முதல் - ஏகாக்கிரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஏகபோகம் தனக்கே உரிய அனுபவம் : இருவருக்கும் ஒத்த போகம் ; ஒருபோகம் விளைவது .
ஏகம் ஒனறு ; ஒப்பற்றது ; தனிமை ; வெண்கலம் ; மொத்தம் ; மிகுதி ; வீடு ; திப்பிலி ; அக்குரோணி எட்டுப் பங்கு கொண்ட படை .
ஏகம்பம் காஞ்சியில் உள்ள சிவன்கோயில் .
ஏகமாயிருத்தல் ஒன்றாயிருத்தல் ; மிகுதியாய் இருத்தல் .
ஏகராசி காருவா , அமாவாசை .
ஏகரூபன் கடவுள் .
ஏகல் உயர்ச்சி .
ஏகலபுச்சன் பைத்தியக்காரன் .
ஏகவசனம் ஒருமை , ஒருமைப்பால் ; ஒரேமொழி ; மெய் ; அவர் ; நீர் என்று பேசாது அவன் , நீ என்று பேசுகை , மரியாதைக் குறைவான பேச்சு .
ஏகவட்டம் ஒற்றை வடம் , ஒற்றைச்சர மாலை .
ஏகவடம் ஒற்றை வடம் , ஒற்றைச்சர மாலை .
ஏகவல்லி ஒற்றை வடம் , ஒற்றைச்சர மாலை .
ஏகவாணை பொதுவற ஆளுகை ; தனியரசு .
ஏகவாரம் ஏகாவலி , ஒற்றை வடம் ; ஒருபொழுது உண்கை .
ஏகவீரன் தனிவீரன் , ஒப்பற்ற வீரன் .
ஏகவெளி மறைவிலாப் பகுதி , பெருவெளி .
ஏகவேணி ஒற்றைச் சடை ; ஒற்றைச் சடையுடைய மூதேவி .
ஏகன் ஒருவன் ; தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் ; கடவுள் .
ஏகாக்கிரசித்தம் ஒன்றிலே ஊன்றிய மனம் , ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை ; வளமான சாப்பாடு .
ஏகாக்கிரதை ஒன்றிலே ஊன்றிய மனம் , ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை ; வளமான சாப்பாடு .
ஏகாக்கிரம் ஒன்றிலே ஊன்றிய மனம் , ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை ; வளமான சாப்பாடு .
ஏஏ உரக்கக் கூப்பிடும் விளியுருபு ; இகழ்ச்சிக் குறிப்பு .
ஏக்கம் விரும்பியது பெறாமையாலுண்டாகும் துன்பம் ; அச்சம் ; ஆசை .
ஏக்கம்பிடித்தல் துன்பம் மிகுதல் .
ஏக்கர் 43 ,560 சதுர அடி(4047 சதுர மீட்டர்) கொண்ட நிலப்பரப்பு அளவை .
ஏக்கழுத்தம் தலையெடுப்பு ; இறுமாப்பு ; வீற்றிருக்கை .
ஏக்கழுத்து தலையெடுப்பு ; இறுமாப்பு ; வீற்றிருக்கை .
ஏக்கறவு இச்சை ; ஒன்றைப் பெற விரும்பித்தாழ்ந்து நிற்கும் நிலை .
ஏக்கறுதல் இளைத்து இடைதல் ; ஆசையால் தாழ்ந்து நிற்றல் ; விரும்புதல் .
ஏக்கன்போக்கன் எளியவன் ; ஒன்றுக்கும் உதவாதவன் .
ஏக்கிபோக்கி எளியவன் ; ஒன்றுக்கும் உதவாதவன் .
ஏக்கிரிபோக்கிரி திக்கற்றவன் .
ஏக்கெறிதல் கவலையொழிதல் ; அச்சமுறுதல் .
ஏக்கை இகழ்ச்சி .
ஏககண்டமாய் ஒரே குரலாய் .
ஏககுடும்பம் பங்கிடப்படாத சொத்துள்ள குடும்பம் .
ஏககுண்டலன் ஒற்றைக் காதணியுடையோன் ; குபேரன் ; ஆதிசேடன் ; பலராமன் .
