | எச்சிலிடுதல் . |
எச்சிற்பேய் | ஒருவகைப் பேய் ; கொடுமையான சிறுதெய்வம் ; பெருந்தீனிக்காரன் . |
எச்சிற்றழுதணை | எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய் . |
எச்சிற்றழும்பு | எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய் . |
எக்காளம் | மகிழ்ச்சி ஆரவாரம் ; ஓர் ஊதுகுழல் ; காகளம் ; செருக்கு ; ஏளனம் . |
எக்கி | நீர் முதலியன வீசுங்கருவி . |
எக்கியம் | வேள்வி . |
எக்கியோபவீதம் | பூணூல் . |
எக்குத்தக்கு | காண்க : எக்கச்சக்கம் . |
எக்குதல் | குவிதல் ; மேலே செல்ல வீசுதல் ; எட்டுதல் ; ஊடுருவிச் செல்லுதல் ; வயிற்றை உள்ளிழுத்தல் . |
எக்கே | வருத்தக் குறிப்பு . |
எகடம் | தென்னை . |
எகத்தாளம் | ஏளனம் , பரிகாசம் . |
எகத்தாளி | ஏளனம் , பரிகாசம் . |
எகரம் | ' எ ' என்னும் எழுத்து . |
எகணை | காண்க : எதுகை ; பொருத்தம் . |
எகிருதல் | துள்ளுதல் . |
எகின் | அன்னம் ; கவரிமா ; அழிஞ்சில்மரம் ; செம்மரம் ; புளியமரம் ; நீர்நாய் ; நாய் . |
எகினப்பாகன் | பிரமன் . |
எகினம் | காண்க : எகின் . |
எகினன் | பிரமன் ; நாய் . |
எகுன்று | குன்றிக்கொடி . |
எங்கண் | எவ்விடம் . |
எங்கணும் | எங்கும் . |
எங்கித்தை | எவ்விடத்தில் . |
எங்கு | எவ்விடம் . |
எங்குத்தை | எவ்விடம் . |
எங்கும் | எல்லாவிடத்தும் , யாண்டும் . |
எங்கே | எங்கு , எவ்விடம் . |
எங்கை | எம் தங்கை . |
எங்ஙன் | எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் . |
எங்ஙனம் | எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் . |
எங்ஙனே | எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் . |
எச்சம் | எஞ்சி நிற்பது , மிச்சம் ; கால்வழி , மக்கள் ; மகன் ; எச்சில் ; பறவை மலம் ; ஒரு மணப்பண்டம் ; குறைவு ; பிறப்பிலே வரும் குறை : குருடு , ஊமை , செவிடு , கூன் , குறள் , மா , மருள் , உறுப்பில் பிண்டம் என்னும் எட்டு வகை ஊனம் ; எக்கியம் , வேள்வி செல்வம் ; முன்னோர் வைப்பு ; தொக்கி நிற்பது ; உருபு முற்று எச்சங்கள் கொண்டு முடியும் பெயர் வினைகள் ; பெயரெச்ச வினையெச்சங்கள் . |
எச்சமிடுதல் | பறவைகள் மலங்கழித்தல் . |
எச்சரிக்கை | சாக்கிரதை ; விழிப்பாய் இருக்குமாறு குறிப்பிடுதல் ; முன்னறிவிப்பு ; அமைதியாயிருக்கச் சொல்லுகை ; எச்சரிக்கை கூறுகை ; எச்சரிக்கைப் பாட்டு ; |
எச்சரித்தல் | முன்னறிவித்தல் ; விழிக்கப் பண்ணுதல் ; தூண்டுதல் ; கண்டித்தல் ; புத்தி சொல்லுதல் . |
எச்சரிப்பு | எச்சரித்தல் ; முன்னறிவிப்பு . |
எச்சவனுமானம் | காரியங் கொண்டு காரணமறிதல் , ஆற்றில் நீர்வரக் கண்டவன் மலைக் கண் மழையுண்டென அறிதல் போல்வது . |
எச்சவாய் | குதம் , எருவாய் , மலவாய் . |
