முதல் - ஐந்தொகைவினா வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஐந்தை சிறுகடுகு .
ஐந்தொகை விடுமுதல் , வரவு , செலவு , ஆதாயம் , இருப்பு இவற்றின் விவரமடங்கிய கணக்கு .
ஐந்தொகைவினா ஒருவகைக் கணக்கு .
ஐஞ்சிறு காப்பியம் நீலகேசி , சூளாமணி , யசோதர காவியம் , உதயணகுமார காவியம் , நாககுமார காவியம் .
ஐஞ்சுத்தி ஐவகைத் தூய்மை செய்கை ; ஆன்மசுத்தி ; தானசுத்தி ; திரவிய சுத்தி ; மந்திர சுத்தி ; இலிங்க சுத்தி .
ஐஞ்ஞீலம் கற்பூரம் ; இலவங்கம் ; சாதிக்காய் ; தக்கோலம் .
ஐஞ்ஞூறு ஐந்து நூறு , ஐந்நூறு .
ஐஞ்ஞை அறிவுகேடன் ; அழகு ; ஆடு .
ஐணம் மான்தோல் .
ஐதிகப்பிரமாணம் உலகுரையாகிய அளவை .
ஐதிகம் ஐதிகப்பிரமாணம் ; செவிவழிச் செய்தி , உலகுரை , தொன்றுதொட்டு வரும் கேள்வி .
ஐது அழகுடையது ; அழகு ; மெல்லியது ; நுண்ணியது ; வியப்புடையது ; இளகிய தன்மை ; செறிவில்லாதது .
ஐது நொய்தாக மிக எளிதாக .
ஐந்தடக்குதல் ஐம்பொறிகளையும் அடக்குதல் .
ஐந்தரம் அழகுள்ளது ; நெருக்கமின்மை ; பனை ; மந்தம் .
ஐந்தரு தேவலோகத்து ஐந்து மரங்கள் ; சந்தானம் ; தேவதாரம் ; கற்பகம் , மந்தாரம் , பாரிசாதம் .
ஐந்தருச்செல்வி இந்திரன் மனைவியாகிய இந்திராணி .
ஐந்தருநாதன் ஐந்து மரங்களுக்குத் தலைவனான இந்திரன் .
ஐந்தலை நாகம் ஐந்து தலைகளையுடைய ஒருவகைப் பாம்பு .
ஐந்தலைமணி ஐந்து மணிகளையுடைய கொத்துமணி .
ஐந்தவத்தை ஐந்து வகை நிலை ; சாக்கிரம் , சொப்பனம் , சுழுத்தி , துரியம் , துரியாதீதம் ; உடம்பினுட்பட்ட ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை .
ஐந்தவம் சாந்திர மதம் ; மிருகசீரிட நாள் .
ஐந்தவித்தல் ஐம்புலனடக்கல் ; ஐந்து பொறிகளையும் அடக்குதல் .
ஐந்தறிவுயிர் மக்கள் ; விலங்கு .
ஐந்தனுருபு இன் , இல் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு .
ஐந்தாங்கால் திருமணத்திற்கு ஐந்து நாள் முன்னதாக நடும் பந்தற்கால் ; ஒருவகை விளையாட்டு .
ஐந்தாம்வேதம் பாரதம் .
ஐந்தார் பனைமரம் .
ஐந்தானம் மிருகசீரிடம் .
ஐந்திணை ஐவகை நிலம் : குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ; அன்புடைக்காமம் பற்றிக் குறிஞ்சி , முல்லை , பாலை , மருதம் , நெய்தலாகிய ஐவகை நிலத்திலும் நிகழும் ஆடவர் மகளிர் ஒழுக்கம் .
ஐந்திணைச் செய்யுள் உரிப்பொருள் தோன்ற ஐந்திணையையும் கூறும் நூல் .
ஐந்திரம் இந்திரனாற் செய்யப்பட்ட இலக்கணநூலாகிய ஐந்திர வியாகரணம் ; கிழக்கு ; யோகவகை ; சிற்ப நூல் .
ஐந்திரி கிழக்கு .
ஐந்து மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறிகள் ; ஐந்தென்னும் எண் ; பஞ்சாங்கம் .
ஐந்துகில்போர்ப்போர் ஐந்து துணிகொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர் .
ஐந்துண்டி ஐந்து வகை உணவு ; கடித்தல் , நக்கல் ,பருகல் , மெல்லல் , விழுங்கல் .
ஐந்துப்பு பஞ்ச லவணம் ; இந்துப்பு ; கல்லுப்பு , கறியுப்பு ; வளையலுப்பு ; வெடியுப்பு .
ஐந்துபா ஐந்து வகையான செய்யுள் ; வெண்பா , ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா , மருட்பா .
ஐந்துமுகத்தோன் ஐந்து முகங்களுடைய சிவன் .
ஐந்துருவாணி தேரகத்துச் செறிகதிர் , தேரின் அச்சாணி .
ஐந்துவிரை ஐவகை மணப்பொருள்கள் ; கோட்டம் துருக்கம் , தகரம் , அகில் , சந்தனம் .
ஐந்துறுப்படக்கி நான்கு கால்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளும் இயல்புள்ள ஆமை .
ஐந்தெழுத்து பஞ்சாக்கர மந்திரம் , 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் ; தமிழின் சிறப்பெழுத்துகளான எ , ஒ ழ , ற , ன என்னும் ஐந்தெழுத்துகள் .