ஏககுரு உடன்கற்றோன் .
ஏகசக்கரவர்த்தி தனியாணை செலுத்துவோன் ; பொதுநீக்கி யாளுவோன் .
ஏகசக்கராதிபத்தியம் தனியரசாட்சி .
ஏகசக்கராதிபதி தனியாணை செலுத்தும் அரசன் .
ஏகசந்தக்கிராகி ஒரே தடவையில் மனத்திற் பற்றிக்கொள்பவன் .
ஏகசமன் ஒருநிகர் .
ஏகசமானம் ஒருநிகர் .
ஏகசரம் காண்டாமிருகம் .
ஏகசிந்தை ஒரே எண்ணம் , ஒரே நினைவு ; ஒத்த மனம் ; ஒன்றிலேயே செல்லும் சிந்தை .
ஏகசிருங்கம் ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகம் .
ஏகசிருங்கி ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகம் .
ஏகசுபாவம் ஒரே தன்மை ; ஒத்த தன்மை .
ஏகத்துவம் அத்துவிதம் ; ஒன்றாயிருக்கும் தன்மை .
ஏகத்தொகை முழுத் தொகை .
ஏகதண்டி துறவியருள் ஒருவகையார் , ஒற்றைக்கோல் தாங்கும் துறவி .
ஏகதந்தன் ஒற்றைக் கொம்புடைய விநாயகன் .
ஏகதார் ஒற்றை நரம்புடைய வாத்தியம் .
ஏகதாரவிரதன் ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளும் உறுதியுள்ளவன் .
ஏகதாளம் ஏழு தாளத்துள் ஒன்று , ஓர் ஒத்து உடைய தாளம் .
ஏகதேசம் ஒருசார் , ஒருபுடை ; சிறுபான்மை ; அருமை ; மாறுபாடு ; வேற்றுமை ; ஒவ்வாமை ; நிந்தை ; குறைவு .
ஏகதேசவறிவு சிலவற்றைமட்டும் அறியும் அறிவு , சிற்றுணர்வு .
ஏகதேசவுருவகம் இரு பொருள்களுள் ஒரு பொருளை உருவகமாக்கியும் இயைபுடைய பிறிதொன்றை உருவகப்படுத்தாமலும் உரைக்கும் அணிவகை .
ஏகதேசி ஓரிடத்து இருப்புக்கொண்டது .
ஏகதேவன் கடவுள் ; புத்தன் .
ஏகப்பசலி ஒருபோக நிலம் .
ஏகப்பட்ட மிகுதியான .
ஏகப்பிரளயம் ஒரே நீர்ப்பெருக்கு , பெருவெள்ளம் .
ஏகப்பிழை முழுதும் பிழை .
ஏகபத்திரிகை வெண்டுளசி .
ஏகபத்தினிவிரதம் ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளும் உறுதி .
ஏகபந்தனம் ஒன்றிப்பு ; ஒரே கூட்டமாய்க்கூடுதல் .
ஏகபாதம் ஒரு கால் ; நான்கடியும் ஒரே வகையாய் வரும் ஒருவகைச் சித்திரகவி ; ஓர் இருக்கை ; ஓற்றைக்கால் உயிரி .
ஏகபாவம் ஒரே தன்மை ; ஒத்த எண்ணம் .
ஏகபாவனை ஒரே பாவனை , ஒருமையாகப் பாவிக்கை .
ஏகபிங்கலன் பசப்படைந்த ஒற்றைக் கண்ணையுடைய குபேரன் .
ஏகபுத்திரன் ஒரே மகன் ; ஒரு மகனுடையவன் .
எட்டாம் உயிரெழுத்து ; பெருக்கம் ; அடுக்கு ; மேல்நோக்குகை ; இறுமாப்பு ; உழையிசையின் எழுத்து ; எய்யும் தொழில் ; அம்பு ; பிரிநிலை , வினா , எண் , தேற்றம் , ஈற்றசை , இசைநிறை என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல் ; விளிக்குறிப்பு ; இகழ்ச்சிக்குறிப்பு .
ஏஎ சாமவேதம் ; விளிக்குறிப்பு ; இரக்கக்குறிப்பு .