எச்சவும்மை | மறைந்து நிற்கும் தொடர்புடைய பொருளை விளக்கும் உம்மை , 'சாத்தனும் வந்தான்' என்றாற்போல வரும் உரை . |
எச்சன் | வேள்வி செய்வோன் ; வேள்வித் தலைவன் ; அக்கினி , தீக்கடவுள் ; யாக தேவதை ; வேள்வியின் அதிதேவதையான திருமால் . |
எச்சில் | உமிழ்நீர் ; உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடும் பொருள் ; உண்டு கழிந்த மிச்சில் ; மிச்சம் ; மலசலம் முதலியன ; வேள்வித் தீயிலிடும் அரிசி மாவாலாகிய ஓமப் பொருள் ; உச்சிட்டம் |
எச்சில் மாற்றுதல் | எச்சிலிலையை எடுத்தெறிந்துவிட்டு இடத்தைத் துப்பரவு செய்தல் . |
எச்சிலன் | கடும்பற்றுள்ளன் , பிசுனன் |
எச்சிலாக்குதல் | ஒருபொருளின் மேல் வாயெச்சில் படுதல் ; ஒன்றன் தூய்மையைக் கெடுத்தல் . |
எச்சிலார் | எச்சிலுடையவர் ; இழிந்தோர் . |
எச்சிலிடுதல் | உண்ட இடத்தைச் சாணமிட்டு மெழுகுதல் . |
எச்சிலிலை | உணவுண்டு எச்சிலான இலை . |
எ | ஏழாம் உயிரெழுத்து ; ஏழ் என்னும் தமிழெண் ; வினாவெழுத்து ; பஞ்சபட்சிகளுள் கோழியைக் குறிக்கும் எழுத்து . |
எஃகம் | கூர்மை ; ஆயுதப் பொது ; ஈட்டி ; வேல் ; சக்கரப்படை ; வாள் ; பிண்டிபாலம் ; சூலம் . |
எஃகு | கூர்மை ; உருக்கு ; ஆயுதப்பொது ; வேற்படை ; கத்தரிகை ; கத்தி ; மதிநுட்பம் ; வேல் . |
எஃகு | (வி) எஃகுஎன் ஏவல் ; நெகிழ் ; நீள் ; அவிழ் ; எதிர்தாக்கு ; தாழ்ந்தெழும்பு ; எட்டு ; உதைத்தேறு ; பஞ்சு முதலியன கொட்டு ; ஆராய் . |
எஃகுகோல் | பஞ்சு கொட்டும் வில் . |
எஃகுச்செவி | நுனித்தறியுஞ் செவி . |
எஃகுதல் | பஞ்சு முதலியன பன்னுதல் , பஞ்சு கொட்டுதல் ; பஞ்சு பறித்தல் ; ஆராய்தல் ; எட்டுதல் ; ஏறுதல் ; நெகிழ்தல் ; அவிழ்தல் ; நிமிர்தல் ; தாழ்ந்தெழும்பல் . |
எஃகுபடுதல் | இளகிய நிலையை அடைதல் . |
எஃகுறுதல் | அறுக்கப்படுதல் ; பன்னப்படுதல் . |
எஃது | எது . |
எக்கச்சக்கம் | தாறுமாறு , ஒழுங்கின்மை ; இசகுபிசகு . |
எக்கண்டப்பரப்பு | ஒன்றான முழுத் துண்டு . |
எக்கண்டம் | முழுக்கூறு ; கண்ணோட்டமின்மை . |
எக்கம் | ஒற்றை நரம்பு கட்டிய நரம்புக் கருவி , ஏகதந்திரி ; தாளம் ; ஒருதலைப் பறைவகை . |
எக்கமத்தளி | ஒரு முழவுவகை . |
எக்கர் | இடுமணல் ; நுண்மணல் ; மணற்குன்று ; இறுமாப்புடையவர் ; அவையல் கிளவி . |
எக்கரணம் | முக்காரம் , தமக்குள் மோதும் எருதுகளின் உரப்பொலி . |
எக்கரவம் | முக்காரம் , தமக்குள் மோதும் எருதுகளின் உரப்பொலி . |
எக்கல் | எக்கர் ,இடுமணல் ; நுண்மணல் ; மணற்குன்று ; நெருக்கம் ; எட்டல் ; ஏறுதல் ; குவித்தல் ; சொரிதல் ; பொருதல் ; வயிற்றை உள்ளிழுத்தல் ; வயிற்றையெக்கல் . |
எக்களித்தல் | குதூகலித்தல் , மிக மகிழ்தல் ; குமட்டுதல் . |
எக்களிப்பு | செருக்கோடுகூடிய மிகுமகிழ்ச்சி . |
![]() |
![]() |