முதல் - ஓட்டுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஓச்சன் பிடாரிகோயில் பூசாரி ; கணக்காயன் ; ஆசான் .
ஓச்சன் கத்தி பலி வெட்டும் அறுவாள் .
ஓச்சுதல் எறிதல் ; பாய்ச்சுதல் ; செலுத்துதல் ; வீசுதல் ; உயர்த்துதல் ; ஓட்டுதல்: தூண்டி விடுதல் .
ஓச்சை வறையல் , வறுத்த உணவு .
ஓசம் ஒளி ; மிகுபுகழ் ; நிமித்தம் ; சமர்த்து ; ஆதாரம் ; வலிமை ; ஆண்குறி .
ஓசரம் நிமித்தம் , பொருட்டு .
ஓசரி கேடு ; வியப்புக் குறிப்பு ; துன்பக் குறிப்பு ;
ஓசழக்கு அழகு ; வருத்தமின்மை ; சிரமமின்மை .
ஓசன் ஆசாரியன் .
ஓசனித்தல் பறவை சிறகடித்தல் ; போதற்கு முயலுதல் .
ஓசனை யோசனையளவு ; நான்கு காதம் .
ஓசி இரவல் ; ஆசிரியன் மனைவி .
ஓசிவனம் பிழைப்பு .
ஓசு புகழ் ; வலி ; சும்மா கிடைப்பது .
ஓசுநன் வலியோன் ; எண்ணெய் வாணிகன் ; பரவசாதியான் ; மீகாமன் .
ஓசை ஒலி ; எழுத்தோசை ; செய்யுளோசை ; வான் என்னும் பூதம் தோன்றுவதற்குக் காரணமாகிய ஏழு தன்மாத்திரை ; புகழ் ; இரைச்சல் ; மிடற்றொலி ; சொல் ; பேச்சு ; இயம் ; பாம்பு ; வாழை .
ஓசைசெய்தளை காலணிவகை .
ஓசையுடைமை இன்னோசையுடைமை , நூலழகு பத்தனுள் ஒனறு .
ஓசையுண்ணுதல் செய்யுளோசை இசைதல் .
ஓசையூட்டுதல் செய்யுள் ஓசையை இசையச் செய்தல் ; செய்யுளோசை வாய்பாட்டால் அளந்தறிதல் .
ஓட்டக்காரன் அஞ்சற்காரன் .
ஓட்டகம் பாடல் முழுதும் இதழ் குவிந்தும கூடியும் இயலும் எழுத்துகளேயுள்ள சித்திரகவி .
ஓட்டங்காட்டுதல் ஓடுவதுபோல நடித்தல் ; முன்னோடிக் காட்டுதல் ஏமாற்றுதல் .
ஓட்டசாட்டம் தடபுடல் .
ஓட்டடுக்கு வீடு ஓடு வேய்ந்த மனை .
ஓட்டடை அப்பவகை .
ஓட்டத்தி ஓட்டுத் துத்திச்செடி .
ஓட்டப்பம் காண்க : ஓட்டடை .
ஓட்டம் ஓடல் ; மேலுதடு ; உதடு ; நீரோட்டம் ; ஓடுமோட்டம் ; வருவாய் ; தோல்வி ; உருக்கித் தூய்மை செய்கை ; மனம் செல்லுகை .
ஓட்டம்பிடித்தல் தப்பி ஓடுதல் .
ஓட்டன் நடந்து செல்லும் தூதன் ; பாட்டனுக்குப் பாட்டன் .
ஓட்டாங்கச்சி சிரட்டை , தேங்காய் ஓடு ; மட்கலவோட்டின் துண்டு .
ஓட்டாங்கிளிஞ்சல் ஒருவகை மீன் ; உடைந்த சிப்பி .
ஓட்டாண்டி இரந்துண்பவன் ; பிச்சைக்காரன் .
ஓட்டாம்பாரை காண்க : ஒட்டாம்பாரை .
ஓட்டி ஓட்டுகிறவன் ; ஓட்டும்பொருள் ; பாட்டிக்குப் பாட்டி ; கொவ்வைக் கனி .
ஓட்டியம் காண்க : ஓட்டகம் .
ஓட்டிரம் ஒரு நாடு ; ஒரிசா என வழங்கும் உற்கல நாடு .
ஓட்டு ஓடுகை ; புறங்காட்டியோடுகை ; கப்பலோட்டம் ; நூலிழையோட்டுகை .
ஓட்டுக்கொடுத்தல் ஓடிவிடுதல் .
ஓட்டுத்துத்தி ஒருவகைப் பூண்டு .