ஒன்பதாம் உயிரெழுத்து ; முன்னிலையொருமை விகுதி ; சாரியை ; தொழிற்பெயர் விகுதி ; பண்புப்பெயர் விகுதி ; வியப்பிடைச் சொல் ; இரண்டாம் வேற்றுமை உருபு ; அழகு ; கோழை ; இருமல் ; இளி என்னும் இசையின் எழுத்து ; யானையைப் பாகரதட்டும் ஓசை ; தலைவன் ; கணவன் ; ஆசான் ; அரசன் ; தந்தை ; கடவுள் ; அம்பு ; நுண்மை ; ஐந்து ; ஐயம் ; கடுகு ; சருக்கரை .
ஐக்கம் ஐக்கியம் , ஒன்றுபடுகை , ஒற்றுமை ; ஒன்றிப்பு .
ஐக்கவாதம் பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றெனக் கூறும் மதம் .
ஐக்கியநாணயசங்கம் கூட்டுறவால் நிதி பெருக்கும் நிறுவனம் .
ஐக்கியபாவம் ஒற்றுமைத் தன்மை .
ஐக்கியம் ஒற்றுமை , ஒன்றுபடுகை ; ஒன்றாந்தன்மை , ஒன்றிப்பு ; ஒன்றியம் .
ஐக்குஞ்சு தண்ணீர்விட்டான் கிழங்கு .
ஐககண்டியம் கருத்தொத்திருக்கை .
ஐகமத்தியம் ஒற்றுமை .
ஐகாந்திகம் பொதுமை நீங்கியது ; நிறைவு ; முடிவுடையது .
ஐகாரக்குறுக்கம் சார்பெழுத்துகளுள் ஒன்று ; இரண்டு மாத்திரையில் குறுகி ஒலிக்கும் ஐகாரம் .
ஐகாரம் 'ஐ' என்னும் எழுத்து .
ஐகான் 'ஐ' என்னும் எழுத்து .
ஐகிகம் இகத்துக்குரியது ; இம்மை , இம்மைக்குரியது ; இவ்வுலகம் .
ஐங்கணை மன்மதனுக்குரிய ஐந்து அம்புகள் ; தாமரை மலர் , அசோக மலர் , குவளை மலர் , மாம்பூ , முல்லை மலர் .
ஐங்கணைக்கிழவன் மன்மதன் , காமன் .
ஐங்கணையவத்தை தாமரை- சுப்பிரயோகம் (சொல்லும் நினைவும்) , அசோகம்-விப்பிரயோகம் (பெருமூச்சு விட்டு இரங்கல்) , குவளை-சோகம் (வெதும்பி உணவை வெறுத்தல்) , மா-மோகம் (அழுது பிதற்றல்) , முல்லை-சாதல் (மயங்கலும் சாதலும்) .
ஐங்கணைவில்லி காமன் .
ஐங்கதி குதிரையின் ஐவகையான நடை : மல்ல நடை , மயில் நடை , குரக்கு நடை , முயல் நடை , மனநடை (மல்லகதி , மயூரகதி , வானரகதி , சசகதி , சரகதி) .
ஐங்கரன் ஐந்து கைகள் உள்ளவன் , விநாயகன் .
ஐங்கனி சிறப்புடைய ஐந்து பழங்கள் ; எலுமிச்சம் பழம் , நாரத்தம் பழம் , மாதுளம் பழம் , தமரத்தம் பழம் , குளஞ்சிப் பழம் .
ஐங்காயத்தூள் பிள்ளைப் பேற்றிற்குப்பின் கொடுக்கப்படும் ஐந்து சரக்குகள் சேர்ந்த ஒருவகை மருந்து .
ஐங்காயம் ஐந்து காயம் ; கடுகு , ஒமம் , வெந்தயம் , உள்ளி , பெருங்காயம் . இவற்றுள் கடுகு , ஓமம் என்பனவற்றிற்குப் பதிலாக மிளகு , சுக்குச் சேர்த்தும் சிலர் கூறுவர் ; இயேசு நாதர் உடம்பிலுள்ள ஐந்து வடு ; தலைப் பிள்ளைக் கரு .
ஐங்காலம் பிராத காலம் , சங்கவ காலம் , மத்தியான காலம் , அபரான்ன காலம் , சாயான்ன காலம் , இவை சூரியோதயம் முதல் முறையே அவ்வாறு நாழிகை கொண்ட காலப்பகுதியாகும் .
ஐங்குரவர் ஐவகைப் பெரியர் ; அரசன் , ஆசிரியன் , தாய் , தந்தை , தமையன் .
ஐங்கூந்தல் ஐந்து வகையான ஒப்பனை செய்யப்படும் மகளிர் தலைமயிர் ; கொண்டை , குழல் , பனிச்சை , முடி , சுருள் என்பன .
ஐங்கோலம் இருப்பை வித்து , ஓமம் , கடுகு , கருஞ்சீரகம் , வேப்ப வித்து ஆகிய ஐந்து மருந்துச் சரக்குகள் .
ஐச்சுவரியம் செல்வம் .
ஐசிலம் இருள்மரம் , சிறுநாகம் .
ஐசுவரியம் செல்வம் , பேறு ; மேன்மை ; ஆற்றல் ; கடவுள் தன்மை .
ஐஞ்சந்தி ஐந்து தெருக்கள் கூடும் இடம் .
ஐஞ்சிறப்பு அருக தேவருக்குச் செய்யப்படும் பஞ்ச கலியாண பூசை .