ஓட்டுதல் செலுத்துதல் ; நீங்கச்செய்தல் ; புகுத்துதல் ; செய்துமுடித்தல் ; அழித்தல் ; காலந்தாழ்த்துதல் ; நூலால் இழையிடுதல் ; கட்டடத்தில் பூசிய சாந்தை வழுவழுப்பாகத் தேய்த்தல் ; கலத்தல் .
பதினோராம் உயிரெழுத்து ; வினாவெழுத்து ; விளரி என்னும் இசையின் எழுத்து ; நீக்கம் ; ஒழிவு ; சென்று தங்குகை ; மதகுநீர் தாங்கும் பலகை ; உயர்வு இழிவு சிறப்புக் குறிப்பு ; மகிழ்ச்சிக் குறிப்பு ; வியப்புக் குறிப்பு ; தெரிதல் குறிப்பு ; நினைவுக் குறிப்பு ; கொன்றை ; பிரமன் ; ஒழியிசை , வினா , சிறப்பு , எதிர்மறை , தெரிநிலை ; பிரிநிலை , ஐயம் , அசைநிலை இவற்றைக் காட்டும் ஓர் இடைச்சொல் .
ஓஒ வியப்புக் குறிப்பு .
ஓக்கம் உயர்ச்சி ; எழுச்சி ; பருமை ; பெருமை ; பெருக்கம் .
ஓக்காளம் ஓங்காளம் , வாயாலெடுத்தல் , கக்குதல் .
ஓக்காளித்தல் வாந்திக் குணமுண்டாதல் ; வாந்தி செய்தல் .
ஓக்காளிப்பு வாந்திக் குணம் .
ஓக்கியம் ஏற்றது , தகுந்தது .
ஓக்குதல் உயர்த்துதல் , எழும்பச்செய்தல் ; அறுதியிடுதல் ; தருதல் ; எறிதல் ; ஆக்குதல் .
ஓகணம் பேன் ; மூட்டைப்பூச்சி .
ஓகணி பேன் ; மூட்டைப்பூச்சி .
ஓகம் பெருங்கூட்டம் ; பெருக்கு ; வெள்ளம் ; புகலிடம் , அடைக்கலம் ; ஒரு குருவி .
ஓகாரம் ' ஓ ' என்னும் உயிரெழுத்து ; மயில் .
ஓகாரவுரு பிரணவ வடிவம் , கடவுள் .
ஓகுலம் அப்பம் .
ஓகை உவகை , மகிழ்ச்சி ; இனிய மொழி ; ஆரவாரம் ; ஆறு ; நீர்ப்பெருக்கு .
ஓகோ வியப்பு முதலிய மனநிலை காட்டும் சொல் .
ஓகோதனி ஓகணம் , மூட்டுப்பூச்சி .
ஓங்கல் உயர்ச்சி ; மேடு ; மலை ; மலையுச்சி ; எழுச்சி ; மூங்கில் ; யானை ; மரக்கலம் ; வலியோன் ; தலைவன் ; அரசன் ; வழித்தோன்றல் ; சாதகப்புள் ; ஒருவகை நீர்ப்பறவை .
ஓங்கார உப்பு கல்லுப்பு .
ஓங்காரம் பிரணவம் , ஓம் .
ஓங்காரவுரு கடவுள் ; கௌரிபாடாணம் .
ஓங்காரன் ஓங்காரவுருவன் , கடவுள் .
ஓங்காரி பிரணவப் பொருளானவள் , சக்தி .
ஓங்காரித்தல் ஓங்காரத்தை உச்சரித்தல் ; உறுக்குதல் ; வாந்தி செய்தல் .
ஓங்காளம் காண்க : ஓக்காளம் .
ஓங்கிப்பார்த்தல் உன்னிப் பார்த்தல் .
ஓங்கிப் பிடித்தல் எழும்பிப் பிடித்தல் .
ஓங்கியடித்தல் உயர்த்தித் தாக்குதல் ; பிறன் சொல்வது ஓங்காமல் மறுத்துக் கூறல் .
ஓங்கில் ஒரு கடல்மீன்வகை .
ஓங்குதல் உயர்தல் ; வளர்தல் ; பரவுதல் ; பெருமையடைதல் ; பெருகுதல் ; மேலே பறிதல் ; ஓக்காளித்தல் .
ஓங்குவித்தல் ஓங்கச்செய்தல் , உயரச்செய்தல் .
ஓச்சம் உயர்வு , புகழ் .
ஓச்சல் உயர்வு ; தளர்ச்சி .